அதன் பின்னர் சி.ஐ.டி.நகர் இல்லத்தில் மரக்கன்றை நட்டு வைத்தார். இதையடுத்துப் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். தி.மு.க நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு, சற்குண பாண்டியன், கனிமொழி, அமைச்சர் பூங்கோதை, மேயர் மா.சுப்பிரமணியன், நடிகை குஷ்பு உள்ளிட்டோர் நிகழ்வில் கலந்து கொண்டனர். அண்ணா அறிவாலயத்தில் கட்சித் தொண்டர்கள் மற்றும் பொதுமக்களின் வாழ்த்துக்களை கலைஞர் ஏற்றுக் கொண்டார். மாலை திருவான்மியூரில் நடைபெறும் பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் கருணாநிதி பங்கேற்றுப் பேசுவார். கருணாநிதியின் பிறந்த நாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் தி.மு.க.வினர் பல்வேறு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்துள்ளனர். _ |
6/04/2010
| 0 commentaires |
0 commentaires :
Post a Comment