7/07/2010

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் எதிர்வரும் 14 ஆம் திகதி அமைச்சரவைக் கூட்டம் கிளிநொச்சியில்

கிளிநொச்சி மாவட்டத்தில் எதிர்வரும் 14 ஆம் திகதி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் ஆரம்பித்து வைக்கப்பட உள்ளதோடு மீள் குடியேற்றப்பட்ட மக்களுக்கு சைக்கிள்கள் மற்றும் உபகரணங்கள் என்பன பகிர்ந்தளிக்கப்பட உள்ளதாக வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ. சந்ரசிறி கூறினார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் எதிர்வரும் 14 ஆம் திகதி அமைச்சரவைக் கூட்டம் கிளிநொச்சியில் நடைபெற உள்ளது. இதன்போதே மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் பகிர்ந்தளிக்கப்பட உள்ளன.
கிளிநொச்சி மற்றும் பரந்தன் ஆகிய இடங்களில் இரு எரிபொருள் நிரப்பும் நிலையங்கள் அன்றைய தினம் திறந்து வைக்கப்பட உள்ளதாகவும் ஆளுநர் கூறினார். இதேவேளை 13 ஆம் திகதி சகல அமைச்சர்களினதும் பங்களிப்புடன் நடமாடும் சேவையொன்று நடத்தப்பட உள்ளது.
 

0 commentaires :

Post a Comment