6/09/2010

இஸ்ரேலுக்கெதிராக பிராந்திய மாநாட்டைக் கூட்ட துருக்கி முயற்சி ரஷ்யப் பிரதமர், ஆப்கான், ஈரான், சிரிய ஜனாதிபதிகளுடனும் பேச்சுவார்த்தை

காஸா நிவாரணக் கப்பல் தாக்கப் பட்டமை தொடர்பாக பிராந்திய மாநாட்டைக் கூட்டி இஸ்ரேலுக்கு அழுத்தம் கொடுக்கும் முயற்சிகளில் துருக்கி இறங்கியுள்ளது. விரிவான விசாரணைக்கு இணங்குமாறு ஐ. நா. விடுத்த வேண்டுகோளை இஸ்ரேல் ஏற்னவே நிராகரித்துள்ள நிலையில் துருக்கி இவ்வாறான முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. துருக்கியப் பிரதமர் தையிப் எடோர்கன் கூறியதாவது :-
என்னவாகினும் இஸ்ரேல் மீது அழுத்தம் பிரயோகிக்கப்படுவதற்கான முயற்சிகளை மேற்கொள்வோம். கப்பல்கள் தாக்கப்பட்டதற்கான பொறுப்பையும் விளைவையும் இஸ்ரேலே பொறுப்பேற்க வேண்டுமெனத் தெரிவித்தார். ரஷ்யப் பிரதமர் விளாதிமிர் புட்டினை துருக்கியப் பிரதமர் தையிப் எடோர்கன் செவ்வாய்க்கிழமை சந்தித்தார்.
இதற்கு முன்னர் ஆப்கான், ஈரான், சிரியா ஆகிய நாடுகளின் ஜனாதிபதிகளை திங்கட்கிழமை சந்தித்த தையிப் எடோர்கன் இஸ்ரேலின் நடவடிக்கை களை எவ்வாறு தண்டிப்பதென்பது பற்றிக் கலந்துரையாடினார். ரஷ்யப் பிரதமருடனான சந்திப்பின் போது இஸ்ரேலின் முக்கிய உயரதிகாரி ஒருவரும் கலந்துகொண்டார்.
பக்கச் சார்பற்ற விசாரணைகளை நடத்த வேண்டுமென்பதில் துருக்கி விடாப்பிடியாக உள்ளது. விளைவுகளையும், பொறுப்புகளையும் சரியான முறையில் இஸ்ரேல் ஏற்றுக் கொள்ளவில்லை என்றால் இஸ்ரேலை மன்னிக்கப் போவதில்லையென துருக்கிய ஜனாதிபதி அப்துல்லா கல் கூறியதாக ஜனாதிபதி செயலகத்தை மேற்கோள் காட்டி செய்திகள் வெளியாகின.
 

0 commentaires :

Post a Comment