2010 நிதியாண்டிற்கான அரசாங்கத்தின் மொத்தச் செலவாக 97,474 கோடி 83 இலட்சத்து 85 ஆயிரம் ரூபா என கணக்கிடப்பட்டுள்ளதாக நேற்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத் திட்ட யோசனையில் குறிப்பிடப்பட்டுள்ளது. பிரதமர் தி.மு. ஜயரத்ன வரவு செலவுத் திட்டத்தை பாராளுமன்றத்தில் நேற்று சமர்ப்பித்தார். இலங்கையில் இருந்தோ இலங்கைக்கு வெளியில் இருந்தோ கடனாக 89 ஆயிரம் கோடிக்கு அதிகமாக பெறமுடியாது எனவும் வரவு செலவுத் திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு அமைச்சுகளுக்குமான நிதி ஒதுக்கீடுகள் இதில் குறிப்பிடப்பட்டுள்ள தோடு பாதுகாப்பு அமைச்சிற்கே அதிகமான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன்படி பாதுகாப்பு அமைச்சிற்கு 20,221 கோடி 74 இலட்சத்து 80 ஆயிரம் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. நிதி திட்ட அமுலாக்கல் அமைச்சிற்காக 6348 கோடி 29 இலட்சத்து 55 ஆயிரம் ரூபாவும் சுகாதார அமைச்சிற்கு 5309 கோடி 65 இலட்சத்து 48 ஆயிரம் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதிக்கான நிதி ஒதுக்கீடாக 734 கோடி 37 இலட்சத்து 7 ஆயிரம் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் அபிவிருத்திப் பணிகளுக்காக 381 கோடி 50 இலட்சம் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. பொருளாதார அபிவிருத்தி அமைச்சிற்காக 6083 கோடி 66 இலட்சத்து 15 ஆயிரம் ரூபாவும் துறைமுக, விமான சேவை அமைச்சிற்காக 3090 கோடி 3 இலட்சத்து 35 ஆயிரம் ரூபாவும் போக்குவரத்து அமைச்சிற்கு 3509 கோடி 97 இலட்சத்து 4 ஆயிரம் ரூபாவும் மாகாண சபைகள் உள்ளூராட்சி சபை அமைச்சிற்கு 11,326 கோடி 30 இலட்சத்து 10 ஆயிரம் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் வடமாகாண சபைக்கு 1150 கோடி 71 இலட்சத்து 70 ஆயிரம் ரூபாவும் கிழக்கு மாகாண சபைக்கு 1369 கோடி 77 இலட்சத்து 60 ஆயிரம் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளது. இதேவேளை யாழ். மாவட்ட செயலகத்துக்கு 35 கோடி 81 இலட்சத்து 25 ஆயிரம் ரூபாவும் மன்னார் மாவட்ட செயலகத்துக்கு 12 கோடி 40 இலட்சம் ரூபாவும் வவுனியா மாவட்ட செயலகத்திற்கு 13 கோடி 98 இலட்சம் ரூபாவும் கிளிநொச்சி மாவட்ட செயலகத்திற்கு 12 கோடி 22 இலட்சம் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளது. மீள்குடியேற்ற அமைச்சுக்கு 307 கோடியே 43 இலட்சத்து 30 ஆயிரம் ரூபாவும், கல்வி அமைச்சுக்கு 2750 கோடியே 78 இலட்சத்து 10 ஆயிரம் ரூபாவும், பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சுக்கு 9553 கோடியே 91 இலட்சத்து 79 ஆயிரம் ரூபாவும் என்றபடி நிதியொதுக்கீடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. |
6/09/2010
| 0 commentaires |
0 commentaires :
Post a Comment