நாலு சாதி மனிதரும் சேர்ந்து நடந்தால் நல்ல மழை பெய்துலகு உயர்ந்து வாழுமே
சின்னவப் புலவர் (1877 -1966) (அம்பாரைக் கொலனி-கும்மிப் பாடல்கள்)
மீன்பாடும் தேன் நாடாம் மட்டக்களப்பின் முகவரிகளில் ஒருவராகத் திகழ்ந்த பிரபல சமூக சேவகரும் முன்னாள் அட்டாளைசேனை ஆசிரியர் பயிற்சிக்கலாசாலை மட்டக்களப்பு அரசினர் ஆசிரிய கலாசாலை ஆகியவற்றில் அழகியற்கலை (Fine Arts ) விரிவுரையாளராக பணியாற்றி, பின்னர் மட்டக்களப்பு அரசினர் ஆசிரியர் கலாசாலையில் நீன்ட காலம் பிரதி அதிபராகவும் சிறிது காலம் அதிபராகவும் பதவியுயர்வு பெற்று ஓய்வு பெற்ற பிரபல ஓவியர் கலாபூஷனம் அல் ஹாஜ் ஜனாப் முஹமது ஷா முஹமது அசீஸ் (சமாதான நீதவான்)சென்ற வியாழக்கிழமை (17 ஜூன் 2010) இலண்டனில் தனது 89 வயதில் காலமானார் என்ற செய்தி ஒரு துணிச்சலான சமூக பணியாளரின் மரனம் ஒரு நிகழ்வு மட்டுமல்ல; அதற்கப்பால் அவர் வாழ்ந்த சமூகத்தின் கண்ணாடியாக திகழ்கிறது என்ற வகையில் ஒரு நினைவு கூரத்தக்க, பதிவு செய்யப்பட வேன்டிய வரலாறு. அவரது சமூகம் சார்ந்த பனிகளை இந்த குறிப்புரை இங்கு பதிவுசெய்கிறது.
இவர் மட்டக்களப்பு அம்பாரை பிரஜைகள் குழு (Citizen Committee) உறுப்பினராகவும் அதன் தலைவராகவும் பல வருடங்கள் 1980 களில் பணியாற்றியதுடன் இந்திய சமாதானப்படையினர் இலங்கையில் கிழக்கில் நிலை கொண்டிருந்தபோதும் அதற்கு முன்னரும் பின்னரும் இலங்கை இராணுவத்தினரின் கெடுபிடிகளுக்கும் மத்தியில் நடு நிலையாக செயற்பட்டு மட்டக்களப்பு வாழ் தமிழ் முஸ்லிம் மக்களின் பல்வேறு பட்ட சமூகப்பிரச்சனைகளை தீர்ப்பதில் முன்னின்று உழைத்தவர். இவரது நேர்மையான நெஞ்சுறுதிகொன்ட பனியை பாராட்டி மட்டக்களப்பில் இந்திய படையினரின் பொறுப்பாளராகவிருந்த இந்திய இராணுவத்தில் உயர் நிலை பதவி வகித்து இன்று ஓய்வு பெற்ற பின்னர் உலக அரசியல் இராணுவ நடவடிக்கைகள் குறித்து ஆய்வுக்கட்டுரைகள் எழுதியும் வானொலி காணொலி ஊடகஙகளுக்கு கருத்துரைகள் வழங்கியும் வரும் மேஜர் ஜெனரல் ஏ.கே. மெஹ்தா இவர் வரைந்து வழங்கிய ஓவியத்துக்காக அதனை பாராட்டி வெள்ளி வாள் ஒன்றினை பரிசாக வழங்கினார். மேலும் இந்திய சமாதானப்படை இலங்கையை விட்டு செல்ல முன்னர் ஜனாப் அசீஸுக்கு தனிப்பட்ட முறையில் 15 மார்கழி மாதம் 1990ம் ஆண்டு ஒரு கடிதம் அனுப்பியிருந்தார். அந்த கடிதத்தில் சமூக நல்லுறவினை சட்ட ஒழுங்கை பேண இவர் ஒத்தாசை புரிந்ததனை விரிவாக பாராட்டி பின்வருமாறு தனது கடிததினை மெஹ்தா முடித்திருந்தார்.
விரைவில் நாங்கள் எங்களது நாட்டுக்கு செல்வோம், அத்துடன் அற்புதமான அம்பாரை மட்டக்களப்பு மாவட்ட மக்களின் அதிக மகிழ்ச்சிதரும் நினைவுகளை சுமந்து செல்வோம். நாங்கள் உங்களின் விருந்தோம்பலினாலும் சிரத்தையினாலும் மனம் நெகிழ்ந்துளோம். இலங்கை மக்களின் ஷேமத்திற்கும் தொடர்சியான மகிழ்வுக்கும் சமூக நல்லுறவுக்கும் வடகிழக்கு மாகானங்களில் அமைதிக்கும் நாங்கள் கடவுளை பிரார்த்திக்கிறோம்.
(Soon we shall depart for our shores and we shall carry many happy memories with us of the wonderful people of Batticaloa and amparai districts. We were overwhelmed by your hospitality and consideration for us. We pray to God for the well being of the people of Sri Lanka and for the continued happiness , communal harmony and peace in the North Eastern province.”)
இலங்கை பத்திரிகைகளில் இஸ்லாமிய எழுத்தனிக்கலை கட்டடக்கலை இஸ்லாமிய சித்திரங்கள் பற்றி பல கட்டுரைகளையும் எழுதியுள்ளார். இவர் மட்டக்களப்பு கோட்டமுனை பள்ளிவாசலின் பிரதான நம்பிக்கை பொறுப்பாளராகவும் இருந்துள்ளார். இவரது இளமை வாழ்க்கை பற்றிய சம்பவங்களை பிரபல கிழக்கின் நாவல் எழுத்தாளரான முன்னாள் அரச அதிபரான ஜனாப் ஷெரிஃப் (ஜுனைதா ஷெரிஃப்) பதிவிலிட்டுள்ளமை இஙுகு குறிப்பிடத்தக்கது. இக்குறிப்புக்களில் சிலவற்றை இங்கு குறிப்பிட்டே ஆகவேன்டும்.
இவரின் தந்தை மட்டக்கள்ப்பில் கலால் வரி உத்தியோகத்தராக (Excise Officer) பனியாற்றியவர். இவர் தனது கல்லூரிக்காலங்களில் மட்டக்களப்பு மத்திய கல்லூரி மாணவப் பீராயத்தில் “யுவன்” எனும் அச்சுபிரதி சஞ்சிகை ஒன்றையும் “இளைஜன்” எனும் கையெழுத்து சஞ்சிகையொன்றயும் சிலகாலமாக நடத்தியுள்ளார் என்றும்; இலங்கை வானொலியில் முஸ்லிம் சேவையை ஸேர். ராஷிக் ஃபரீட் அவர்களின் மூலமாக உருவாவதற்கு காரனமான சிலரில் இவரும் ஒருவராகும் என்பதும் இவர் சொழும்பில் லேக் கவுஸ் பத்திரிக்கையான தினகரன் பத்திரிக்கையில் ஓவியராகவும் பணியாற்றியுள்ளார். அக்காலகட்டங்களில் இலங்கை வானொலியில் பல வானொலி நாடகங்களில் மறைந்த பேராசிரியர் கைலாசபதி, பேராசிரியர் நந்தி போன்றோருடன் வானொலி நாடகங்களுக்கு குரல் கொடுத்துள்ளார் என்றும் முன்னாள் மட்டக்களப்பு எம்.பீயும் இந்து கலாச்சார அமைச்சராகவிருந்த சொல்லின் செல்வர் செல்லையா இராஜதுரை போன்ற தனது நண்பர்களுடன் சேர்ந்து முதன் முதலில் தமிழரசுக்கட்சியினை கிழக்கிலே மட்டக்களப்பில் காலூன்ற துனைபுரிந்த அரசியல் பின்னனி இவருக்குன்டு. மேலும் இவரே கிழக்கிலிருந்து சென்று யாழ் மகாஜனக் கல்லூரியில் தமிழரசுக்கட்சி பிரசாரகூட்டத்தில் பேசிய முதல் முஸ்லிம் முக்கியஸ்தராகும். இவர் எஸ்.ஜே வி .செல்வனாயகம் (தந்தை செல்வா) மற்றும் பல முக்கிய தமிழரசுக்கட்சியின் தலைவர்களூடன் ஆரம்பகாலத்தில் தமது சமகால பள்ளிக்கூட நண்பர் ராஜதுரையுடன் சேர்ந்து அரசியல் செய்தபோதும் சுதந்திரன் பத்திரிக்கையில் ஒரு ஓவியராக நியமிக்க இவர் போட்ட விண்ணப்பத்தை எஸ்.ஜே வி .செல்வனாயகம் மறுத்துவிட்டார் என்பதும் இன்கு குறிபிடத்தக்கது.
முன்னாள் இலங்கை பிரதமரான தஹா நாயக்கா, ஜே .ஆர் ஜயவர்த்தனா போன்ற பல பிரபல அரசியல் வாதிகளின் ஒவியங்களை வரைந்து அவர்களிடம் கையளித்துள்ளார். இவர் முன்னாள் பிரதமர் நேருஜி இலங்கை வந்தபோது அவரின் ஓவியத்தை வரைந்து இலங்கை பிரதமர் எஸ்.டப்ளியூ,.பன்டாரனாயகா முன்னிலையில் கையளித்த்வர். 1995ம் ஆன்டு இவரது ஓவியப்பனியை பாராட்டி இலங்கை அரசு இவருக்கு கலாபூஷன விருது வழங்கியது.
இவரின் பரந்துபட்ட இஸ்லாமிய ஓவியக்கலை ஆறிவும் ஆற்றலும் இவர் வெளியிட்ட இஸ்லாமியக்கலை எனும் நூலில் துலங்கியது. இன்னூல் உலகின் பலபாகங்களிலும் எவ்வாறு இஸ்லாமிய ஓவியம் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்பதை சுருக்கமாக ஆனால் ஆழமாக மதிப்பீடு செய்கிறது.இன்னூலின் இன்னுமொரு விஷேடமான அம்சம் என்னவெனில் இன்னூலுக்கு அணிந்துரை எழுதியவர்கள் இருவருமே இவரின் இரன்டு முன்னாள் ஆசிரிய மாணவர்களான இரா.தெய்வராஜன் (மட்டக்களப்பு) நவம் ஆகியோர். முன்னுரையே எழுதாமல் அணிந்துரை மூலமே அவரின் ஓவியத்திறனை அடையாளம் காட்டிய நூல் இது.
இந்திய சமாதானப்படை இலங்கையில் இருந்தபோது ஒரு தடவை இவர் இந்திய “தூரதர்ஷன்” தொலைக்காட்சிக்கு நேர்கானல் அளித்தபோது இவர் வெளிப்படுத்திய கருத்துக்கள் குறித்து புலிகளின் தலைவர் பிரபாகரன் அதிருப்திற்றதாகவும் அதுபற்றி அவரை மட்டக்களப்பு புலிகள் விசாரித்ததாகவும் அவர்களுக்கு தகுந்த விளக்கம் அளித்து தனது கருத்தினை வலியுறுத்தியதாகவும் அவர் என்னிடம் கூறியது அவரது நேர்மையையும் துணிச்சலையும் காட்டுகிறது. மட்டக்களப்பு தமிழ் முஸ்லிம் மக்கள் மத்தியில் அவர் பெற்றிருந்த நற்பெயர் செல்வாக்கு என்பன அவரை அம்மக்களுடனே நீன்டகாலம் பதுகாப்பாக வாழும் சுழலை ஏற்படுதியது. இவரது இளமைக்கால பாடசாலை நண்பரும் அயலவருமான சொல்லின் செல்வர் செல்லையா ராஜதுரை இவரது மரணத்துக்கு சுமார் ஒரு வாரத்துக்கு முன்னரும், வைத்தியசாலை படுக்கையிலும் இவருடன் தொடர்பு கொண்டு நலம் விசாரித்தமை இவர்களின் ஆறு தசாப்தம் தான்டிய நட்பை கோடிட்டு காட்டுகிறது.
மட்டக்களப்பில் கோட்டமுனையில் ஒரு முஸ்லிம் பாலர் பாடசாலை ஒன்றினை நிறுவும் பணியில் தனது நண்பர் ராஜதுரையின் நட்பின் மூலம் அடிக்கல் நாட்டியவர். எனினும் இக்கல்லூரி பின்னர் முஸ்லிம் பாடசாலயாக இல்லாமல் பின்னர் தமிழ் பாடசாலையாக மாற்றப்பட்டுள்ளமையும்; இவரின் நடவடிக்கையால் மட்டக்களப்பு முன்னாள் பீ. ராஜன் செல்வனாயகம் மூலம் மட்டக்களப்பு கள்ளீயன்காடு ஷாகிரா கல்லூரிக்காக நிதி உதவி அளிக்க செய்தமையும் , இன்று அதே கல்லூரி முஸ்லிம் மாணவர்கள் மிகச் சிறீய அளவில் முக்கியத்துவம் அற்றுப்போக புலிகளின் 1990 இனச் சுத்திகரிப்பும் காரணமாக அமைந்தமையும் இங்கு நினைவு கூரத்தக்கது.
தினகரன் மட்டக்களப்பு நிருபராக தனது இளமைக்கால நண்பரும் அப்போதய தினகரன் ஆசிரியரும் பின்னால் தினபதி சிந்தாமணி ஆசிரியருமான எஸ்.டீ .சிவனாயகம் பனியாற்றியபோது இவரும் செய்ற்பட்டார்.
மேலும் இலக்கியம் கவிதை துறையில் அன்று பிரபலம் பெற்றிருந்த பல கவிஞர்கள் படைப்பாளிகள் இவரது நன்பர்கள்.எஸ்.பொன்னுத்துரை ஏராவூரின் புகழ் பூத்த கவிஞன் புரட்சி கமால் சாலிஹ் , திமிலைதுமிலன் , சித்தி வினாயகம் ஆசிரியர் ஆகியோர் இவருக்கு மிகவும் நெருக்கமானவர்களாக, அறியப்பட்டவர்களாக இருந்துள்ளனர்.
அட்டாளைச்சேசெனை கலாசாலயில் கலையமுதம் என்ற சஞ்சிகையை வெளிக்கொணர்ந்ததுடன் அக்கல்லூரியின் அதிபராக ஒரு காலகட்டத்தில் பனி புரிந்த பிரபல முஸ்லிம் இலக்கிய சமய நூல் ஆய்வாளர் , நூலாசிரியர் எஸ்.எச்.எம். ஜமீல் உட்பட பல சமகால இலக்கிய ஆய்வாளர்கள் படைப்பாளிகளுடனும் தனது மரணம் வரையும் தொடர்புகளை கொன்டிருந்தார். இலண்டனுக்கு முருகபூபதி போன்ற தனக்கு நெருக்கமான எழுத்தாளர்கள் வந்தபோதும் அவர்களை சந்திக்க இவர் தவறியதில்லை. ஆயினும் தான் 18 வருடங்கள் மிக நெருக்கடியான காலங்களில் பனியாற்றிய மட்டக்களப்பு அரசினர் ஆசிரியர் கலாசாலையில் அண்மையில் வெளியிட்ட "கலைச்செல்வி" நினைவு மலரில் இவர் ஆற்றிய பணிகள் குறித்து இருட்டடிப்பு செய்யப்பட்டிருந்ததை காணக்கூடியதாகவிருந்தது. இது குறித்து தனது ஆதங்கத்தினையும் கலாசாலை அதிபருக்கு சுட்டிகாட்ட இவர் தவறவில்லை.
இவர் தமது பிள்ளைகளின் வேண்டுகோளின் பேரில் இலண்டனுக்கு புலம்பெயர்ந்து வாழ்ந்தபோதும் தனது ஓவியக்கண்காட்சியொன்றினை ஹரோ பொது நூலகத்தில் 2003ம் ஆண்டு தை மாதம் நடத்தி பல ஆங்கிலேயர்களின் பாராட்டையும் பெற்றார். ஹரோ பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் ஹரத் தொமஸ் இவரது ஒவியத் திறனை இவரை தனியாக சந்தித்தபோது பராடியுள்ளமையும் இங்கு குறிப்பிட்டே ஆகவேன்டும்.
இவரின் மறைவு மட்டக்களப்புக்கு ஒரு சமூக சேவகனின் மாறாத இழப்பு மட்டுமல்ல இவரை அறிந்த தெரிந்த உலகின் பலருக்கும் ஒரு ஆழுமையும் நேர்மை நிறைந்த கலைஞனின் இழப்புமாகும்.
sbazeer@yahoo.co.uk
0 commentaires :
Post a Comment