7/02/2010

நேபாள பிரதமர் திடீர் ராஜினாமா

நேபாள பிரதமர் மாதவ்குமார் நேபாள், தனது பதவியை திடீரென ராஜினாமா செய்துள்ளார். நேபாளத்தில் மாவோயிஸ்டுகள் தலைமையிலான கூட்டணி தேர்தலில் வெற்றிபெற்ற பிறகு மன்னராட்சி ஒழிக்கப்பட்டது.
ஜனாதிபதியாக ராம்பரன் யாதவும், பிரதமராக பிரசாந்தாவும் தேர்வு செய்யப்பட்டனர். பிரதமரின் சொல்படி கேட்காத ராணுவ தளபதி ருங்மாங்கத கத்வாலை, பிரதமர் பிரசாந்தா பதவி நீககம் செய்தார்.
இதற்கு ஜனாதிபதி அனுமதி மறுத்தார்.
இதன் காரணமாக, பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார் பிரசாந்தா. அதன் பிறகு கம்யூனிஸ்ட், நேபாள காங்கிரஸ் உள்ளிட்ட பல கட்சிகளின் கூட்டணியுடன் கம்யூனிஸ்ட் தலைவர் மாதவ் குமார் நேபாள் பிரதமரானார். மன்னராட்சி முடிந்த பிறகு, ஜனநாயக முறையிலான அரசியலமைப்பு சட்டம் முறைப்படி இன்னும் அந்நாட்டு பாராளுமன்றத்தில் தாக்கலாகவில்லை.
விரைவில் புதிய அரசியலமைப்புச் சட்டத்தை நிறைவேற்றுவதில் சிக்கல் நீடித்தது. குறிப்பிட்ட காலத்துக்குள் இந்த அரசியலமை ப்புச் சட்டததை நிறைவேற்றாவிட்டால், மாதவ் குமார் நேபாள் பதவி விலக வேண்டும் என மாவோயிஸ்டுகள் நிர்ப்பந்தப்படுத்தி வந்தனர். தங்கள் தலைமையில் தேசிய அரசு அமைய வேண்டும் எனவும் மாவோயிஸ்டுகள் வற்புறுத்தினர்.
இதற்கு, கூட்டணியில் உள்ள சில கட்சிகள் ஒப்புக்கொள்ளவில்லை. இத னால், நேபாளத்தில் அரசியல் நெருக்கடி ஏற்பட்டது. சுமுக நிலை ஏற்படுவதற்காக தான் பதவி விலகுவதாகக் கூறி, கடந்த 13 மாதங்களக பிரதமர் பதவி வகித்த மாதவ் குமார் (57) நேற்று முன்தினம் ராஜினாமா செய்தார். இந்த தகவலை அவர் தொலைக்காட்சியில் உரையாற்றியபோது தெரிவித்தார்.

0 commentaires :

Post a Comment