தேசிய இளைஞர் சேவைகள் மன்றத் தினால் நடாத்தப்பட்ட மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் விளையாட்டு விழாவின் மட்டக்களப்பு மாவட்ட உதைபந்தாட்ட சம்பியனாக மண்முனை வடக்கு பிரதேச இளைஞர் கழகம் தெரிவு செய்யப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் விளையாட்டு விழாவின் உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி காத்தான்குடி ஹிஸ்புல்லா விளையாட்டு மைதானத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று நடைபெற்றது.
இவ் உதைபந்தாட்ட சுற்றுப் போட்டியில் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள வாகரை, வெல்லாவெளி உட்பட 7 பிரதேச இளைஞர் உதைபந்தாட்ட அணிகள் பங்கு கொண்டன. இச்சுற்றுப் போட்டியின் இறுதிப் போட்டியில் காத்தான்குடிப் பிரதேச இளைஞர் கழகத்தை எதிர்த்து மன்முனை வடக்கு பிரதேச இளைஞர் அணி மோதியது.
இதில் மண்முனை வடக்கு பிரதேச இளைஞர் அணி ஒரு கோலை புகுத்தி வெற்றியீட்டி சம்பியனாகியது.
0 commentaires :
Post a Comment