ஆறு தசாப்தங்களாக இலங்கையின் இனப் பிரச்சினை தமிழ் மக்களின் அரசியலில் பிரதான இடத்தை வகி த்து வருகின்றது. ஒவ்வொரு தேர்தலின் போதும் இதுவே பிரதான பேசுபொருள். இப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படப்போவதாக உணர்ச்சிகரமாக வாக்கு றுதி அளிப்பவர்களை மக்கள் ஒவ்வொரு தேர்தலிலும் தேர்ந் தெடுத்தார்கள். ஆனால் இன்று வரை தீர்வு கிடைக்கவில்லை.
தீர்வின்றி இனப் பிரச்சினை இழுபடுவதற்குச் சிங்களத் தலைவர்கள் மீது குறை கூறுவது தமிழ்த் தலைமைகளின் வழக்கமாகிவிட்டது. இத் தலைமைகள் கூறுவது போல சிங்களத் தலைவர்கள் தடை யாக இருப்பதாலேயே பிரச்சினை தீராதிருக்கின்றதென்றால், பிரச் சினைக்குத் தீர்வு காணப்போவதாக ஒவ்வொரு தேர்தலிலும் தமி ழ்த் தலைவர்கள் வாக்குறுதி அளிப்பதில் அர்த்தமில்லை. பிரச் சினை தீராதிருப்பதற்குச் சிங்களத் தலைவர்களின் தடை காரண மல்ல என்பதே இந்த வாக்குறுதியின் அர்த்தம்.
தமிழ்த் தலைவர்கள் தூரதிருஷ்டியுடனும் யதார்த்தபூர்வமாகவும் சிந் தித்துச் செயற்பட்டிருந்தால் பிரச்சினைக்கு எப்போதோ தீர்வு காண முடிந்திருக்கும் என்பதே உண்மை நிலை. தீர்வை நோக் கிச் செல்வதற்குக் கிடைத்த சந்தர்ப்பங்களைத் தமிழ்த் தலை வர்கள் சரியாகப் பயன்படுத்தத் தவறிவிட்டார்கள். இனப் பிரச்சி னையின் வரலாற்றை எடுத்துப் பார்த்தால் தமிழ்த் தலைவர்கள் இழந்த சந்தர்ப்பங்கள் அநேகம்.
பண்டா-செல்வா ஒப்பந்தம் சமஷ்டி அடிப்படையிலான தீர்வின் ஆரம்பம் என்று எஸ். ஜே. வி. செல்வநாயகம் கூறியிருந்தார். துர திஷ்டவசமாக அந்த ஒப்பந்தத்தைக் கைவிட வேண்டிய நிலை ஏற்பட்டது. எனினும் ஒப்பந்தத்தின் சரத்துகளை நடைமுறைக்குக் கொண்டு வருவதற்கான இரண்டு சந்தர்ப்பங்கள் பிந்திய நாட் களில் கிடைத்த போதிலும் தமிழ்த் தலைவர்கள் அவற்றை நிரா கரித்துவிட்டனர்.
பொதுசன ஐக்கிய முன்னணி அரசாங்கம் முன்வைத்த அதிகாரப் பகிர்வுத் தீர்வுத்திட்டமும் பண்டா-செல்வா ஒப்பந்தத்தைப் போல் சமஷ்டித் தன்மை கொண்டதே. இத் தீர்வுத் திட்டத்துக்கு ஆரம் பத்தில் ஆதரவு தெரிவித்துவந்த தமிழ்த் தலைவர்கள் கடைசி நேரத்தில் ஆதரவை விலக்கிக்கொண்டு தனிநாட்டு நிகழ்ச்சி நிர லின் பக்கம் திரும்பினார்கள்.
இவையிரண்டும் தமிழ்த் தலைவர்கள் இழந்த சந்தர்ப்பங்களுள் பிர தானமானவை. இவ்வாறு ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும் இழந்த தன் விளைவாகவே இனப் பிரச்சினை இன்றுவரை தீர்வின்றியி ருக்கின்றது. இப்போது இன்னொரு சந்தர்ப்பம் கிடைத்திருக்கின் றது. இதைச் சரியாகப் பயன்படுத்துவதற்கு எல்லாத் தமிழ்க் கட் சிகளும் முன்வர வேண்டும்.
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் வாசஸ்தலத்தில் தமிழ்க் கட்சி களின் சந்திப்பொன்று அண்மையில் நடைபெற்றது. தமிழ் மக் கள் நாளாந்த வாழ்வில் முகங்கொடுக்கின்ற பிரச்சினைகளுக்கும் இனப் பிரச்சினைக்கும் தீர்வு காண்பதற்கான கூட்டுச் செயற் பாடொன்றின் முன்னோடியாக இச் சந்திப்பு அமைந்ததெனக் கருதலாம். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் அமைச்சர் தேவா னந்தா அழைப்பு விடுத்திருக்கின்றார்.
அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பால் பொது நோக்கத்துக்காகக் கூட் டாகச் செயற்படுவதற்குக் கிடைத்திருக்கும் இச் சந்தர்ப்பத்தைச் சரியான முறையில் எல்லாக் கட்சிகளும் பயன்படுத்த வேண்டும். தீர்வுக்கான நீண்டகால வேலைத்திட்டத்தையும் குறுகியகால வேலை த்திட்டத்தையும் தயாரித்துத் தென்னிலங்கையிலுள்ள நட்பு சக்திக ளுடன் இணைந்து செயற்படும் பட்சத்தில் தீர்வு நிச்சயம் சாத்திய மாகும்.
0 commentaires :
Post a Comment