ஆசிய பாதுகாப்பு உச்சி மாநாடு இன்று 4ஆம் திகதி முதல் எதிர்வரும் 6ஆம் திகதி வரை சிங்கப்பூரில் நடைபெறுகிறது. இந்த உச்சி மாநாடுக்கு செல்லும் இலங்கை தூதுக்குழுவுக்கு வெளியுறவு அலுவல்கள் அமைச்சர் ஜீ. எல். பீரிஸ் தலைமைதாங்குகிறார்.
பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரியும் விமானப் படை தளபதியுமான எயார் சீப் மார்ஷல் ரொஷான் குணதிலக, இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஜகத் ஜயசூரிய ஆகியோரும் இலங்கை தூதுக்குழுவில் இடம் பெறுகின்றனர்.
லண்டனில் உள்ள சர்வதேச தந்திரோபாய கற்கை நிறுவனம் வருடாந்தம் ஆசிய பாதுகாப்பு உச்சி மாநாட்டை நடத்தி வருகிறது. இந்த வரிசையில் சிங்கப்பூரில் இன்று ஆரம்பமாவது 9 ஆவது உச்சி மாநாடாகும். 2002 ஆம் ஆண்டு முதல் வருடாந்தம் இந்த உச்சி மாநாடு இடம்பெறுகிறது.
ஆசிய பசுபிக் நாடுகளின் பாதுகாப்பு அமைச்சர்கள் இந்த உச்சி மாநாட்டில் ஒன்றுகூடி நம்பிக்கையை கட்டியெழுப்பும் மற்றும் தமக்கிடையிலான பாதுகாப்பு கூட்டுறவு செயற்பாடுகளை வளர்த்துக்கொ ள்ள ஒரு அமைப்பாக இது உரு வாக்கப்பட்டுள்ளது.
இந்த உச்சி மாநாட்டில் கலந்துகொள்ளும் இலங்கைக் குழுவுக்கு தலைமைதாங்கும் வெளியுறவு அலுவல்கள் அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் அங்கு ‘கிளர்ச்சி எதிர்ப்பு மற்றும் ஆளுமையை வலுப்படுத்தல்- புலி பயங்கரவாதிகள் முன்னர் தம்வசம் வைத்திருந்த பிரதேசங்களின் கட்டுப்பாட்டை மீள் உறுதிப்படுத்தும் சவால் மற்றும் ஆளுமைபற்றிய இலங்கை அனுபவம்’ என்ற பொருளில் உரையாற்றுவார்.
உச்ச மாநாட்டின் பின்னர் அமைச்சர் பீரிஸ் பிரிட்டிஷ் மற்றும் அமெரிக்க பாதுகாப்பு செயலாளர்களை சந்தித்து இலங்கையின் தற்போதைய நிலை பற்றி விளக்குவார் என தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன் சிங்கப்பூரின் கல்வி அமைச்சர், பாதுகாப்புக்கான இரண்டாவது அமைச்சர் மற்றும் சிங்கப்பூரின பதில் சட்ட மா அதிபர் ஆகியோரையும் அமைச்சர் பீரிஸ் சந்தித்து பேசவுள்ளார்.
அவுஸ்திரேலியா, பங்களாதேஷ், ஜப்பான், லாகோஸ், மலேஷியா, மொஸ்கோலியா, மியன்மார், நியூசி லாந்து, பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ், தென்கொரியா, ரஷ்யா, சிங்கப்பூர், இல ங்கை, தாய்லாந்து, திமோர் லெஸ்ட், பிரிட்டன், அமெரிக்கா மற்றும் வியட் னாம் ஆசிய நாடுகளில் இருந்து பாது காப்பு துறைக்கு பொறுப்பானவர்கள் ஆசிய பாதுகாப்பு உச்சி மாநாட்டில் கலந்துகொள்கின்றனர்.
0 commentaires :
Post a Comment