7/07/2010

காஸா மீதான கொள்கைகளை இஸ்ரேல் மாற்றம் செய்ய வேண்டும்

இத்தாலி, பிரான்ஸ், பிரிட்டன், ஸ்பெய்ன், ஜேர்மனி கோரிக்கை


காஸா மீதான கொள்கையை இஸ்ரேல் மாற்றம் செய்ய வேண்டுமென இத்தாலி-பிரான்ஸ்-ஜேர்மனி-ஸ்பெய்ன்-பிரிட்டன் ஆகிய நாடுகள் வலியுறுத்தியுள்ளன. இதை இந்த நாடுகளின் வெளிநாட்ட மைச்சர்கள் கூட்டாக வலியுறுத்தியுள்ளனர். ஐ.நா.வின் 1860 சரத்தை அமுல்படுத்த வேண்டியதன் அவசியத்தை இந்த அமைச்சர்கள் தெளி வாக விளக்கினர்.
கடந்த வருடம் காஸா மீதான முற்று கையை இஸ்ரேல் தளர்த்த வேண்டுமென ஐ.நா.வில் பிரேரணை நிறைவேற்றப் பட்டதைச் சுட்டிக்காட்டிய இவர்கள், இஸ்ரேல் செயல்படுத்த இணங்கிய விடயங்களை டெல்எவி விரைவில் நடைமுறைக்குக் கொண்டுவரும் எனத் தாம் நம்புவதாகவும் குறிப்பிட்டனர்.
பொதுமக்களுக்குத் தேவையான பொருட் களை காஸாவுக்குள் கொண்டுசெல்ல அனுமதிக்கப்படும் என இஸ்ரேல் முன்னர் கூறியது. இதையே தாங்கள் விரை வில் நடைமுறைப்படுத்துமாறு கோருகின் றோம். ஆயுதங்கள் தவிர ஏனையவை காஸாவுக்குள் கொண்டுசெல்லப்பட வேண்டும். மின்சாரம், நீர், எரிபொருள், மருந்துப் பொருட்கள், உணவு வகைகள் என்பவற்றை காஸாவுக்கு எடுத்துச்செல்ல இஸ்ரேல் அனுமதிக்க வேண்டும் என ஐ.நா. சென்ற ஆண்டு சட்டம் நிறை வேற்றியது. இவ்விடயத்தில் இஸ்ரேல் இது வரைக்கும் கட்டுப்பாடுகளையே விதித்துவருகின்றது.
இவை உடனடியாக தளர்த்தப்பட வேண்டுமெனவும் ஐந்து நாடுகளின் வெளிநாட்டமைச்சர்கள் இணைந்து வெளியிட்ட அறிக்கையில் வலியுறுத்தியுள்ளனர். காஸா மீது இஸ் ரேல் 2006ம் ஆண்டு கடுமையான கட்டுப் பாடுகளைக் கொண்டுவந்து எல்லைகளையும் மூடியது. காஸாவின் நிர்வாகம் மேற்கு கரையிலிருந்து பிரிக்கப்பட்டு ஹமாஸின் நிர்வாகத்தின் கீழ் கொண்டுவரப்பட்ட தையடுத்தே இம்முற்றுகை ஆரம்பமானது.
இதனால் மத்திய கிழக்கு பிரச்சினை மேலும் இழுபறிக்குள்ளானது. இஸ்ரேலின் தொடர் குடியேற்றம், காஸா முற்றுகை என்பன சமாதானப் பேச்சுவார்த்தைகளுக்கு பெரும் முட்டுக்கட்டையாயுள்ளன. இதைக் கருத்தில்கொண்டே அமைச்சர்கள் இஸ்ரேலை வலியுறுத்தினர்.
 

0 commentaires :

Post a Comment