ஆப்கானிஸ்தானில் எண்ணற்ற கனிப்பொருட்கள் காணப்படுவதாகவும் இதன் பெறுமதிகள் ஒரு டிர்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிகமானதென்றும் அமெரிக்காவின் பாதுகாப்புத் தலைமைய கமான பென்டகன் அறிவித்துள்ளது. இக்கனிப் பொருட்கள் முறையாகப் பெயர்க்கப்பட்டு பாவனைக்கு வரும் பட்சத்தில் ஆப்கானை செல்வம் கொழிக்கும் நாடாக மாறும். எண்ணெய் வளத்தால் சவூதி அரேபியா பெறும் வருமானத்தை விடவும் கூடுதலான செல்வத்தை ஈட்டமுடியும் என பென்டகன் கூறியுள்ளதுடன் நீண்டகால யுத்தத்தால் சீரழிந்து போயுள்ள ஆப்கானின் புனருத்தாரணப்பணிகள், கல்வி, சுகாதாரம் அபிவிருத்தி போன்ற துறைகளில் இப்பணத்தைச் செலவிட முடியுமெனவும் பென்டகன் கூறியுள்ளது. தங்கம், செம்பு, வெள்ளி, பித்தளை, லதியம் உள்ளிட்ட பெறுமதியான கனிப் பொருட்கள் ஆப்கானிஸ்தானிலுள்ளதாக நம்பப்படுகிறது. ஆனால் இவை பெரும்பாலும் தலிபான்களின் செல்வாக்குள்ள பிரதேசங்களிலேயே காணப்படுகின்றன. இவை தலிபான்களின் கைவசம் செல்லுமாயின் அவர்கள் நிறையப் பணங்களைச் சம்பாதிப்பர். இது தலிபான்களின் இராணுவ பலத்தை அதிகரிக்கும். எனவே ஆப்கான் அமெரிக்க அரசுகள் இக்கனிப் பொருட்களை பெறுவதில் கூடிய கவனத்தை செலுத்தியுள்ளன. கடும் சண்டைக்குப் பின்னர் இந்நிலங்களைத் தலிபான்களிடமிருந்து மீட்ட பின்னரே இக்கனிப் பொருட்களைப் பெறமுடியும் எனக் கருதப்படுகின்றது. |
6/16/2010
| 0 commentaires |
0 commentaires :
Post a Comment