நல்லிணக்க ஆணைக்குழுவுக்கு முறைப்பாடுகளை முன்வைக்க விரும்பும் பொதுமக்கள் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 18ந் திகதிக்கு முன்னர் எழுத்து மூலம் அனுப்பி வைக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், மாகாண மட்டத்தில் விசாரணைகளை நடத்தவும் நல்லிணக்க ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. விசாரணை ஆணைக்குழுக்கள் சட்டத்தின் பிரிவு 2 இன் கீழ் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்களும் நல்லிணக்கமும் பற்றிய ஆணைக்குழுவால் 2010 ஜுன் மாதத்தில் கிரமமாக கூட்டங்கள் நடாத்தப்பட்டன. பீஆணைக்குழுவின் தற்போதைய வேலைகளில் நிறுவனம்சார்ந்த விடயங்கள் மீது முதற்கட்டமாக கவனம் செலுத்தப் பட்டது. எதிர்காலத்தில் இடம்பெறும் பகிரங்க சாட்சி விசாரணைகளுக்கு வசதியாக அமையும் பொருட்டே அவ்வேலைகளில் கவனம் செலுத்தப்பட்டது. ஆணைப்பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பான எழுத்திலான முறைப்பாடுகளை ஆணைக்குழுவிடம் முன்வைக்குமாறு பொதுமக்களிடம் கோரும் மும்மொழிகளிலும் தயாரிக்கப்பட்ட அறிவித்தலொன்று செய்தி தாள்களில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. 2010 ஓகஸ்ட் மாதம் 18 ஆந் திகதி வரையில் முறைப்பாடுகளை முன்வைப்பதற்காக பொதுமக்களுக்கு கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. ஆணைக்குழுவுக்கு தமது பணிகள் தொடர்பில் வசதியாக அமையக் கூடிய விதத்தில் தாமதமின்றி தமது முறைப்பாடுகளை அனுப்பிவைக்குமாறு பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுக்கப்படுகின்றது. பொதுமக்கள் தமது முறைப்பாடுகளை முன்வைக்கும் பொருட்டு ஆணைக்குழுவுக்கு எளிதாக வரக்கூடிய வகையில் அந்தந்த மாகாணங்களில் குறிப்பாக தொடர்புபட்ட நிகழ்வுகளினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் தமது பகிரங்க கூட்டங்களை நடாத்துவதற்கு ஆணைக்குழுவினால் தீர்மானிக்கப்பட்டது. அதன் காரணமாக நிகழ்வுகள் மீது தாக்கம் செலுத்தியுள்ள பிரதேசங்களிலிருந்து ஆணைக்குழுவினால் நேரடியாகவே விடயங்களைத் திரட்டிக்கொள்ளக்கூடியதாக இருக்கும். இச்செயற்பாட்டின் ஓர் அங்கமாக ஆணைக்குழு தற்போது வேலைத்திட்ட மொன்றை வகுப்பதில் ஈடுபட்டுள்ளது. ஆணைக்குழு அதற்கு வசதி அளிப்பதற்காகவும் துணைபுரிவதற்காகவும் ஆணைக்குழுவின் முன்னிலையில் சாட்சியம் அளிக்குமாறு ஆணைப்பத்திரத்தின் வரம்பிற்கு உட்பட்ட துறைகளில் முனைப்பாக ஈடுபட்டிருந்தவர்களும் பரந்தளவிலான கருத்துக்களை பிரதிநிதித்துவப்படுத்துபவர்களான ஆட்களுக்கு அதன் சொந்த விருப்பத்தின் மீது அழைப்பு விடுக்கும். ஆணைக்குழு 2010 ஓகஸ்ட் மாதத்தில் பொதுமக்களிடம் விசாரணைகளை மேற்கொள்ள எதிர்பார்க்கின்றது. |
7/03/2010
| 0 commentaires |
0 commentaires :
Post a Comment