6/29/2010

புதிய மதுபான சாலை ஒன்று அமைக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து பாரிய ஆர்ப்பாட்டம்

சித்தாண்டியில் ஆர்ப்பாட்டம்.

img_6583இன்று (28.06.2010) காலை 7.00 மணியளவில் மட்டக்களப்பு மாவட்டத்தின் சித்தாண்டிப்பிரதேசத்தில் புதிய மதுபான சாலை ஒன்று அமைக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து சித்தாண்டி பொதுமக்கள், பொது அமைப்புக்கள் ஒன்றிந்து பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றினை மேற்கொண்டிருந்தார்கள். மேற்படி அமைக்கப்பட்ட மதுபானச்சாலை ஏற்கனவே வந்தாறுமூலை கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு அண்மையில் அமைந்திருந்தது இதனால் பல சமூக சீர்கேடுகள் ஏற்படுகின்றது. பல்கலைக்கழக மாணவர்கள் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் என்பதனால் பல்கலைக்கழக மாணவர்கள் ஆணைக்ககுழு மற்றும் பல்கலைக்கழக நிருவாகம் உரிய அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு வந்ததையிட்டு அவ் மதுபானசாலை உடனடியாக அகற்றப்பட்டது. அக்குறித்த மதுபான சாலை தற்போது சித்தாண்டிப்பிரதேசத்தில் அமைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
மேற்படி அர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட மக்கள் சுமார் 1மணி நேரம் மதுபானசாலைக்கு முன்பாக நின்று ஆரவாரம் செய்தார்கள், இவ் இடத்திற்கு விரைந்த ஏறாவூர் பொலீஸ் பொறுப்பதிகாரி குறித்த ஆர்ப்பாட்டகாரர்களை உடனடியாக கலைந்து செல்லும்படியும் இன்றிலிருந்து இவ் மதுபானசாலை மூடப்படும் எனவும் அதற்கு தானே பொறுப்பு எனவும் குறித்த பொலீஸ் உயரதிகாரி உறுதியளித்தார். இதனை தொடர்ந்து மக்கள் கலைந்து சென்றார்கள். இது தொடர்பில் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனுக்கு அப்பிரதேச மக்கள் ஓர் மகஜரையும் சமர்ப்பித்திருக்கின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவ் மதுபானச் சாலை தொடர்பில் ஓர் ஆமைச்சருக்கு நேரடி தொடர்பு இருப்பதாக அறியமுடிகின்றது என அப்பிரதேச வாசிகள் குறிப்பிடுகின்றனர். அத்தோடு இது போன்ற பல மதுபானச்சாலைகள் கிராமங்கள் தோறும் அமைக்கப்பட்டுக் கொண்டே வருகின்றது. இதற்கு குறித்த ஓர் அமைச்சர் துணைபுரிந்து செயற்பட்டு வருவதாக அறியக்கிடைக்கிறது. உதாரணமாக வாகரைப் பிரதேசத்தில் ஒரு மதுபானச்சாலை அமைத்துத் தருவதாக கூறி 30 இலட்சம் ரூபாயை அவ்வமைச்சர் பெற்றிருப்பதாகவும், அவ் மதுபான சாலை வாகரையில் இயங்கி வருவதாகவும் அறியமுடிகின்றது. யுத்தத்தினாலும், சுனாமி மற்றும் இயற்கை அனர்த்தங்களாலும் பல வழிகளிலும் நலிவடைந்து இருக்கும் எமது சமூகத்தினை மீட்சி பெறச் செய்யாமல் இது போன்ற சமூக விரோத நடவடிக்கைகளில் ஈடுபடத்தூண்டுகின்ற இவ்வாறான செயற்பாடுகளுக்கு எமது பிரதேசம் சார்ந்த அரசியல் பிரமுகர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் உடந்தையாக இருப்பது வேதனையே.
மீன்மகளுக்காக நரசிம்மன்.
                                                                                                                                               

0 commentaires :

Post a Comment