6/09/2010

வைகோ, நெடுமாறன், சீமான், தொல் திருமாவளவன் கைது


ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இந்திய விஜயத்தை எதிர்த்து தமிழகத்தில் ஆர்ப்பாட்டம் செய்த தமிழக முக்கியஸ்தர்கள் நேற்று பொலிஸாரால் கைது செய்யப்ப ட்டுள்ளனர்.
தென்னிந்திய அரசியல் வாதிகளான வைகோ, பழ. நெடுமாறன், தொல். திருமாவளவன் உட்பட திரைப்பட நடிகர்கள் இயக்குநர்கள் அடங்கலாக நூற்றுக் கணக்கானோர் நேற்று தமிழ் நாட்டு பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டிருப்பவர்களில் திரைப்பட இயக்குநரும் நடிகருமான சீமான் டி.ராஜேந்தர், மகேந்திரன், நல்லகண்ணு போன்றோரும் அடங்கியுள்ளனர். தமி ழகத்தில் சென்னையிலுள்ள இலங்கை உதவி உயர்ஸ் தானிகராலயம், இலங்கை வங்கி போன்ற பகுதிகளு க்கு பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதுடன் இவ் வீதிகளும் மூடப்பட்டிருந்தன.
தமிழகத்தின் திருப்பூர், மயிலாடுதுறை, சிவகங்கை, கோவை, காந்திநகர், நாகர்கோவில், கரூர், சென்னை, ஓசூர், தேனி, நாமக்கல் போன்ற பகுதிகளிலேயே இந்த ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இதில் ஆயிரக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் கல ந்து கொண்டிருந்த நிலையிலே அவர்களில் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று தமிழக செய்திகள் மேலும் தெரிவித்தன

0 commentaires :

Post a Comment