ஈரானுக்கெதிரான நான்காவது பொருளாதாரத்தடை புதன்கிழமை ஐ.நா.வில் நிறைவேற்றப்பட்டது. ஐந்து நிரந்தர நாடுகளும் ஈரானுக் கெதிராக வாக்களித்தன. இது அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவின் நிர்வாகத்துக்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றியென அரசியல் அவதானிகள் தெரிவித் தனர். ஈரானின் பக்கம் சாய்ந்து செயற்பட்ட ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளும் ஈரானுக்கெதிராக வாக்க ளித்தமை மிக முக்கியமான செய்தி யாகும். யுரேனியம் செறிவூட்டல் தொடர்பாக கடுமையான செய்தி யை ரஷ்யா, சீனா என்பன ஈரானு க்கு அனுப்பியுள்ளன. இருந்த போதும் ஈரானின் மத்திய வங்கியின் செயற்பாடு எண்ணெய்க் கம்பெனி களின் செயற்பாடுகளிலும் தடை களைக் கொண்டு வர ஐ.நா. முயற்சித்த வேளை ரஷ்யா, சீனா என்பன இதை நிராகரித்தன. துருக்கி, லெபனான் என்பன எதிர்த்து வாக்களித்ததுடன் லிபியா நடு நிலைமை வகித்தது. ஈரான் மீதான நான்காவது பொரு ளாதாரத்தடை அந்நாட்டை வழி க்குக் கொண்டுவருவதற்கான பிழை யான முயற்சிகள் என்று பிரேஸி லும், துருக்கியும் தெரிவித்தன. ஐ.நா.வின் பாதுகாப்புச் சபையில் நிரந்தர நாடுகள் ஐந்தும் (அமெ ரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ரஷ்யா, சீனா) சுழற்சிமுறை நாடுகள் பத்தும் உள்ளன. புதன்கிழமை நடந்த வாக்களிப்பில் 12 வாக்குகள் ஈரானு க்கெதிரான நான்காவது பொரு ளாதாரத் தடைக்கு ஆதரவாகக் கிடைத்தன. வீட்டோ அதிகாரமுள்ள நாடுகள் அனைத்தும் அமெரிக்காவின் அணி யில் இணைந்துள்ளதை ரஷ்யா, சீனா, பிரிட்டன், பிரான்ஸ் என்ப வற்றின் செயற்பாடுகள் காட்டின. ஈரானுக்கான ஐ.நா.வின் ஆயுத விற்பனை ஈரான் அரசால் கட்டுப் படுத்தப்படும் மூன்று கப்பல் போக்குவரத்துகள், ஈரான் புரட்சி கரக் காவல் படைக்குச் சொந்தமான 15 அமைப்புகள் என்பவற்றுக்கும் ஐ.நா.வின் தடைகள் விஸ்தரிக்கப் பட்டுள்ளன. அத்துடன் வடகொரி யாவின் கப்பல்களைக் கண்காணிப் பதற் கென அமைக்கப்பட்டுள்ள குழு போன்று ஈரானின் கப்பல்களைக் கண்காணி க்கவும் ஐ.நா.பாதுகாப்புச் சபை தீர்மானமெடு த்தது. ஐ.நா.வின் இத்தடை தொடர்பாக வெனிசூலா, பிரேஸில் என்பன கண்டனங்களை வெளியிட்டுள்ளன. எந்தத் தடைகளாலும் ஈரானைப் பணியவைக்க முடியாதென ஜனா திபதி அஹ்மெதி நெஜாத் கூறினார். |
6/11/2010
| 0 commentaires |
0 commentaires :
Post a Comment