6/03/2010

"கலைஞர் கருணாநிதி ஈழப்பிரச்சினைக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை என்பதற்காக அங்கு போகக் கூடாது எனச் சொல்வது தவறு.




  "இலங்கைத் தமிழர்களின் அரசியல் போராட்டம் தமிழக முதல்வர் மு.கருணாநிதியை நம்பி ஆரம்பிக்கப்பட்டதல்ல. இது எங்களுடைய போராட்டம். இந்தப்போராட்டத்தை நாங்களே நாடி, நாங்களே வெல்ல வேண்டும்" என யாழ். பல்கலைக் கழகத் தகைநிலை பேராசிரியரும் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் ஆய்வரங்கக் குழுவுக்குத் தலைமை வகிப்பவருமான கா.சிவத்தம்பி தெரிவித்தார்.

இந்தியா, கோவையில் இம்மாத இறுதியில் நடைபெறவுள்ள உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு தொடர்பாக
இந்த மாநாட்டுக்குச் செல்ல வேண்டாம் என சில தமிழ் அமைப்புகள் கோரிக்கை விடுத்துவருவது தொடர்பாக கேட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

"கலைஞர் கருணாநிதி ஈழப்பிரச்சினைக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை என்பதற்காக அங்கு போகக் கூடாது எனச் சொல்வது தவறு. இன்னொருவர் எமக்கு உதவி செய்யவில்லை என்பது இங்கு பிரச்சினையல்ல. இதனை நான் தமிழகத்திலும் சொல்வேன்"என அவர் மேலும் கூறினார். _

0 commentaires :

Post a Comment