6/10/2010

ஜனாதிபதி மஹிந்த - மன்மோகன் சந்திப்பு ஏழு உடன்படிக்கைகளும் நேற்று கைச்சாத்து

மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற் கொண்டு இந்தியா சென்றுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு நேற்று இந்திய ஜனாதிபதி மாளி கையான ராஜ்டிரபதிபவனில் மகத்தான வரவேற் பளிக்கப்பட்டுள்ளது.
ராஷ்டிரபதிபவனை நேற்றுக் காலை சென்ற டைந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு இந்திய ஜனாதிபதி திருமதி பிரதீபா பட்டேல் பிரதமர் கலா நிதி மன்மோகன்சிங் ஆகியோரினால் உற்சாக வரவேற்பளிக்கப்பட்டதுடன் இலங்கை ஜனாதிபதி யின் வருகையைக் கெளரவிக்கும் வகையில் முப்ப டைகளினதும் அணிவகுப்பு மரியாதையுடன் 21 பீரங்கி வேட்டுக்களும் தீர்க்கப்பட்டுள்ளன.
அதனையடுத்து இரு நாடுகளினதும் தேசிய கீதங்கள் இசைக்கப்பட்டு இரு நாடுகளினதும் நட் புறவைப் பிரதிபலிக்கும் வகையில் விசேட வைபவ மொன்றும் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.
இவ்வைபவத்தின் போது இந்திய ஜனாதிபதி திருமதி பிரதீபாபட்டேல், இந்திய ராஜதந்திரிகள் மற்றும் அரச உயர்மட்ட அதிகாரிகளையும் ஜனா திபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு அறிமுகப்படுத்தி வைத்ததுடன் ஜனாதிபதி தலைமையிலான இல ங்கை தூதுக்குழுவும் அறிமுகப்படுத்தி வைக்கப்பட் டது.
நேற்றைய தினம் மகாத்மா காந்தியின் உருவச் சிலைக்கு மரியாதை செலுத்தும் நிகழ்வில் கலந்து கொண்ட ஜனாதிபதி அதனையடுத்து பிற்பகல் இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்குடன் இரு தரப்புப் பேச்சுவார்த்தையையும் மேற்கொண்டார்.
ஜனாதிபதியுடனான இந்திய விஜயத்தில் வெளி விவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ் அமைச்சர்கள் டக்ளஸ் தேவானந்தா, கெஹெலிய ரம்புக்வெல்ல, பாராளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தன, ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, நிதியமைச்சின் செயலாளர் பி. பி. ஜயசுந்தர உட்பட பல அமைச்சர்களின் செயலாள ர்களும் இணைந்து கொண்டுள்ளனர்.
இந்தியாவுக்கும் இலங்கைக்குமிடையே பொருளாதாரம், சமூகத்துறை, நீதித்துறை, மகளிர் விவகாரம், மின்சாரம், போக்குவரத்து ஆகிய துறைகளுடன் சம்பந்தப்பட்ட ஏழு உடன்படிக்கைகள் நேற்று கைச்சாத்திடப்பட்டன.

0 commentaires :

Post a Comment