ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர உறுப்பினர் பதவி அளிப்பதற்கு பிரி ட்டன், பிரான்ஸ் நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. ஜி-20 உச்சி மாநாடு கனடாவின் டொரண்டோ நகரில் நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் பங்கேற்பத ற்காக பிரதமர் மன்மோகன் சிங் டொரண்டோ வந்துள்ளார். மாநாட்டையொட்டி சனிக்கிழமை இரவு நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரிட்டனின் புதிய பிரதமர் டேவிட் கேமரூன், பிரான்ஸ் அதிபர் நிக் கோலஸ் சர்கோஸி ஆகியோரை பிரதமர் மன்மோகன் சிங் சந்தித்துப் பேசினார். ஜுலையில் பிரிட்டன் பிரதமர் இந்தியா வருகை : பிரிட்டனின் பிரதமராக கேமரூன் பதவியேற்ற பிறகு அவரை பிரதமர் மன்மோகன் சிங் இப்போது தான் முதல் தடவையாக சந்தித்துள்ளார். மேலும் இந்தியாவுக்கு வருமாறு கேமரூனுக்கு அழைப்பு விடுத்தார் பிரதமர். பிரதமரின் அழைப்பை ஏற்று ஜுலையில் இந்தியா வருவ தாக கேமரூன் உறுதி அளித்துள்ளார். உயர் கல்வி பயில்வதற்காக கூடுதல் எண்ணிக்கையில் இந்திய மாண வர்கள் பிரிட்டன் வரவேண்டும் என்று பிரதமர் கேமரூன் அழைப்பு விடுத்தார். பின்னர் இருவரும் ஜி 20 உச்சி மாநாடு குறித்து தங்களது கருத்துகளை பரிமாறிக் கொண் டனர். ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர உறுப்பினர் பதவி அளிப்பது தொடர்பாக பிரிட்டன் ஆதரவு அளிக்கும் என்று அப்போது மன் மோகன் சிங்கிடம் கேமரூன் உறுதி அளித்தார். பின்னர் பிரான்ஸ் ஜனாதிபதி நிக்கோலஸ் சர்கோஸியை, பிரதமர் மன்மோகன் சிங் சந்தித்துப் பேசி னார். அதிபர் சர்கோஸி, அவரது மனைவி கர்லா புரூனி ஆகியோர் மீண்டும் இந்தியாவுக்கு வர வேண்டும் என்று பிரதமர் மன் மோகன் சிங் அழைப்பு விடுத்தார். ஜி 20 உச்சி மாநாடு மட்டுமல்லா மல், உலக விவகாரங்களில் இந்தியா முக்கியமான பங்கை ஆற்ற வேண்டும் என்று பிரான்ஸ் விரும்புவதாக பிரதமர் மன்மோகன் சிங்கிடம் சர்கோஸி தெரிவித்தார். ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர உறுப்பினர் பதவியைப் பெற்றுத் தர பிரான்ஸ் ஆதரவு அளிக்கும் என்றார் அவர். இந்தியாவுடன் வர்த்தகத்தில் ஈடுபட்டிருக்கும் ஐரோப்பிய நாடுகளில் பிரான்ஸ் 5 வது இடத்தைப் பிடித்துள்ளது குறிப்பிட த்தக்கது. |
6/29/2010
| 0 commentaires |
0 commentaires :
Post a Comment