ஜனாதிபதியின் இந்திய விஜயம் தொடர்பாக ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர் மேலும் கூறியதாவது :- இரு நாடுகளுக்குமிடையில் ஊடகத்துறை தொடர்பான பல முக்கிய ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்படும். இரு நாட்டுக்கு மிடையில் வானொலி, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பரிமாறுதல், அதிகாரிகளுக்கு பயிற்சி வழங்குதல் உட்பட பல விடயங்கள் தொடர்பில் ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்படும்.
தனியார் துறையினர் தாம் விரும்பியபடி இந்தியாவில் இருந்து படங்கள் மற்றும் நிகழ்ச்சிகளை தருவித்து ஒலி, ஒளிபரப்பு செய்கின்றன. இதற்காக வரி விதிக்கப்பட்டாலும் கூட அதனை கட்டுப்படுத்த முடியவில்லை. புதிய ஒப்பந்தம் மூலம் இதனை முறையாக முன்னெடுக்க முடியும்.
‘சீபா’ வர்த்தக ஒப்பந்தம் குறித்து சகல தரப்பினருடனும் அரசாங்கம் பேச்சு நடத்தியே இறுதி முடிவு எடுக்கும். சிலர் இந்த ஒப்பந்தத்தை எதிர்க்கின்றனர். ஆனால் ‘சீபா’ ஒப்பந்தம் இதுவரை கைச்சாத்திடப்படவில்லை. இந்த வருட இறுதியில் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட உள்ளது. ஜனாதிபதியின் இந்திய விஜயத்தின் போது இது குறித்து முக்கியமாக ஆராயப்படும்.
இது தவிர பாதுகாப்பு விடயங்கள் தொடர்பிலும் இரு தரப்பினருக்குமிடையில் பேச்சுவார்த்தைகள் இடம்பெறும்.
இதேவேளை, சார்க் நாடுகளுக்கிடையில் சேவைத்துறை பரிமாற்றம் மேற்கொள்ள அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. ஏப்ரல் 29ஆம் திகதி பூட்டானில் நடைபெற்ற 16ஆவது சார்க் மாநாட்டில் இது குறித்து ஆராயப்பட்டது. இது தொடர்பான ஒப்பந்தத்தில் வெளிவிவகார அமைச்சர் கைச்சாத்திட்டார்.
இதன்மூலம் சார்க் நாடுகளிடையே சுற்றுலா, கல்வி, கலாசாரம் தொடர்பான சேவை பரிமாற்றங்கள் இடம்பெறும் என்றார்.
0 commentaires :
Post a Comment