6/04/2010

இலங்கையின் சுபீட்சமான எதிர்காலத்துக்கு சீனக்குடியரசின் ஒத்துழைப்பு பெற்றுத்தரப்படும் தூதுவர் யாங் க்ஷியூபிங்


பல்வேறு சவால்களுக்கு முகம்கொடுத்துக்கொண்டு இலங்கை அரசு அதன் மக்களின் சுபீட்சமான எதிர்காலத்திற்காக மேற்கொள்ளும் அபிவிருத்திப் பணிகளுக்கு மக்கள் சீனக்குடியரசின் பூரண ஒத்துழைப்பு பெற்றுத்தரப்படுமென்று இலங்கைக்கான சீனத்தூதுவர் யாங் க்ஷியூபிங் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் தீர்க்கதரிசனமிக்க செயற்பாடுகள் உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளதாகவும், பாராட்டைப் பெற்றுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ள சீனத் தூதுவர், அதற்காக தமது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்வதாகவும் கூறினார்.
அரச முகாமைத்துவ மறுசீரமைப்பு அமைச்சர் ரத்னசிறி விக்கிரமநாயக்கவைச் சந்தித்த போதே சீனத் தூதுவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். பத்தரமுல்லை, பெலவத்தையில் அமைந்துள்ள அமைச்சிலேயே இந்தச் சந்திப்பு நேற்றுமுன்தினம் நடைபெற்றது. “கடந்த காலங் களில் அழிவுகரமான சம்பவங் களுக்கு முகங்கொடுக்க வேண்டிய நிலை இலங்கை அரசுக்கு ஏற்பட்டது.
எனினும் அரசாங்கம் தெளிவான செயற்பாட்டுடன் முன்னோக்கிச் சென்றமை பாராட் டத்தக்கது. இது தொடர்பில் சீன அரசாங்கம் விசேட கவனம் செலுத்தியுள்ளது” என்று தெரிவித்த சீனத் தூதுவர், இதுவரை ஆரம் பிக்கப்பட்டுள்ள பாரிய அபி விருத்திப் பணிகளுக்கு இயன்ற அனைத்து ஒத்துழைப்புகளையும் பெற்றுத்தர சீனா தயாராக உள்ள தாகவும் கூறினார்.
சீன அரசின் முக்கியஸ்தர்கள் விரைவில் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளனர். அதன்போது இந் நாட்டு முக்கியஸ்தர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி அபிவிருத்திப் பணிகளுக்கு உதவுவது பற்றி ஆராயப்படும் என்றும் அவர் குறிப் பிட்டார்.
தற்போதைய அமைச்சரவை தொடர்பாகக் கேட்டறிந்துகொண்ட சீனத் தூதுவர், அரச முகாமைத்துவ அமைச்சின் பொறுப்புகள் பற்றியும் கேட்டறிந்துகொண்டார். இதுபற்றி விளக்கமளித்த அமைச்சர் ரத்னசிறி விக்கிரமநாயக்க, இலங்கையை ஆசியாவின் அற்புத நாடாக மாற்றும் ஜனாதிபதியின் செயற் திட்டத்திற்குப் பூரணமான பங் களிப்பைச் செய்வதாகத் தெரி வித்தார்.

0 commentaires :

Post a Comment