அக்கரைப்பற்று - பொத்துவில் பிரதான வீதியில் பெரிய முகத்துவாரம் தாம்போதி கிழக்கு அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் மிகவும் பெரியதும் நீளமானதுமான பாலம் அமைக்கும் வேலைகள் உலக வங்கியின் நிதி உதவியுடன் ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்றுக் கொண்டு வருகிறது. இந்த வருட இறுதிக்குள் இந்த பாலத்தின் வேலைகள் பூர்த்தியடையுமென எதிர்பார்க்கப்படுகிறது.
ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் அக்கரைப்பற்று - பொத்துவில் பிரதான வீதி அமைக்கப்பட்ட போது களப்புகளில் இருந்துவரும் வெள்ள நீர் கடலுக்குச் செல்வதற்காக பொருத்தமான இடங்களில் தாம்போதிகள் அமைக்கப்பட்டிருந்தது. இந்த தாம்போதிகளில் வெள்ளமான காலங்களில் போக்குவரத்துக்கள் தடைப்படுவது சகஜமாகவே இருந்து வந்தது.
கிழக்கு அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் கிழக்கிலுள்ள பிரதான வீதிகள் அகலமாக்கி தாம்போதிகள் இருந்த இடங்களில் எல்லாம் பெரிய பாலங்களும், சிறிய பாலங்கள் இருந்த இடங்களில் அவற்றை எல்லாம் அகற்றி புதிய பாலங்கள் அமைப்பதோடு வெள்ள நீர் வீதியில் தேங்கி நிற்காதவாறு வடிகான்களும் அமைக்கும் வேலைகள் தற்போது வேகமாக நடைபெற்றுக்கொண்டு வருகிறது. இதனால் உள்ளூர் தொழிலாளர்களுக்கும் நல்ல தொழில் வசதிகள் கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 commentaires :
Post a Comment