ஜப்பானின் புதிய பிரதமராக நிதிய மைச்சர் நஓட்டோகான் தெரிவு செய்யப்பட்டார். பாராளுமன்றத்தின் கீழ் சபையில் இதற்கான வாக்களிப்பு நேற்று வெள்ளிக்கிழமை நடந்தது. 477 எம். பிக்கள் இந்த வாக்களிப்பில் கலந்து கொண்டனர். இதில் 313 எம்.பிக்கள் நஓட்டோ கான் பிரதமராக வரவேண்டுமென வாக்களித்தனர். பாராளுமன்ற மேல் சபை 237 வாக்குகளில் 123 வாக்குகள் புதிய பிரதமருக்கு கிடைத்தது. சபாநாயகர் ரக்ஷிரோ பின்னர் உத்தியோகபூர்வமாக பாராளுமன்றத்தின் முடிவை அறிவித்தார். ஜப்பானின் புதிய பிரதமராக நஓட்டோகானைப் பாராளுமன்றம் தெரிவு செய்ததாகத் தெரிவித்தார். முன்னாள் பிரதமர் யுகியோ ஹற்றோயாமா நேற்று முன்தினம் டி. பி. ஜே. தலைமைப் பதவியிலிருந்து விலகியதுடன், பிரதமர் பதவியையும் இராஜினாமாச் செய்தார். ஒகினாவா அமெரிக்கக் கடற்படை விவகாரம் ஐம்பது வருடங்களுக்குப் பின்னர் ஜப்பானின் ஆட்சி அதிகாரத்தைப் பற்றிய கன்சர்வேட்டிவ் கட்சியின் கூட்டரசாங்கத்துக்குப் பெரும் சவாலாய் அமைந்தது. யுகியோ ஹற்றோயாமா ஒகினாவா அமெரிக்க விமானப் படைத்தளத்தை அகற்றுவோம் எனக் கூறியே ஆட்சியைக் கைப்பற்றினார். இந்த வாக்குறுதியை நிறைவேற்ற ஹற்றோயாமாவால் முடியவில்லை இதையடுத்து இவரின் கூட்டரசாங்கத்திலிருந்து ஒரு கட்சி வெளியேறியது. இதைத் தொடர்ந்து அரசாங்கத்துக்குள் விரிசல்கள் வளர்ந்தன. பின்னர் ஜுலை 11 இல் நடைபெறவுள்ள பாராளுமன்ற மேல் சபைத் தேர்தலைக் கருத்திற் கொண்ட டி. பி. ஜே. எம். பி க்கள் ஹற்றோயாமாவை பதவி விலகுமாறு நெருக்குதல் கொடுத்தனர். இதையடுத்து நிதியமைச்சர் நஓட்டாகான் பிரதமராக்கப்பட்டுள்ளார். 63 வயதான இவர் 1990 ம் ஆண்டு சுகாதார அமைச்சராகப் பதவி வகித்த காலத்தில் இவரின் செல்வாக்கு அதிகரித்தது. பின்னர் டி. ஜே. பி. தலைமையிலான புதிய அரசாங்கத்தில் முன்னாள் பிரதமர் ஹஜ்றோயாமாவின் அமைச்சரவையில் நிதியமைச்சராக்கப்பட்டார். எட்டு மாதங்கள் கழிந்த பின் நஓட்டாகான் டி. பி. ஜே. யின் தலைவராக்கப்பட்டு பிரதமராகியுள்ளார். இவர் ஒகினாவா விமானப் படை த்தளம், பொருளாதார அபிவிருத்தி, வட கொரியா விவகாரம் போன்ற விடயங்களைக் கையாளும் விதத்தில் அரசியல் எதிர்காலம் தங்கியுள்ளதாக அரசியல் அவதானிகள் அபிப்பிரா யம் தெரிவிக்கின்றனர். |
6/05/2010
| 0 commentaires |
0 commentaires :
Post a Comment