6/29/2010

இணைந்த சமூகம் பிணைந்து நின்றால் எதனையும் சாதிக்கலாம்- முதல்வர் சந்திரகாந்தன்.

தமிழர், முஸ்லிம், சிஙகளவர் என்ற பாகுபாடுகளை கடந்து எமது சமூகம் ஒற்றுமையாக இணைந்து செயற்பட்டால் நாம் எதனையும் சாதிக்கலாம் என கிழக்கு மாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் குறிப்பிட்டார். நேற்று அட்டாளைச்சேனையில் மாகாண சபை மற்றும் உள்ளுராட்சி அமைச்சர் எ.எல்.எம். அதாவுல்லா அவர்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்ட வரவேற்பு நிகழ்விற்கு விசேட அதிதியாக கலந்து கொண்ட த.ம.வி.பு கட்சியின் தலைவரும் கிழக்கு மாகாண முதலமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் குறிபிடுகையில் கிழக்கு மாகாணம் பிரிக்கப்படவேண்டும் என்பதில் மிகவும் அக்கறையோடும் அதீத நம்பிக்ககையோடும் செயற்பட்ட கட்சி எமது தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியும் தேசிய காங்கரசுமே ஆகும். இக் கிழக்கு மாகாணம் இன்று எல்லோராலும் பேசப்படுகின்றமைக்கு இவ்விரு கட்சிகளினதும் தலைமை மற்றும் உறுப்பினர்கள், இக்கட்சியின் பங்காளர்கள் போராளிகள், தொண்டர்கள் அனைவருமே இதன் பங்குதாரர்கள் ஆவார். மிகவும் நீண்ட கால தூர நோக்கு சிந்தனையுடன் அன்று செயற்பட்டு இன்று எமது கிழக்கு மக்களின் தனித்துவத்தில் அக்கறைகொண்டு நாம் செயற்கின்றோம் கிழக்கு மாகாண சபை ஒன்று அமைக்கப்பட்டு இன்று இரண்டு வருடங்கள் கடந்துவிட்டாலும் எழுதப்பட்ட அதிகாரங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டாலும் கூட இன்று இருக்கின்ற அதிகாரங்களுக்குள்ளேயே நாம் எமது கிழக்கு மாகாணத்தை அபிவிருத்தி செய்து கொண்டு செல்கின்றோம். மூவின மக்களும் ஒற்றுமையுடன் வாழ்கின்றோம். மூவின அரசியல் தலைமைகளும் ஒருமித்து பேசுகின்றோம். இதற்கெல்லாம் இத்தேசிய காங்கிரசின் செயற்பாடு அளப்பரியது அப்படிப்பட்ட தலைமைக்கு பாராட்டு என்றால் நான் கிழக்கு தமிழ் மக்களின் தமிழ் தலைவன் என்ற வகையில் இதில் கலந்து கொள்வதனையிட்டு நான் பெருமையடைகின்றேன் எனவும் குறிப்பிட்டார்.
எது எவ்வாறாயினும் எமது மக்கள் எதிர் காலத்தில் அனைத்து வழிகளிலும் சிறப்பாகச் செயற்பட்டு சிறுபான்;மைச் சமூகத்தின் அரசியல் தலைவர்கள் என்ற வகையில் ஒருமித்துச் செயற்பட வேண்டும் அப்போதுதான் நாம் நினைத்தவற்றை சாதகமான அனுபவங்களை எம்மால் அடைய முடியும் எனவும் குறிப்பிட்டார்.
இந்நிகழ்வில் அட்டாளைச்சேனை விவசாய சங்கத்தால் முதல்வருக்கு தங்கப்பதக்கம் வழங்கி கௌரவிக்கப்பட்டது. மாகாண அமைச்சர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

0 commentaires :

Post a Comment