சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளுக்கு அடிபணிந்து ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிக் காலத்தில் தனியார் மயப்படுத்தியவைகளை அரசு தற்போது மீட்டெடுக்கும் பணிகளில் ஈடுபட்டு வருவதாக தகவல் மற்றும் ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளுக்கு அடிபணியவில்லை என்றும், கடந்த ஐந்து வருட காலத்திற்குள் எந்த ஒரு அரச நிறுவனத்தையும் தனியார் மயப்படுத்தவில்லை என்றும் அமைச்சர் திட்டவட்டமாக தெரிவித்தார். வரவு - செலவுத் திட்டத்தை அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தின் விருப்பத்திற்கு ஏற்ப தயாரித்துள்ளதாக எதிர்க் கட்சிகள் கூறிவரும் விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் வகையில் நேற்று விசேட செய்தியாளர் மாநாடு நடைபெற்றது. அரசாங்க தகவல் திணைக் களத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற இந்த செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல மேலும் குறிப்பிடுகையில் :- 2002 ஆம் ஆண்டு ஐ. தே. க. ஆட்சிக் காலத்தில் சமர்ப்பிக் கப்பட்ட இரண்டு வரவு - செலவுத் திட்டமானது அரசாங்க நிறுவ னங்களை தனியார் மயப்படுத்துவதற்கு முன்னுரிமை வழங்கப்பட்டதை காணக் கூடியதாக இருந்தது. இலங்கையின் பொருளாதாரம் தொடர் பாக சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி ஆகியன முன்வைத்த நிபந்தனை களுக்கு எதுவும் செல்லாது 2002ல் ஐ. தே. க. ஏற்றுக்கொண்டது. ஆனால் தற் போதைய அரசாங்கம் அந்த நிலையிலிருந்து முற்றிலும் வேறுபட்ட விதமாக செயற் படுகிறது. ஆனால், ஐ.தே.க. இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தை தனியார் மயப்படுத் தியதுடன் அரச வங்கிகள் மற்றும் பல் வேறு அரச நிறுவனங்களை தனியார் மயப்படுத்தவும் திட்டமிட்டிருந்தது. சர்வதேச நாணய நிதியம் உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி போன்றவைகள் எமது எதிரிகள் அல்ல. வெளிநாடுகளிலிருந்து நிதியை பெற்று நாட்டை அபிவிருத்தி செய்ய வேண்டும் என்ற விடயத்தில் அரசாங்கம் தெளிவாக உள்ளது. எமது பொருளாதார கட்டமைப்பு பாதிக்காத வகையில் அவர்கள் விதிக்கும் நிபந்தனைகள் அமையுமானால் நிதியை பெற்றுக் கொள்வதில் எந்த தவறும் இல்லை என்றார். அரசாங்கத்திற்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் நடந்து கொள்வதே எதிர்க் கட்சி களின் தற்போதைய தேவையாக உள்ளது. எதிர்க் கட்சியின் புதிய உறுப்பினர்கள் தொடக்கம் சிரேஷ்ட உறுப்பினர்கள் வரை இதனை ஒரு முக்கிய விடயமாக காண்பிக்க முயற்சிப்பது ஆச்சரியமாக உள்ளது என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். கடந்த காலங்களுடன் ஒப்பிடுகையில் பல்வேறு பாரிய அபிவிருத்தியை கடந்த நான்கு ஆண்டுகளுக்குள் காணக் கூடியதாக உள்ளது. சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி போன்றன உலகின் 215 நாடுகளில் நிதி செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகிறது. இலங்கையும் அதன் உறுப்பு நாடுகளில் ஒன்றாகும். அந்த அடிப்படையில் நிதியை பெற்றுக்கொள்ளும் உரிமை எமக்கும் உண்டு. இலங்கையில் என்றும் இல்லாதவாறு வெளிநாட்டு நாணயக் கையிருப்பு 6.2 மில்லியன் டொலராக உள்ளது. அத்துடன் பண வீக்கம் முதற் தடவையாக ஒற்றை இலக்கத்தில் காணக்கூடியதாக உள்ளது. நாட்டின் தனிநபரின் தலா வருமானம் 1958 முதல் 2004 வரை 68 டொலராக காணப்பட்டது. 2004இல் 1052 ஆக அதிகரித்தது. கடந்த நான்கு வருடத்திற்குள் 2053 ஆக அதிகரித்துள்ளது. இது நூறு வீத அதிகரிப்பை காண்பிக்கின்றது என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொரு ளாதார துறை சிரேஷ்ட விரிவுரையாளர் டொக்டர் ரஞ்சித் பண்டாவும் இந்த செய்தியாளர் மாநாட்டில் கந்துகொண்டார். |
7/06/2010
| 0 commentaires |
0 commentaires :
Post a Comment