6/07/2010

தென்மாகாணத்தில் தோன்றி மேலைத்தேயத்தவர்களுக்கு சிம்ம சொப்பன மான ராஜபக்ஷ அரசியல்

 


சிறு வயதில் தந்தையுடனும் சகோதரர்களுடனும்.
இலங்கையின் அரசியல் வரலாற்றில் நீண்டகாலம் தடம்பதித்து அளப்பரிய சேவையாற்றிய அரசியல் குடும்பங்களில் ராஜபக்ஷ குடும்பமும் சேனாநாயக்க குடும்பமும் மிக முக்கியமானவை.
சுதந்திரம் கிடைத்த பின்னர் இலங்கையின் முதலாவது பிரதமரான டி.எஸ். சேனாநாயக்க அவரின் புதல்வரான பிரதமர் டட்லி சேனாநாயக்க அதனைத் தொடர்ந்து ருக்மன் சேனாநாயக்க என சேனாநாயக்க குடும்ப அரசியல் பரம்பரை நீடித்தது.
தென்மாகாணத்தில் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் பிறந்த ராஜபக்ஷ குடும்பம், கடந்த ஆறு தசாப்தங்களுக்கு மேலாக இலங்கை அரசியலில் நீடித்து நிலைத்து மிகப் பெரும் சாதனைகளை படைத்து வருகிறது.
1936 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ஹம்பாந்தோட்டை தொகுதியில் போட்டியிட்டு வென்ற டி.எம். ராஜபக்ஷ பாராளுமன்றத்திற்கு முதன் முதலில் தெரிவானார். அன்று ஆரம்பித்த ராஜபக்ஷ அரசியல் பயணம் இன்று வரை வளர்ந்து வருகிறது.
ராஜபக்ஷ பரம்பரையின் 70 வருட அரசியல் வரலாற்றில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பங்கு அளப்பரியதாகும். இவரின் 40 வருட அரசியல் வாழ்வு குட்டி இலங்கையை உச்சத்தில் தூக்கிவைத்துள்ளது என்றால் அது மிகையல்ல.
யுத்தத்திற்கு முடிவு கண்டதால் மட்டுமன்றி பொருளாதாரத்தை மேம்படுத்த அவர் முன்னெடுத்து வரும் நடவடிக்கைகள் மிக முக்கியமானவையாகும். மேலைத்தேய அழுத்தங்களுக்கு பின் வாங்காத அவரின் அஞ்சாநெஞ்சம் ராஜபக்ஷ குடும்பத்தில் ஆரம்ப முதலே இருந்து வந்தது.
டி.எம். ராஜபக்ஷ தொடக்கம் இன்று வரை ராஜபக்ஷ குடும்பம் மேலைத்தேயத்தவர்களுக்கு சிம்ம சொப்பணமாகவே இருந்து வருகிறது.
ராஜபக்ஷ குடும்பத்தில் இருந்து முதலில் அரசியலில் கால்பதித்த டி.எம். ராஜபக்ஷவின் அரசியல் வாழ்வும் உயிர் மூச்சும் 1945 ல் நிறைவடைந்தது. திடீர் மாரடைப்பினால் அவர் மரணமடைந்தார். இதனால் ஏற்பட்ட எம்.பி. வெற்றிடத்திற்கு அவரின் சகோதரரான டி.ஏ. ராஜபக்ஷ (ஜனாதிபதியின் தந்தை) தெரிவு செய்யப்பட்டார்.
அதனைத் தொடர்ந்து 1947 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் பெலியத்த தொகுதியில் ஐ.தே.க. சார்பாக போட்டியிட்டு வெற்றியீட்டினார். டி.ஏ. ராஜபக்ஷ இதே தேர்தலில் ஹம்பாந்தோட்டை தொகுதியில் போட்டியிட்ட டி.எம். ராஜபக்ஷவின் மூத்த மகன் லக்ஷ்மன் ராஜபக்ஷ வெற்றி பெற்று பாராளுமன்றத்திற்கு தெரிவானார்.
அடுத்து டி.எம். ராஜபக்ஷவின் மற்றொரு புதல்வரான ஜோர்ஜ் ராஜபக்ஷவும் அரசியலில் குதித்து பல வருடங்கள் அரசியலில் நிலைத்து நின்றார்.
1967 ஆம் ஆண்டு டி.ஏ. ராஜபக்ஷ மரணமடைந்த போது அவரின் குடும்ப வாரிசு ஒருவரை அரசியலில் ஈடுபடுத்த ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சித் தலைவி ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க முன்வந்தார். அவரின் மூத்த புதல்வரான சமல் ராஜபக்ஷவின் பெயரே முதலில் சிபார்சு செய்யப்பட்டது.
ஆனல் அந்த சந்தர்ப்பத்தை அவர் இளைய சகோதரரான மஹிந்த ராஜபக்ஷவுக்கு வழங்கினார். இதன்படி மஹிந்த ராஜபக்ஷ 1967 ஆம் ஆண்டு பெலியத்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அமைப்பாளராக நியமிக்கப்பட்டார்.
1970 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பாக மஹிந்த ராஜபக்ஷவும் ஐ.தே.க. சார்பாக டாக்டர் ஆர்.கே.பி. அதபத்துவும் நிறுத்தப்பட்டனர். இந்தத் தேர்தலில் வெறும் 24 வயதான இளைஞரான மஹிந்த ராஜபக்ஷ 23, 103 வாக்குகளைப் பெற்று வெளியீட்டினார். அதபத்துவுக்கு 16, 477 வாக்குகளே கிடைத்தது.
1977 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தல் ராஜபக்ஷ குடும்பத்திற்கு கசப்பான அனுபவத்தை அளித்தது. இந்தத் தேர்தலில் ராஜபக்ஷ குடும்பத்தில் இருந்து ஒருவர் கூட பாராளுமன்றத்திற்கு தெரிவாகவில்லை. அதன் பின் நடந்த தேர்தல்களில் மஹிந்த ராஜபக்ஷ வெற்றிபெற்றார்.
1989 முதல் சமல் ராஜபக்ஷ ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் இருந்து பாராளுமன்றத்துக்கு தெரிவாகி வருகிறார். 1994 ல் போட்டியிட்ட டி.எம். ராஜபக்ஷவின் பேத்தியும் ஜோர்ஜ் ராஜபக்ஷவின் புதல்வியுமான நிருபமா ராஜபக்ஷ அரசியலில் இறங்கி ராஜபக்ஷ பரம்பரை அரசியல் வாரிசுகளில் ஒருவராக திறமை காட்டி வருகிறார்.
கடந்த மாகாண சபைத் தேர்திலில் போட்டியிட்ட சமல் ராஜபக்ஷவின் மூத்த புதல்வரான சசீந்ர ராஜபக்ஷ இன்று ஊவா மாகாண முதல்வராக வீற்றிருக்கிறார்.
அடுத்து மஹிந்த ராஜபக்ஷவின் இளைய சகோதரரான பசில் ராஜபக்ஷ, மகன் நமால் ராஜபக்ஷ ஆகியோரும் அரசியலில் குதித்து பாராளுமன்றம் தெரிவாகியுள்ளனர்.
ராஜபக்ஷ குடும்பத்தின் தொடர் அரசியல் பிரவேசம் தொடர்பாக பல்வேறு குற்றச் சாட்டுக்களும் வதந்திகளும் பரப்பப்பட்டாலும் அந்தக் குடும்பத்தினால் நாட்டுக்கு அதிகம் நன்மையே கிடைத்துள்ளது என்பதை யாரும் மறுக்க முடியாது.
ராஜபக்ஷ குடும்பத்தில் இருந்து அரசியலில் பிரவேசித்தவர்களில் ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு வகையில் நாட்டுக்கு குறிப்பிடத்தக்க வகையில் சேவையாற்றி வந்துள்ளனர்.
70 வருட ராஜபக்ஷ குடும்ப அரசில் பிரவேசத்தில் 40 வருடகால மஹிந்த ராஜபக்ஷவின் அரசியல் பங்களிப்பு ராஜபக்ஷ குடும்பத்தின் கீர்த்தியை உச்சத்தில் வைத்துள்ளது. ராஜபக்ஷ குடும்பத்தவர்களில் அதிகமானவர்களைப் போன்று மஹிந்த ராஜபக்ஷவும் எதிர்பாராத நேரத்திலே அரசியலில் குதித்தார். ஆனால் பாடசாலைக் காலம் முதல் பல்கலைக்கழக நூலக உதவியாளராக பணிபுரிந்தது வரை அவரிடம் சிறந்த அரசியல்வாதிக்குரிய பண்புகள் காணப்பட்டன.
காலி ரிச்மன் கல்லூரி, கொழும்பு நாளந்தா மற்றும் தேர்ஸ்டன் கல்லூரி என்பவற்றில் பயின்ற அவர் பின்னர் சட்டக் கல்லூரிக்குத் தெரிவாகி சட்டத்தரணியானார். பாடசாலையில் கல்விகற்கும் காலத்தில் குழப்பக்காரராக இருந்தாலும் ஆசிரியர்களுக்கு கீழ்ப்படிவான மாணவராகவே மஹிந்த ராஜபக்ஷ காணப்பட்டார்.
மாணவர்களுக்கிடையிலான பிரச்சினைகளை தலையிட்டு தீர்ப்பதாக இருந்தால் என்ன பாடசாலை சிற்றூழியர்கள் முதல் சிற்றூண்டிச்சாலை உரிமையாளர் வரையான எத்தகைய நபரினது பிரச்சினையாக இருந்தாலும் அவர்களின் நலனுக்காக மஹிந்த ராஜபக்ஷ முன்னணியில் இருப்பார். பாடசாலை காலத்திலோ தொழில் புரியும் காலத்திலோஒரு போதும் தனது குடும்ப அரசியல் பலத்தை +ரிw துஷ்பிரயோகம் செய்தது கிடையாது.
வித்யோதயாப் பல்கலைக்கழக நூலக உதவியாளராக பணிபுரிந்த போது அவர் கல்விசாரா ஊழியர்களின் சங்கமொன்றை அமைத்து அவர்களின் உரிமைக்காக போராட்டம் நடத்தியிருக்கிறார்.
இப்படியாக தனது இளம்பராயம் முதல் புடம்போடப்பட்ட மஹிந்த ராஜபக்ஷ இந்த நாட்டின் பிரதமராக, ஜனாதிபதியாக தெரிவாகி எந்த ஜனாதிபதியும் செய்திராத அளப்பரிய சேவைகளை ஆற்றி வருகிறார்.
அவரின் பணிகள் தொடரட்டும். நாடு மென்மேலும் சுபீட்சமடையட்டும்.

0 commentaires :

Post a Comment