6/23/2010

மட்டக்களப்பில் புதிய கல்வி வலயம் தாபிப்பது தொடர்பான விசேட கலந்துரையாடல்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது இருக்கின்ற நான்கு கல்வி வலயத்திற்கு மேலாக படுவான்கரை பிரதேசங்களை உள்ளடக்கி இருக்கின்ற பாடசாலைகளை உள்ளடக்கியதாக கல்வி வலயம் ஒன்றை அமைப்பது தொடர்பான பூர்வாங்க நடவடிக்கைகளை கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் மேற்கொண்டு வருகின்றார். அவற்றின் இறுதிக்கட்ட பணிகள் நடந்தகொண்டிருக்கின்ற சந்தர்ப்பத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தின் வலயக்கல்வி பணிப்பாளர்களுடன் விசேட கலந்துரையாடல் ஒன்றை இன்று முதலமைச்சரின் மட்டக்களப்பு வாசஸ்த்தலத்தில் நடாத்தினார் இதன்போது புதிதாக அமைக்கப்பட இருக்கின்ற கல்வி வலயத்திற்கான பெயர் ஆரம்பத்தில் படுவான்கரை கல்வி வலயம் என குறிப்பிடப்பட்டு இருந்தது ஆனால் தற்போது அப்பெயரானது மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயம் என விதப்புரை செய்யப்பட்டுள்ளது. இதற்கமைவாக 63 பாடசாலைகளை உள்ளடக்கிய இப்புதிய கல்வி வலயத்தின் வலயக்கல்வி அலுவலகமானது தாண்டியடியில் அமைப்பது தொடர்பாகவும் அனுமானிக்கப்பட்டது. இவ் விசேட கலந்துரையாடலில் மட்டக்களப்பு வலயக்கல்வி பணிப்பாளர் போல், கல்குடா வலயக்கல்வி பணிப்பாளர் சுபாச்சக்கரவர்த்தி, பட்டிருப்பு வலயக்கல்வி பணிப்பாளர் திரமதி பவளகாந்தன் மற்றும் மாகாண சபை உறுப்பினர் பூ. பிரசாந்தன், இணைப்புச் செயலாளர் தவேந்திரராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.

0 commentaires :

Post a Comment