6/24/2010

வாழைச்சேனையில் சனச அபிவிருத்தி வங்கிக் கிளை முதலமைச்சரினால் திறந்துவைப்பு.

தற்பொழுது நாட்டின் அனைத்து பாகங்களிலும் தமது கிளையினை விஸ்த்தரித்து கொண்டு வருகின்ற சனச அபிவிருத்தி வங்கியினது மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனை பிரதேசத்தில் தமது கிளையினை 21.06.2010 திங்கள் அன்று. நிறுவியுள்ளது. இவ் சணச அபிவிருத்தி வங்கி கிளையினை தமிழ் மக்கள் விடுதலைப்pபுலிகள் கட்சியின் தலைவரும் கிழக்கு மாகாண முதலமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் பிரதம அதிதியாக கலந்து கொண்டு திறந்து வைத்து உரையாற்றுகையில் எமது பிரதேசத்தில் வாழுகின்ற மக்கள் வங்கிகளை ஓர் அடகு வைக்கும் மையமாக கருதாது அபிவிருத்திக்கான ஓர் சேமிப்பு நிறுவனமாக கருத்திற்கொண்டு செயற்பட வேண்டும் எமது பிரதேசத்தின் எமது காலடியிலேயே எமக்கான அனைத்து வசதிகளுடனும் கூடிய வங்கிக் கிளையின் உதயமானது எமக்கு கிடைத்திருக்கின்ற அரிய வாய்ப்பாகும், இவ்வாறான வங்கிகள் ஊடாக நாம் பெறமுடியுமான அனைத்து பலாபலன்களையும் பெற்று அதனூடாக எமது வாழ்விலும் சமூகத்திலும் அபிவிருத்தியுடன் கூடிய பல மாற்றங்களை கொண்டுவரவேண்டும் உதாரணமாக குறைந்த வட்டி அடிப்படையிலான குறுங்கால நீண்டகால கடன்கள் பல வகையான சேமிப்பு மற்றும் நடைறைக் கணக்குகள், மேலும் பல அபிவிருத்தி சார்ந்த திட்டங்களை இவ்வங்கி கிளைகளின் ஊடாக நாம் பெறமுடிகின்றது. இவற்றை நாம் சரியாக பேணுகின்ற சந்தர்ப்பத்தில் நாம் எதிர்பார்க்கின்ற பலாபலன்களை நாம் எட்ட முடியும் என குறிப்பிட்டார். இந்நிகழ்விற்கு சனச அபிவிருத்தி வங்கியின் தவிசாளர் உட்பட பலரும் கலந்து கொண்டனர்

0 commentaires :

Post a Comment