6/05/2010

புதிய கட்சிப் பதிவுக்கு அதிக விண்ணப்பம் 30 வரை ஏற்பு

புதிதாக அரசியல் கட்சிகளைப் பதிவு செய்ய விரும்புவோர் இம்மாதம் 30ம் திகதிக்கு முன்னதாக விண்ணப்பங்களை அனுப்பி வைக்க வேண்டுமெனத் தேர்தல்கள் திணைக்களம் அறிவித்துள்ளது.
பாராளுமன்றத் தேர்தல் மற்றும் ஜனாதிபதித் தேர்தல் ஆகியவற்றுக்கு முன்னதாக பதிவு நிராகரிக்கப்பட்ட கட்சிகளும் மீண்டும் விண்ணப்பிக்க முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பங்கள் யாவும் தேர்தல்கள் மேலதிக ஆணையாளர் டபிள்யூ. பீ. சுமணசிறிக்குப் பதிவுத் தபாலில் அனுப்பி வைக்கப்படுவதுடன் நேரிலும் கையளிக்கலாமென்று தெரிவிக்கப் பட்டுள்ளது.
அரசியல் கட்சிகளைப் பதிவு செய்வதற்கான விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்று வருவதாகவும் இம்மாதம் 30ம் திகதிக்குப் பின்னர் பதிவு செய்யப்பட்ட புதிய கட்சிகளின் விபரங்கள் வெளியிடப்படுமென்று தேர்தல்கள் திணைக்களத்தின் உயரதி காரியொருவர் ‘தினகரனு’க்குத் தெரிவித்தார்.
இதுவரை 66 அரசியல் கட்சிகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவ்வதிகாரி மேலும் தெரிவித்தார்

0 commentaires :

Post a Comment