6/25/2010

பாசிக்குடாவில் உல்லாச ஹோட்டல் : அடிக்கல் நாட்டினார் பசில்

 
  மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பாசிக்குடா பகுதிக்கு, நேற்று முன் தினம் விஜயம் மேற்கொண்ட அமைச்சர் பசில் ராஜபக்ஷ, அங்கு உல்லாச ஹோட்டல் ஒன்றை நிர்மாணிப்பதற்கான அடிக்கலை நாட்டி வைத்தார்.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த அமைச்சர் விநாயக மூர்த்தி முரளிதரன் கூறுகையில்,

"பாசிக்குடா பகுதி அபிவிருத்தி செய்யப்பட இருக்கிறது. பாசிக்குடா பகுதியில் அரச தரப்பில் அமைக்கப்படும் முதலாவது ஹோட்டல் இது. 5 வருடங்களில் இதனூடாக 10,000 பேர் வரை வேலைவாய்ப்பைப் பெறக்கூடியதாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

இங்கு பாடசாலைகள், மற்றும் பொது கட்டிடங்கள் என்பனவும் அமைக்கப்படவுள்ளன" என்றார்.

கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுறை சந்திரகாந்தன் கருத்து தெரிவிக்கையில்,

"கிழக்கு மாகாணம் என்பது சுற்றுலாத்துறைக்கு முக்கிய வாய்ந்தது. எனவே சுற்றுலாத்துறையை அபிவிருத்தி செய்யும் நோக்கில் பாசிக்குடா பகுதியில் ஹோட்டலுக்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.

அந்த வகையில் எதிர்காலத்தில் பாசிக்குடா பிரதேசம் வெளிநாட்டு மக்களைக் கவரும் ஒரு பிரதேசமாக மாறும் என்பதில் ஐயமில்லை.இது கிழக்கு மாகாண மக்களுக்கு சுயதொழிலில் அபிவிருத்தியைக் காணக்கூடியதாகவும் அமையும்" என்றார். பசில் ராஜபக்ஷ

"கிழக்கு மாகாணம் பல அரிய வளங்களைக் கொண்டது என்ற வகையில், பாசிக்குடா பகுதியில் முதன் முறையாக அரச தரப்பில் இவ்வாறான ஒரு ஹோட்டல் அமைக்கப்படுகிறது. தனியார் துறையினருடன் இணைந்து இந்த ஹோட்டலை அமைக்க சுற்றுலாத்துறை ஒத்துழைப்பு வழங்குகிறது.

இதனால் 2500 இளைஞர் யுவதிகள் உடனடி வேலைவாய்ப்புப் பெறுவர்

0 commentaires :

Post a Comment