6/02/2010

அதிக திருட்டு மின்சாரம் பெறும் பகுதி கிழக்கு! கைது செய்யும் பணி நேற்று முதல் ஆரம்பம்

கிழக்கு மாகாணத்திலேயே திருட்டுத் தனமாக மின்சாரம் பெறும் நடவடிக்கை இடம்பெறுவதாக அதிகளவிலான முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. நேற்று முதல் மீண்டும் நாடளாவிய ரீதியில் திருட்டு மின்சாரம் பெறுபவர்களை கைது செய்யும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி எரிசக்தி அமைச்சர் சம்பிக ரணவக்க கூறினார்.
மின்சக்தி எரிசக்தி அமைச்சில் நேற்று (1) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது:-
கிழக்கு மாகாணத்தில் 29 வீதமான திருட்டு மின்சாரம் பெறப்படுகின்றது. ஏனைய பிரதேசங்களில் 15 வீதமே இடம்பெறுகின்றது.
கடந்த காலங்களில் சட்டவிரோதமாக மின்சாரம் பெறுபவர்களைக் கைது செய்வதற்கு பொலிஸார் போதிய ஒத்துழைப்பு வழங்கவில்லை. தற்பொழுது மின்சார சபை சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
 

0 commentaires :

Post a Comment