6/16/2010

மாவோயிஸ்ட் பிரச்னைக்கு மத்திய அரசுகளே காரணம்: மாயாவதி

 


  : தொடர்ந்து வந்த மத்திய அரசுகளின் தவறான சமூக-பொருளாதர கொள்கைகளே மக்களை மாவோயிஸ்ட்களாக மாற்றியுள்ளது என்று உத்தர பிரதேசத்தின் முதல்வர் மாயாவதி கூறியுள்ளார்.   சுதந்திரத்துக்குப் பின் ஆட்சி புரிந்த காங்கிரஸ்,பா.ஜ.க, மற்றும் இதர கட்சிகள் தவறான சமூக-பொருளாதர கொள்கைகளே கொண்டுள்ளன. இதனாலே ஏழை மக்கள்கள் தங்களின் நியாயங்களுக்காக வன்முறை பாதையை தேர்ந்தெடுக்க வேண்டியதாகிப் போனது. ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தவறான கொள்கைகளே தற்போது நிலவும் கடுமையான விலையேற்றத்துக்கு காரணமாகும்.பெட்ரோல், டீசல் விலைகளை ஏற்றுவதன் மூலம் மத்திய அரசு விலை உயர்வு பிரச்சனையை முக்கியமானதாக கருதவில்லை என்பது தெளிவாகிறது.   நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில், மக்களின் வாக்குகளை பெறவே ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு அப்போது பெட்ரோல், டீசல் விலைகளை ஏற்றவில்லை. ஆனால், ஆட்சிக்கு வந்தவுடன் விலைகளை ஏற்றிவிட்டது. பெரிய கட்சிகளான காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க தங்களின் பொதுக்கூட்டங்களுக்கும், தேர்தல் செவுகளுக்கும் பெரிய நிறுவனங்களிடமிருந்து பணத்தை பெறுகின்றன. ஆட்சிக்கு வந்தப் பின், அத்தொகையை திரும்ப தருகின்றன என்றும் அவர் கூறினார்.மே.வங்கம், பிகார் தேர்தல்களில் பி.எஸ்.பி தனித்துப் போட்டி: நடைபெறவுள்ள பிகார், மேற்கு வங்கம், ஒரிசா மற்றும் ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல்களில் பகுஜன் சமாஜ்வாதிக் கட்சி தனித்து நின்று போட்டியிடும் என்றும் அவர் கூறினார்.   பிகாரில் உள்ள கட்சித் தொண்டர்களிடம், உத்தர பிரதேசத்தில் உள்ளது போல அனைத்து சாதியினரையும் ஒன்றிணைத்து தேர்தலை சந்திக்க வேண்டும் என்று அவர் கூறினார். கட்சியின் கொள்கையை அடிதட்டு மக்களிடம் சென்று விளக்க வேண்டும் என்று கூறினார். உத்திர பிரதேசத்தில் ஆட்சிக்கு வந்த பின் நடைபெற்ற பல இடைத் தேர்தல்களில் சமாஜ்வாதிக் கட்சியிடமிருந்து, பல தொகுதிகளை பகுஜன் சமாஜ்வாதிக் கட்சி தன் வசமாக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

0 commentaires :

Post a Comment