6/29/2010

புதிய மதுபான சாலை ஒன்று அமைக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து பாரிய ஆர்ப்பாட்டம்

சித்தாண்டியில் ஆர்ப்பாட்டம்.

img_6583இன்று (28.06.2010) காலை 7.00 மணியளவில் மட்டக்களப்பு மாவட்டத்தின் சித்தாண்டிப்பிரதேசத்தில் புதிய மதுபான சாலை ஒன்று அமைக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து சித்தாண்டி பொதுமக்கள், பொது அமைப்புக்கள் ஒன்றிந்து பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றினை மேற்கொண்டிருந்தார்கள். மேற்படி அமைக்கப்பட்ட மதுபானச்சாலை ஏற்கனவே வந்தாறுமூலை கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு அண்மையில் அமைந்திருந்தது இதனால் பல சமூக சீர்கேடுகள் ஏற்படுகின்றது. பல்கலைக்கழக மாணவர்கள் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் என்பதனால் பல்கலைக்கழக மாணவர்கள் ஆணைக்ககுழு மற்றும் பல்கலைக்கழக நிருவாகம் உரிய அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு வந்ததையிட்டு அவ் மதுபானசாலை உடனடியாக அகற்றப்பட்டது. அக்குறித்த மதுபான சாலை தற்போது சித்தாண்டிப்பிரதேசத்தில் அமைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
மேற்படி அர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட மக்கள் சுமார் 1மணி நேரம் மதுபானசாலைக்கு முன்பாக நின்று ஆரவாரம் செய்தார்கள், இவ் இடத்திற்கு விரைந்த ஏறாவூர் பொலீஸ் பொறுப்பதிகாரி குறித்த ஆர்ப்பாட்டகாரர்களை உடனடியாக கலைந்து செல்லும்படியும் இன்றிலிருந்து இவ் மதுபானசாலை மூடப்படும் எனவும் அதற்கு தானே பொறுப்பு எனவும் குறித்த பொலீஸ் உயரதிகாரி உறுதியளித்தார். இதனை தொடர்ந்து மக்கள் கலைந்து சென்றார்கள். இது தொடர்பில் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனுக்கு அப்பிரதேச மக்கள் ஓர் மகஜரையும் சமர்ப்பித்திருக்கின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவ் மதுபானச் சாலை தொடர்பில் ஓர் ஆமைச்சருக்கு நேரடி தொடர்பு இருப்பதாக அறியமுடிகின்றது என அப்பிரதேச வாசிகள் குறிப்பிடுகின்றனர். அத்தோடு இது போன்ற பல மதுபானச்சாலைகள் கிராமங்கள் தோறும் அமைக்கப்பட்டுக் கொண்டே வருகின்றது. இதற்கு குறித்த ஓர் அமைச்சர் துணைபுரிந்து செயற்பட்டு வருவதாக அறியக்கிடைக்கிறது. உதாரணமாக வாகரைப் பிரதேசத்தில் ஒரு மதுபானச்சாலை அமைத்துத் தருவதாக கூறி 30 இலட்சம் ரூபாயை அவ்வமைச்சர் பெற்றிருப்பதாகவும், அவ் மதுபான சாலை வாகரையில் இயங்கி வருவதாகவும் அறியமுடிகின்றது. யுத்தத்தினாலும், சுனாமி மற்றும் இயற்கை அனர்த்தங்களாலும் பல வழிகளிலும் நலிவடைந்து இருக்கும் எமது சமூகத்தினை மீட்சி பெறச் செய்யாமல் இது போன்ற சமூக விரோத நடவடிக்கைகளில் ஈடுபடத்தூண்டுகின்ற இவ்வாறான செயற்பாடுகளுக்கு எமது பிரதேசம் சார்ந்த அரசியல் பிரமுகர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் உடந்தையாக இருப்பது வேதனையே.
மீன்மகளுக்காக நரசிம்மன்.
                                                                                                                                               
»»  (மேலும்)

இணைந்த சமூகம் பிணைந்து நின்றால் எதனையும் சாதிக்கலாம்- முதல்வர் சந்திரகாந்தன்.

தமிழர், முஸ்லிம், சிஙகளவர் என்ற பாகுபாடுகளை கடந்து எமது சமூகம் ஒற்றுமையாக இணைந்து செயற்பட்டால் நாம் எதனையும் சாதிக்கலாம் என கிழக்கு மாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் குறிப்பிட்டார். நேற்று அட்டாளைச்சேனையில் மாகாண சபை மற்றும் உள்ளுராட்சி அமைச்சர் எ.எல்.எம். அதாவுல்லா அவர்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்ட வரவேற்பு நிகழ்விற்கு விசேட அதிதியாக கலந்து கொண்ட த.ம.வி.பு கட்சியின் தலைவரும் கிழக்கு மாகாண முதலமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் குறிபிடுகையில் கிழக்கு மாகாணம் பிரிக்கப்படவேண்டும் என்பதில் மிகவும் அக்கறையோடும் அதீத நம்பிக்ககையோடும் செயற்பட்ட கட்சி எமது தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியும் தேசிய காங்கரசுமே ஆகும். இக் கிழக்கு மாகாணம் இன்று எல்லோராலும் பேசப்படுகின்றமைக்கு இவ்விரு கட்சிகளினதும் தலைமை மற்றும் உறுப்பினர்கள், இக்கட்சியின் பங்காளர்கள் போராளிகள், தொண்டர்கள் அனைவருமே இதன் பங்குதாரர்கள் ஆவார். மிகவும் நீண்ட கால தூர நோக்கு சிந்தனையுடன் அன்று செயற்பட்டு இன்று எமது கிழக்கு மக்களின் தனித்துவத்தில் அக்கறைகொண்டு நாம் செயற்கின்றோம் கிழக்கு மாகாண சபை ஒன்று அமைக்கப்பட்டு இன்று இரண்டு வருடங்கள் கடந்துவிட்டாலும் எழுதப்பட்ட அதிகாரங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டாலும் கூட இன்று இருக்கின்ற அதிகாரங்களுக்குள்ளேயே நாம் எமது கிழக்கு மாகாணத்தை அபிவிருத்தி செய்து கொண்டு செல்கின்றோம். மூவின மக்களும் ஒற்றுமையுடன் வாழ்கின்றோம். மூவின அரசியல் தலைமைகளும் ஒருமித்து பேசுகின்றோம். இதற்கெல்லாம் இத்தேசிய காங்கிரசின் செயற்பாடு அளப்பரியது அப்படிப்பட்ட தலைமைக்கு பாராட்டு என்றால் நான் கிழக்கு தமிழ் மக்களின் தமிழ் தலைவன் என்ற வகையில் இதில் கலந்து கொள்வதனையிட்டு நான் பெருமையடைகின்றேன் எனவும் குறிப்பிட்டார்.
எது எவ்வாறாயினும் எமது மக்கள் எதிர் காலத்தில் அனைத்து வழிகளிலும் சிறப்பாகச் செயற்பட்டு சிறுபான்;மைச் சமூகத்தின் அரசியல் தலைவர்கள் என்ற வகையில் ஒருமித்துச் செயற்பட வேண்டும் அப்போதுதான் நாம் நினைத்தவற்றை சாதகமான அனுபவங்களை எம்மால் அடைய முடியும் எனவும் குறிப்பிட்டார்.
இந்நிகழ்வில் அட்டாளைச்சேனை விவசாய சங்கத்தால் முதல்வருக்கு தங்கப்பதக்கம் வழங்கி கௌரவிக்கப்பட்டது. மாகாண அமைச்சர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
»»  (மேலும்)

ஐ. நா. பாதுகாப்புக் கவுன்சிலில் நிரந்தர உறுப்பினர்: இந்தியாவுக்கு பிரிட்டன், பிரான்ஸ் ஆதரவு

ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர உறுப்பினர் பதவி அளிப்பதற்கு பிரி ட்டன், பிரான்ஸ் நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
ஜி-20 உச்சி மாநாடு கனடாவின் டொரண்டோ நகரில் நடைபெற்று வருகிறது.
இந்த மாநாட்டில் பங்கேற்பத ற்காக பிரதமர் மன்மோகன் சிங் டொரண்டோ வந்துள்ளார்.
மாநாட்டையொட்டி சனிக்கிழமை இரவு நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரிட்டனின் புதிய பிரதமர் டேவிட் கேமரூன், பிரான்ஸ் அதிபர் நிக் கோலஸ் சர்கோஸி ஆகியோரை பிரதமர் மன்மோகன் சிங் சந்தித்துப் பேசினார்.
ஜுலையில் பிரிட்டன் பிரதமர் இந்தியா வருகை : பிரிட்டனின் பிரதமராக கேமரூன் பதவியேற்ற பிறகு அவரை பிரதமர் மன்மோகன் சிங் இப்போது தான் முதல் தடவையாக சந்தித்துள்ளார். மேலும் இந்தியாவுக்கு வருமாறு கேமரூனுக்கு அழைப்பு விடுத்தார் பிரதமர். பிரதமரின் அழைப்பை ஏற்று ஜுலையில் இந்தியா வருவ தாக கேமரூன் உறுதி அளித்துள்ளார். உயர் கல்வி பயில்வதற்காக கூடுதல் எண்ணிக்கையில் இந்திய மாண வர்கள் பிரிட்டன் வரவேண்டும் என்று பிரதமர் கேமரூன் அழைப்பு விடுத்தார். பின்னர் இருவரும் ஜி 20 உச்சி மாநாடு குறித்து தங்களது கருத்துகளை பரிமாறிக் கொண் டனர்.
ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர உறுப்பினர் பதவி அளிப்பது தொடர்பாக பிரிட்டன் ஆதரவு அளிக்கும் என்று அப்போது மன் மோகன் சிங்கிடம் கேமரூன் உறுதி அளித்தார்.
பின்னர் பிரான்ஸ் ஜனாதிபதி நிக்கோலஸ் சர்கோஸியை, பிரதமர் மன்மோகன் சிங் சந்தித்துப் பேசி னார். அதிபர் சர்கோஸி, அவரது மனைவி கர்லா புரூனி ஆகியோர் மீண்டும் இந்தியாவுக்கு வர வேண்டும் என்று பிரதமர் மன் மோகன் சிங் அழைப்பு விடுத்தார். ஜி 20 உச்சி மாநாடு மட்டுமல்லா மல், உலக விவகாரங்களில் இந்தியா முக்கியமான பங்கை ஆற்ற வேண்டும் என்று பிரான்ஸ் விரும்புவதாக பிரதமர் மன்மோகன் சிங்கிடம் சர்கோஸி தெரிவித்தார்.
ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர உறுப்பினர் பதவியைப் பெற்றுத் தர பிரான்ஸ் ஆதரவு அளிக்கும் என்றார் அவர். இந்தியாவுடன் வர்த்தகத்தில் ஈடுபட்டிருக்கும் ஐரோப்பிய நாடுகளில் பிரான்ஸ் 5 வது இடத்தைப் பிடித்துள்ளது குறிப்பிட த்தக்கது.
 

»»  (மேலும்)

ஜனாதிபதி இன்று உக்ரேய்னுக்கு விஜயம்

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று (29) உக்ரேய்ன் ஜனாதிபதி விக்டர் யனு கோவிச்சின் விசேட அழைப்பினையேற்று உக்ரேய்னுக்கான விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார்.
ஐந்து நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு அங்கு செல்லும் ஜனாதிபதி, அந்நாட்டின் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் சிரேஷ்ட அமைச்சர்கள் பலரை சந்தித்து பேச்சு நடத்தவுள்ளார். ஜனாதிபதி உக் ரேய்ன் நாட்டின் தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகத்திற்கு விஜயம் செய்யவிருப்ப துடன் இலங்கை- உக்ரேய்ன் வர்த்தக பேரவை கூட்டங்களிலும் கலந்து கொள்வார்.
இவ்விஜயத்தின் மூலம் இரு நாடுகளுக்குமிடையிலான வர்த்தக, பொருளாதார, சுற்றுலா மற்றும் மனிதவள அபிவிருத்தி செயற்பாடுகள் மேலும் வலுப்பெறுமென எதிர்பார்க்கப்படுகிறது.
உக்ரேய்னுக்கு ஜனாதிபதியுடன் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க ஆகியோர் செல்லவிருப்பதாகவும் வெளிவிவகார அமைச்சு தெரிவித்தது.
 
»»  (மேலும்)

வடக்குக்கு புதிதாக 250 வைத்தியர்கள் தாதியர்கள் பற்றாக்குறையை நீக்கவும் புதிய நியமனம்

வட மாகாணத்தில் நிலவி வரும் வைத்தியர்கள் மற்றும் தாதிமார்கள் பற்றாக்குறையை உடனடியாக நிவர்த்தி செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இதற்கமைய வட மாகாணத்திலுள்ள ஐந்து மாவட்டங்களுக்கும் 250 வைத்தியர்களும், 250 தாதிமார்களும் புதிதாக நியமிக்கப்படவுள்ளதாக வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி. ஏ. சந்திரசிறி தெரிவித்தார்.
சுகாதார அமைச்சு இந்த புதிய நியமனங்களுக்கான சகல ஏற்பாடுகளையும் பூர்த்தி செய்து அதற்கான ஆவணங்களை தனக்கு அனுப்பி வைத்துள்ளதாக தெரிவித்த ஆளுநர், ஜுலை மாதத்தில் வைத்தியர்களும், ஆகஸ்ட் மாதத்தில் தாதிமார்களும் நியமிக்கப்படவுள்ளனர் என்றும் குறிப்பிட்டார்.
வட மாகாண சபையின் கீழ் இயங்கும் வைத்தியசாலைகளில் நிலவும் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் வகையிலேயே புதிதாக வைத்தியர்கள் மற்றும் தாதிமார்களை உடனடியாக நியமிக்க தீர்மானித்ததாக அவர் மேலும் தெரிவித்தார்.
இதற்கமைய யாழ்ப்பாண மாவட்டத்திற்கு 54 வைத்தியர்களும், வவுனியா மாவட்டத்திற்கு 34 வைத்தியர்களும், மன்னார் மாவட்டத்திற்கு 56 வைத்தியர்களும், கிளிநொச்சி மாவட்டத்திற்கு 52 வைத்தியர்களும், முல்லைத்தீவு மாவட்டத்திற்கு 54 வைத்தியர்களும் என்ற அடிப்படையில் மொத்தமாக 250 டாக்டர்கள் புதிதாக நியமிக்கப்படவுள்ளனர்.
இதேவேளை, யாழ்ப்பாண மாவட்டத்திற்கு 77 தாதிமார்களும், வவுனியா மாவட்டத்திற்கு 62 தாதிமார்களும், மன்னார் மாவட்டத்திற்கு 48 தாதிமார்களும், கிளிநொச்சி மாவட்டத்திற்கு 52 தாதிமார்களும், முல்லைத்தீவு மாவட்டத்திற்கு 40 தாதிமார்களும் என்ற அடிப்படையில் 250 தாதிமார்களும் புதிதாக நியமிக்கப்படவுள்ளனர் என்றும் ஆளுநர் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை இடம்பெயர்ந்த மக்களுக்காக வவுனியா, செட்டிக்குளம் பிரதேசத்தில் அமைக்கப்பட்டிருந்த நவீன வசதிகளைக் கொண்ட தற்காலிக வைத்தியசாலைகளை மன்னார், கிளிநொச்சி மாவட்டத்தில் தேவைப்படும் பகுதிகளுக்கு எடுத்துச் செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.
இதற்கமைய தற்காலிக வைத்திய சாலைகள், வைத்தியர்கள் தங்கும் அறைகள் மற்றும் உபகரணங்கள் என்பன எடுத்துச் செல்லப்படவுள்ளன. இடம்பெயர்ந்த மக்களில் அனேகமானவர்கள் தமது சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட் டுள்ளதனால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக ஆளுநர் தெரிவித்தார்.
விசேடமாக பூநகரி, துணுக்காய், முசலி, நானாட்டான், மாந்தை போன்ற பகுதிகளுக்கு இந்த தற்காலிக வைத்திய சாலைகள் முதற்கட்டமாக மாற்றப்பட வுள்ளன என்றும் குறிப்பிட்டார்.
»»  (மேலும்)

6/27/2010

அரசியல் தீர்வுக்கான கூட்டுச் செயற்பாடு

ஆறு தசாப்தங்களாக இலங்கையின் இனப் பிரச்சினை தமிழ் மக்களின் அரசியலில் பிரதான இடத்தை வகி த்து வருகின்றது. ஒவ்வொரு தேர்தலின் போதும் இதுவே பிரதான பேசுபொருள். இப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படப்போவதாக உணர்ச்சிகரமாக வாக்கு றுதி அளிப்பவர்களை மக்கள் ஒவ்வொரு தேர்தலிலும் தேர்ந் தெடுத்தார்கள். ஆனால் இன்று வரை தீர்வு கிடைக்கவில்லை.
தீர்வின்றி இனப் பிரச்சினை இழுபடுவதற்குச் சிங்களத் தலைவர்கள் மீது குறை கூறுவது தமிழ்த் தலைமைகளின் வழக்கமாகிவிட்டது. இத் தலைமைகள் கூறுவது போல சிங்களத் தலைவர்கள் தடை யாக இருப்பதாலேயே பிரச்சினை தீராதிருக்கின்றதென்றால், பிரச் சினைக்குத் தீர்வு காணப்போவதாக ஒவ்வொரு தேர்தலிலும் தமி ழ்த் தலைவர்கள் வாக்குறுதி அளிப்பதில் அர்த்தமில்லை. பிரச் சினை தீராதிருப்பதற்குச் சிங்களத் தலைவர்களின் தடை காரண மல்ல என்பதே இந்த வாக்குறுதியின் அர்த்தம்.
தமிழ்த் தலைவர்கள் தூரதிருஷ்டியுடனும் யதார்த்தபூர்வமாகவும் சிந் தித்துச் செயற்பட்டிருந்தால் பிரச்சினைக்கு எப்போதோ தீர்வு காண முடிந்திருக்கும் என்பதே உண்மை நிலை. தீர்வை நோக் கிச் செல்வதற்குக் கிடைத்த சந்தர்ப்பங்களைத் தமிழ்த் தலை வர்கள் சரியாகப் பயன்படுத்தத் தவறிவிட்டார்கள். இனப் பிரச்சி னையின் வரலாற்றை எடுத்துப் பார்த்தால் தமிழ்த் தலைவர்கள் இழந்த சந்தர்ப்பங்கள் அநேகம்.
பண்டா-செல்வா ஒப்பந்தம் சமஷ்டி அடிப்படையிலான தீர்வின் ஆரம்பம் என்று எஸ். ஜே. வி. செல்வநாயகம் கூறியிருந்தார். துர திஷ்டவசமாக அந்த ஒப்பந்தத்தைக் கைவிட வேண்டிய நிலை ஏற்பட்டது. எனினும் ஒப்பந்தத்தின் சரத்துகளை நடைமுறைக்குக் கொண்டு வருவதற்கான இரண்டு சந்தர்ப்பங்கள் பிந்திய நாட் களில் கிடைத்த போதிலும் தமிழ்த் தலைவர்கள் அவற்றை நிரா கரித்துவிட்டனர்.
பொதுசன ஐக்கிய முன்னணி அரசாங்கம் முன்வைத்த அதிகாரப் பகிர்வுத் தீர்வுத்திட்டமும் பண்டா-செல்வா ஒப்பந்தத்தைப் போல் சமஷ்டித் தன்மை கொண்டதே. இத் தீர்வுத் திட்டத்துக்கு ஆரம் பத்தில் ஆதரவு தெரிவித்துவந்த தமிழ்த் தலைவர்கள் கடைசி நேரத்தில் ஆதரவை விலக்கிக்கொண்டு தனிநாட்டு நிகழ்ச்சி நிர லின் பக்கம் திரும்பினார்கள்.
இவையிரண்டும் தமிழ்த் தலைவர்கள் இழந்த சந்தர்ப்பங்களுள் பிர தானமானவை. இவ்வாறு ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும் இழந்த தன் விளைவாகவே இனப் பிரச்சினை இன்றுவரை தீர்வின்றியி ருக்கின்றது. இப்போது இன்னொரு சந்தர்ப்பம் கிடைத்திருக்கின் றது. இதைச் சரியாகப் பயன்படுத்துவதற்கு எல்லாத் தமிழ்க் கட் சிகளும் முன்வர வேண்டும்.
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் வாசஸ்தலத்தில் தமிழ்க் கட்சி களின் சந்திப்பொன்று அண்மையில் நடைபெற்றது. தமிழ் மக் கள் நாளாந்த வாழ்வில் முகங்கொடுக்கின்ற பிரச்சினைகளுக்கும் இனப் பிரச்சினைக்கும் தீர்வு காண்பதற்கான கூட்டுச் செயற் பாடொன்றின் முன்னோடியாக இச் சந்திப்பு அமைந்ததெனக் கருதலாம். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் அமைச்சர் தேவா னந்தா அழைப்பு விடுத்திருக்கின்றார்.
அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பால் பொது நோக்கத்துக்காகக் கூட் டாகச் செயற்படுவதற்குக் கிடைத்திருக்கும் இச் சந்தர்ப்பத்தைச் சரியான முறையில் எல்லாக் கட்சிகளும் பயன்படுத்த வேண்டும். தீர்வுக்கான நீண்டகால வேலைத்திட்டத்தையும் குறுகியகால வேலை த்திட்டத்தையும் தயாரித்துத் தென்னிலங்கையிலுள்ள நட்பு சக்திக ளுடன் இணைந்து செயற்படும் பட்சத்தில் தீர்வு நிச்சயம் சாத்திய மாகும்.
»»  (மேலும்)

செம்மொழி மாநாட்டின் இறுதிநாள் நிகழ்வு இன்று

தமிழகத்தின் கோவையில் நடை பெற்றுவரும் உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டின் இறுதிநாள் நிகழ்வு இன்று மிகவும் கோலாகலமாக நடைபெறுகிறது. நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமையில் நடைபெறும் இந்நிகழ்வில் தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி உரை யாற்றுகிறார். நிறைவு நாளான இன்று பாதுகாப்பு கடமையில் சுமார் 10,000 பொலிஸார் சேவையில் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர்.
இன்று காலை நடைபெறும் கருத்தரங்கில் நடிகர் சிவகுமார் உரையாற்றுகிறார். ‘வித்தாக விளங்கும் தமிழ் மொழி’ என்ற தலைப்பில் அவர் சிறப்புரை யாற்றவுள்ளார்.
உலகம் முழுவதும் வாழும் தமிழர்கள் ஆவலோடு எதிர்பார்த்த தமிழ் அன்னைக்கு சீர்மிகு மாநாடாக உலகத் தமிழ் செம் மொழி மாநாடு கடந்த 23ம் திகதி கோவை யில் கோலாகலமாக தொடங்கியது. முதலமைச்சர் கருணாநிதி தலை மையில் ஜனாதிபதி பிரதீபா பட்டீல் மாநாட்டை தொடக்கி வைத்தார். ஆளுனர் சுர்ஜித்சிங் பர்னாலா கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.
2வது நாளில் ஆய்வரங்கை முதலமைச்சர் கருணாநிதி தொடக்கி வைத்தார். சிறப்பு மலரை நிதி அமைச்சர் பேராசிரியர் அன்பழகன் வெளியிட்டார்.
3ம் நாளான காலையில் கவிப்பேரரசு வைரமுத்து தலைமையில் கவியரங்கம், சத்தியசீலனை நடுவராகக் கொண்ட பட்டிமன்றம் என்பன நடந்தன. மாலையில் முதலமைச்சர் கருணாநிதி தலைமையில் “எங்கும் தமிழ் எதிலும் தமிழ்” என்ற தலைப்பில் சிறப்புக் கருத்தரங்கம் நடந்தது. சனிக்கிழமை கவிஞர் வாலி தலைமையில் கவியரங்கமும் சாலமன் பாப்பையாவை நடுவராகக் கொண்ட பட்டிமன்றமும் நடந்தது.
தமிழ் மொழியின் வற்றாத ஊற்றெடுத்த செம்மொழி மாநா ட்டின் நிறைவு விழாவும், தமிழ் இணைய மாநாட் டின் நிறைவு விழாவும் இன்று மாலை 4 மணி க்கு நடைபெறும். இதற்கு மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமை தாங்குகிறார். மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் முன்னிலை வகிக்கிறார். மத்திய தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஆ. ராசா சிறப்பு முத்திரையை வெளியிடுகிறார். முதலமைச்சர் கருணாநிதி மாநாட்டு நிறைவு பேரூரையை ஆற்றுவார். முன்னதாக தலைமை நிலைய செயலாளர் ஸ்ரீபதி வரவேற்புரை ஆற்றுவார். மாநாட்டு தனி அலுவலர் அலாவுதீன் நன்றியுரை நிகழ்த்தவுள்ளார்.
»»  (மேலும்)

மட்டக்களப்பு கல்வியில் கல்லூரியில் உலக நாடக தின விழா - முதல்வர் பிரதம அதிதியாக பங்கேற்பு.

மட்டக்களப்பு கல்வியில் கல்லூரியில் உலக நாடக தின விழா - முதல்வர் பிரதம அதிதியாக பங்கேற்பு. நேற்று(25.06.2010) மட்டக்களப்பு கல்லூரியில் உலக நாடக தின விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது இந்நிகழ்வில் கிழக்கு மாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் முதன்மை அதிதியாக கலந்து இந்நிகழ்வை ஆரம்பித்து வைத்தார்.
»»  (மேலும்)

6/26/2010

ஐ.நா. ஆலோசனைக் குழுவுக்கு ரஷ்யா கண்டனம்

ஐக்கிய நாடுகளின் அதிகாரிகள் அல்லது இலங்கை அதிதிகளின் அனுமதியின்றி ஐ.நா. செயலாளர் நாயகம், பான் கீ மூன் ஆலோசனைக் குழு நியமித்துள்ளமையையிட்டு ரஷ்யா தனது கண்டனத்தை வெளியிட்டுள்ளது.
இலங்கையில் உள்நாட்டு விசாரணைக்காக இலங்கை அரசு குழுவொன்றை அமைத்துள்ள நிலையில் இவ்வாறான குழுவொன்று பான் கீ மூனுக்கு தேவையற்றது என்றும் ரஷ்யா தெரிவித்துள்ளது.
ரஷ்யாவின் வெளியுறவுத்துறை அமைச்சின் அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான குழு ஒன்று நியமிக்கப்படும் பட்சத்தில், பான் கீ மூன் ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபையில் யோசனை ஒன்றை சமர்ப்பித்திருக்க வேண்டும். எனினும் பான் கீ மூன் அவ்வாறு செய்யவில்லை என அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இலங்கையின் யுத்த குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணை நடத்தாமல், சர்வதேச மனித உரிமை சட்டங்களுக்கு எதிரான வன்முறைகள் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்து பான் கீ மூனுக்கு இந்த குழு ஆலோசனையை மாத்திரமே வழங்கும் என ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
எனினும் இந்த குழு ஐக்கிய நாடுகளின் அதிகாரிகள் அல்லது இலங்கை அதிகாரிகளின் அனுமதி இன்றி நியமிக்கப்பட்டுள்ளது. எனவே ஐக்கிய நாடுகள் சபையின் தலைமை அதிகாரி என்ற வகையில் பான் கீ மூன் தமது அதிகாரத்தையும் பொறுப்பையும் மீறியிருப்பதாக ரஷ்ய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கிடையில் இந்த குழுவுக்கு இலங்கையிலும் எதிர்ப்புகள் வெளியாகியுள்ளன. இலங்கையில் உள்நாட்டு விசாரணைக்காக மாண்புமிக்கோர் குழு ஒன்று உருவாக்கப்பட்டுள்ள நிலையில், இவ்வாறான குழு ஒன்று பான் கீ மூனுக்கு தேவை அற்றது என ரஷ்யா தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும் யுத்த காலத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் யுத்த குற்றங்கள் மனித உரிமை மீறல்கள் உள்ளிட்ட வன்முறை சம்பவங்கள் குறித்து விசாரணை நடத்தும் பொறுப்பு இலங்கை அரசாங்கத்திடமே காணப்படுகிறது.
இந்த நிலையில் ஐக்கிய நாடுகள் சபையின் ஆலோசனைக் குழு இலங்கைக் கான விஜயத்தை மேற்கொள்ளாது என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், விசாரணை உள்ளிட்ட விடயங்களை மேற்கொள்ளாது என ரஷ்யா நம்புவதாகவும் அந்த அறிக் கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது
»»  (மேலும்)

6/25/2010

ஜூலை 14ல் கிளிநொச்சியில் அமைச்சரவை கூட்டம் நடத்த அரசு தீர்மானம்

அடுத்த அமைச்சரவைக் கூட்டத்தை எதிர்வரும் ஜூலை 14 ம் திகதி கிளிநொச்சி நகரில் நடத்துவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல கூறினார்.
அமைச்சரவை கூட்டத்திற்கு முதல்நாள் சகல அமைச்சுக்களின் பங்களிப்புடன் நடமாடும் சேவையொன்றை நடத்தி அப்பகுதி மக்களின் பிரச்சினைகளுக்கு துரித தீர்வு காணவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு நேற்று தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது. இங்கு கருத்துத் தெரிவித்த அமைச்சர் மேலும் கூறியதாவது,
அமைச்சரவை மாநாடுகள் தொடர்ந்து கொழும்பிலேயே நடத்தப்பட்டு வருகிறது. ஆனால், இனிமேல் ஒவ்வொரு பிரதேசங்களில் அமைச்சரவை கூட்டங்களை நடத்துவதற்கு ஜனாதிபதி யோசனை முன்வைத்தார். இதன்படி, முதலாவது அமைச்சரவை கூட்டம் கிளிநொச்சியில் நடத்தப்படும். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டையும் அங்கேயே நடத்த முடியும்.
 
»»  (மேலும்)

ஐநா குழுவினர் இலங்கைவர அனுமதிக்க மாட்டோம் : அமைச்சர் பீரிஸ் _

 
 
  இலங்கை தொடர்பாக ஐக்கியநாடுகள் சபை செயலாளர் நாயகம் பான் கீ மூன் குழுவை நியமித்துள்ளமை ஏற்றுக் கொள்ள முடியாதது மட்டுமன்றி துரதிஷ்டவசமான விளைவுகளையும் இது ஏற்படுத்தும். எவ்வாறாயினும் இந்தக் குழுவினர் இலங்கைவர அனுமதிக்கப்பட மாட்டார்கள் என வெளி வெளிகார அமைச்சர் பேராசிரியர் ஜி. எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.

வெளிவிவகார அமைச்சில் இன்று காலை இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

ஐக்கிய நாடுகள் சபையானது இலங்கை விடயத்தில் மேற்கொண்டுள்ள தலையீடானது விடயங்களை சிக்கலாக்கக் கூடியதுடன் எதிர்மறை விளைவுகளையே கொண்டுவரும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இங்கு அமைச்சர் ஜிஎல் பீரிஸ் மேலும் கருத்து வெளியிடுகையில்,

"தற்போது ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர்நாயகம் நியமித்துள்ள ஆலோசனைக் குழுவானது முன்னர் பேசப்பட்ட விடயத்திலிருந்தும் மாறுபட்ட ஒன்றாகும். ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை உட்படப் பலர் கோரி வந்த விசாரணைக் குழுவிலிருந்து தற்போதைய குழு மாறுபட்டுள்ளது.

விசாரணை நடத்துவது குறித்து தமக்கு எவ்வித எண்ணமுமில்லை என ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் சார்பாக பேசவல்ல அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். இது ஆலோசனைக்குழு, மாறாக உண்மைகளை தேடிக் கண்டறியும் குழுவல்ல, இது செயலாளர் நாயகத்திற்கு ஆலோசனைகளை மட்டுமே வழங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் நாம் இந்த நியமனத்தை வன்மையாக நிராகரிக்கின்றோம். இது எந்த வகையிலும் உதவக்கூடியதோ காலத்திற்குகந்ததோ அல்ல. நாம் எமது நாட்டில் படிப்பினைகளைக் கற்பதற்கும் நல்லிணக்கத்திற்குமான ஆணைக்குழுவை நியமித்துள்ளோம். அந்தக் குழுவிலுள்ளவர்கள் தகைமையுடையவர்கள்.

அனைத்து விடயங்கள் தொடர்பாகவும் விசாரணைகளை நடத்துவதற்கு அதிகாரம் கொண்டவர்கள். அப்படியிருக்கும் போது, அந்த ஆணைக்குழுவின் செயற்பாடுகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் ஐநாவின் குழு நியமனத்தை ஏற்றுக் கொள்ள முடியாது. இது துரதிஷ்டவசமானது; பின்விளைவுகளை ஏற்படுத்தக்கூடியது; எதிர்மறையான விளைவுகளையே இது ஏற்படுத்தும்" என்றார்.

பின்விளைவுகளை ஏற்படுத்தும் எனக்குறிப்பிட்டீர்களே.... எவ்வாறான பின்விளைவுகள் என தெளிவுபடுத்த முடியுமா என ஊடகவியலாளர் ஒருவர் வினவியபோது,

"மக்களின் உணர்வுகள் இதனுடன் தொடர்புபட்டுள்ளன. இது தேவையற்ற தலையீடு என மக்கள் உணர்கின்றனர். எவ்வாறாயினும் இந்தக் குழுவில் உள்ளவர்கள் இலங்கைக்கு வர அனுமதிக்கப்பட மாட்டார்கள்" என அமைச்சர் குறிப்பிட்டதுடன் தற்போதைய நிலையில் இது தேவையற்றதெனவும் சுட்டிக்காட்டினார். ___ 

   
 
»»  (மேலும்)

பாசிக்குடாவில் உல்லாச ஹோட்டல் : அடிக்கல் நாட்டினார் பசில்

 
  மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பாசிக்குடா பகுதிக்கு, நேற்று முன் தினம் விஜயம் மேற்கொண்ட அமைச்சர் பசில் ராஜபக்ஷ, அங்கு உல்லாச ஹோட்டல் ஒன்றை நிர்மாணிப்பதற்கான அடிக்கலை நாட்டி வைத்தார்.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த அமைச்சர் விநாயக மூர்த்தி முரளிதரன் கூறுகையில்,

"பாசிக்குடா பகுதி அபிவிருத்தி செய்யப்பட இருக்கிறது. பாசிக்குடா பகுதியில் அரச தரப்பில் அமைக்கப்படும் முதலாவது ஹோட்டல் இது. 5 வருடங்களில் இதனூடாக 10,000 பேர் வரை வேலைவாய்ப்பைப் பெறக்கூடியதாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

இங்கு பாடசாலைகள், மற்றும் பொது கட்டிடங்கள் என்பனவும் அமைக்கப்படவுள்ளன" என்றார்.

கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுறை சந்திரகாந்தன் கருத்து தெரிவிக்கையில்,

"கிழக்கு மாகாணம் என்பது சுற்றுலாத்துறைக்கு முக்கிய வாய்ந்தது. எனவே சுற்றுலாத்துறையை அபிவிருத்தி செய்யும் நோக்கில் பாசிக்குடா பகுதியில் ஹோட்டலுக்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.

அந்த வகையில் எதிர்காலத்தில் பாசிக்குடா பிரதேசம் வெளிநாட்டு மக்களைக் கவரும் ஒரு பிரதேசமாக மாறும் என்பதில் ஐயமில்லை.இது கிழக்கு மாகாண மக்களுக்கு சுயதொழிலில் அபிவிருத்தியைக் காணக்கூடியதாகவும் அமையும்" என்றார். பசில் ராஜபக்ஷ

"கிழக்கு மாகாணம் பல அரிய வளங்களைக் கொண்டது என்ற வகையில், பாசிக்குடா பகுதியில் முதன் முறையாக அரச தரப்பில் இவ்வாறான ஒரு ஹோட்டல் அமைக்கப்படுகிறது. தனியார் துறையினருடன் இணைந்து இந்த ஹோட்டலை அமைக்க சுற்றுலாத்துறை ஒத்துழைப்பு வழங்குகிறது.

இதனால் 2500 இளைஞர் யுவதிகள் உடனடி வேலைவாய்ப்புப் பெறுவர்
»»  (மேலும்)

தமிழ் கட்சிகள் இணைந்து பொது உடன்பாடு குறித்து இன்று மாலை கொழும்பில் சந்தித்து பேச்சுவார்த்தை நடாத்தினர்.


தமிழ் மக்களின் அரசியலுரிமை பிரச்சினைக்கான அணுகுமுறை குறித்து பொது உடன்பாடு காணவும் மற்றும் அன்றாட அவலங்களுக்கு உடனடித் தீர்வு காண்பதில் ஒருமித்து செயற்படும்  நோக்கிலும் தமிழ் கட்சிகளுக்கிடையிலான சந்திப்பு ஒன்று இன்று மாலை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின வாசஸ்தலத்தில் நடைபெற்றுள்ளது.

இச்சந்திப்பின் போது தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் திரு.வீ.ஆனந்தசங்கரி புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் ஈபிஆர்எல்எப் (நாபா) அணியின் தலைவர் திரு சிறிதரன் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான திரு.சிவாஜிலிங்கம் திரு.சிறிகாந்தா சிறி ரெலோ அமைப்பின் தலைவர் திரு உதயன் ஈரோஸ் கட்சியின் செயலாளர் திரு பிரபா மனித உரிமைளுக்கான ஆர்வலர் ஷெரீன் சேவியர் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் மேற்படி சந்திப்பில் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.





»»  (மேலும்)

6/24/2010

கனடாவில் ஜி-8, ஜி-20 மாநாடு: வரலாறு காணாத பாதுகாப்பு

கனடாவில் நடபெறவுள்ள ஜி8 ஜி 20 மாநாட்டுக்காக அங்கு வரலாறு காணாத பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
மொத்தம் 3 நாள்கள் இந்த மாநாடு ஆண்டாரியோ மற்றும் டொரண்டோ நகரங்களில் நடைபெறவுள்ளது. ஜூன் 25, 26ம் திகதிகளில் ஹன்ட்ஸ்வில் நகரிலும் ஜூன் 26, 27ம் திகதிகளில் டொரண்டோ நகரிலும் மாநாட்டை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஜி8 ஜி 20 மாநாடுகளுக்காக இரு நகரங்களிலும் வரலாறு காணாத அளவுக்குப் பலத்தபாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்டோர் இந்த மாநாட்டில் கலந்து கொள்ளவுள்ளதால் இந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகெங்கிலுமிருந்து 150க்கும் மேற்பட்ட புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் கனடாவுக்கு வந்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். மாநாட்டின் போது அசம்பாவித சம்பவம் நடைபெறாமல் தடுப்பதற்காக இந்த நடவடிக்கைகளை கனடா அரசு மேற்கொண்டுள்ளது.
பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:- மாநாடு நடைபெறும் வளாகத்தைச் சுற்றி 3 மீட்டர் உயரத்துக்கு வேலி அமைக்கப்பட்டுள்ளது. மேலும் அங்கு 5 அடுக்கு பொலிஸ் பாதுகாப்பும் போடப்படவுள்ளது.
ஒருங்கிணைந்த பாதுகாப்புப் படைகள் மூலம் டொரண்டோ, ஆன்டாரியோ நக ரங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள் ளது. இந்தப் படையில் கனடா இராணுவம் கடற்படை விமானப்படை அதிகாரிகள் டொரண்டோ பொலிஸார் இடம் பெற்றுள்ளனர். கனடாவில் நடைபெறும் இந்த மாநாட்டுக்காக வரலாறு காணாத பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.
 

»»  (மேலும்)

ஐ.நா.ஆலோசனை குழு தேவையற்றதும் கேட்டுக்கொள்ளப்படாததுமான தலையீடு

இலங்கையின் இறுதிக்கட்ட யுத்தத்தின்போது இடம்பெற்றதாகக் கூறப்படும் சம்பவங்கள் தொடர்பாக ஆலோசனை வழங்குவதற்காக ஐ.நா. செயலாளர் நாயகத்தினால் நிபுணர்கள் குழு நியமிக்கப்பட்டதை இலங்கை அரசாங்கம் வன்மையாகக் கண்டித்துள்ளது.
இது தொடர்பாக வெளியுறவு அலுவல்கள் அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் நிபுணர்கள் குழு அமைக்கப்பட்டமை இறைமையுள்ள ஒரு நாட்டின் விடயத்தில் தேவையற்றதும் கேட்டுக்கொள்ளப்படாததுமான தலையீடு என்று கூறப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,
30 வருடங்களுக்கு மேலாக இலங்கை பயங்கரவாதத்தினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த காலகட்டத்தில் புலிகள் இயக்க பயங்கரவாதிகளினால் நினைத்துப் பார்க்க முடியாத அளவு வன்முறைகளும் கொடூரமும் கட்டவிழ்த்து விடப்பட்டன. உலகின் மிகவும் கொடூரமான பயங்கரவாத அமைப்பாக அது விளங்கியது.
நீண்ட கால மற்றும் சிரமமான போராட்டத்தின் பின் புலிப் பயங்கரவாதத்தை தோற்கடித்து அரசாங்கம் நாட்டை மீட்டெடுத்தது. தற்போது நாட்டையும் மக்களின் வாழ்க்கைத் தரத்தையும் கட்டியெழுப்பும் நடைமுறை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ‘நடந்த சம்பவங்களில் இருந்து பாடம் படிக்கும் நல்லிணக்க ஆணைக்குழு’ ஒன்றை விசாரணை சட்ட விதிகளின் கீழ் நியமித்துள்ளார்.
இலங்கை சட்டத்தின் கீழ் அமைக்கப்படக் கூடிய ஆகக் கூடிய நியதிச் சட்ட ஆணைக்குழுவாக இது அமைகிறது. இந்த ஆணைக்குழுவானது தேசிய ஒற்றுமைக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கும் என்று இலங்கை அரசாங்கம் நம்புகிறது.
இலங்கை மனித உரிமைகளை தொடர்ந்து ஊக்குவித்தும், பாதுகாத்தும் வந்துள்ளது. இதனை ஐ.நா. போன்ற முறையான அமைப்புகளினால் ஏற்றுக் கொள்ளப்பட்டிருப்பதை இங்கு குறிப்பிடவேண்டும். இந்நிலையில் இலங்கையில் இடம்பெற்ற சம்பவங்கள் பற்றி ஆராய நிபுணர் குழு அமைக்க ப்பட்டமை இறைமையுள்ள ஒரு நாட்டின் விடயத்தில் தேவையற்றதும் கேட்டுக்கொள் ளப்படாததுமான தலையீடாகும்.
அத்துடன் இலங்கையில் இடம்பெறும் நல்லிணக்க ஆணைக்குழுவின் விசாரணை க்கு எதிரான தரப்பினர் இதன்மூலம் முறையற்ற வகையில் பயனடையவும் இதனால் வாய்ப்பு ஏற்படக் கூடும்.
கடந்த வருடம் மே மாதம் 23 ஆம் திகதி ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் இலங்கைக்கு விஜயம் செய்திருந்தபோது அந்த விஜயத்தின் இறுதியில் வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில்; இலங்கை அரசாங்கத்துக்கும் புலிகளுக்கும் இடையில் இடம்பெற்ற இராணுவ செயற்பாடுகளின்போது பாரிய அளவிலான சர்வதேச மனித உரிமை மீறல் குற்றங்கள் இழைக்கப்பட்டதாக எந்த குறிப்பும் இடம்பெறவில்லை என்பதையும் இலங்கை அரசாங்கம் இங்கு சுட்டிக்காட்டவிரும்புகிறது என்று வெளியுறவு அலுவல்கள் அமைச்சின் அறிக்கை கூறுகிறது.
இதேவேளை மேற்படி நிபுணர் குழு அமைக்கப்பட்டமை தேவையற்றது என ஊடக மற்றும் தகவல்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல கூறியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இலங்கை பலமான அரசியலமைப்புடன் கூடிய இறைமையுள்ள நாடாகும். அரசியலமைப்புப்படி நிறைவேற்று அதிகாரமும், மக்களால் தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்றத்தின் அதிகாரமும் கொண்ட ஜனநாயக நடைமுறை எமக்கு உள்ளது. அத்துடன் துடிப்புடன் இயங்கும் நீதித்துறையும் உள்ளது. நாட்டின் இறைமை மக்களில் தங்கியுள்ளதுடன் அவர்களது உரிமைகள் அரசியலமைப்பில் உறுதி செய்யப்பட்டுள்ளன என்று அமைச்சர் ரம்புக்வெல்ல கூறுகிறார்.
மோதல் தொடர்பான அனைத்து விடயங்களையும் ஆராயும் அதி காரத்துடன் கூடிய நல்லிணக்க ஆணைக்குழுவொன்றை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஏற்கனவே நியமித்துள்ளார். இந்நிலையில் அதற்கு சமாந்தரமாக ஒரு விசார ணையை ஐக்கிய நாடுகள் அமைப்பு நடத்த முற்படுவதானது இலங்கை அதன் தேசிய நல்லிணக்கத்தையும் நிரந்தர சமாதானத்தையும் ஏற் படுத்தும் முயற்சியின் ஒரு பகுதி யாக ஆரம்பித்துள்ள நடைமுறையை முன்கூட்டியே தீர்மானிக்கும் வகை யிலானதும் குறைத்து மதிப்பிடும் வகையிலானதுமாகும்.
அங்கத்துவ நாடொன்றின் விருப் பத்தை கவனத்திற்கொள்ளாது ஐக் கிய நாடுகள் அமைப்பின் செய லாளர் நாயகம் மூவர் கொண்ட நிபுணர் குழுவை நியமித்துள்ளார். தேவையான நடவடிக்கைகளை இலங்கை மேற்கொள்ள இது வழி வகுத்துள்ளது என்று அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல கூறி யுள்ளதாக அரச தகவல் திணைக்கள அறிக்கையில் மேலும் கூறப் பட்டுள்ளது.
 
»»  (மேலும்)

வாழைச்சேனையில் சனச அபிவிருத்தி வங்கிக் கிளை முதலமைச்சரினால் திறந்துவைப்பு.

தற்பொழுது நாட்டின் அனைத்து பாகங்களிலும் தமது கிளையினை விஸ்த்தரித்து கொண்டு வருகின்ற சனச அபிவிருத்தி வங்கியினது மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனை பிரதேசத்தில் தமது கிளையினை 21.06.2010 திங்கள் அன்று. நிறுவியுள்ளது. இவ் சணச அபிவிருத்தி வங்கி கிளையினை தமிழ் மக்கள் விடுதலைப்pபுலிகள் கட்சியின் தலைவரும் கிழக்கு மாகாண முதலமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் பிரதம அதிதியாக கலந்து கொண்டு திறந்து வைத்து உரையாற்றுகையில் எமது பிரதேசத்தில் வாழுகின்ற மக்கள் வங்கிகளை ஓர் அடகு வைக்கும் மையமாக கருதாது அபிவிருத்திக்கான ஓர் சேமிப்பு நிறுவனமாக கருத்திற்கொண்டு செயற்பட வேண்டும் எமது பிரதேசத்தின் எமது காலடியிலேயே எமக்கான அனைத்து வசதிகளுடனும் கூடிய வங்கிக் கிளையின் உதயமானது எமக்கு கிடைத்திருக்கின்ற அரிய வாய்ப்பாகும், இவ்வாறான வங்கிகள் ஊடாக நாம் பெறமுடியுமான அனைத்து பலாபலன்களையும் பெற்று அதனூடாக எமது வாழ்விலும் சமூகத்திலும் அபிவிருத்தியுடன் கூடிய பல மாற்றங்களை கொண்டுவரவேண்டும் உதாரணமாக குறைந்த வட்டி அடிப்படையிலான குறுங்கால நீண்டகால கடன்கள் பல வகையான சேமிப்பு மற்றும் நடைறைக் கணக்குகள், மேலும் பல அபிவிருத்தி சார்ந்த திட்டங்களை இவ்வங்கி கிளைகளின் ஊடாக நாம் பெறமுடிகின்றது. இவற்றை நாம் சரியாக பேணுகின்ற சந்தர்ப்பத்தில் நாம் எதிர்பார்க்கின்ற பலாபலன்களை நாம் எட்ட முடியும் என குறிப்பிட்டார். இந்நிகழ்விற்கு சனச அபிவிருத்தி வங்கியின் தவிசாளர் உட்பட பலரும் கலந்து கொண்டனர்
»»  (மேலும்)

மட்டக்களப்பின் சுவடுகள்: எம்.எஸ்.ஏ.அஸீஸின் மரணம்

- எஸ்.எம்.எம்.பஷீர்
நாலு சாதி மனிதரும் சேர்ந்து நடந்தால்  நல்ல மழை பெய்துலகு உயர்ந்து வாழுமே
சின்னவப் புலவர் (1877 -1966) (அம்பாரைக் கொலனி-கும்மிப் பாடல்கள்)
msaமீன்பாடும் தேன் நாடாம் மட்டக்களப்பின் முகவரிகளில் ஒருவராகத் திகழ்ந்த பிரபல சமூக சேவகரும் முன்னாள் அட்டாளைசேனை ஆசிரியர் பயிற்சிக்கலாசாலை மட்டக்களப்பு அரசினர் ஆசிரிய கலாசாலை ஆகியவற்றில் அழகியற்கலை (Fine Arts )  விரிவுரையாளராக பணியாற்றி, பின்னர் மட்டக்களப்பு அரசினர் ஆசிரியர் கலாசாலையில் நீன்ட காலம் பிரதி அதிபராகவும் சிறிது காலம் அதிபராகவும் பதவியுயர்வு பெற்று ஓய்வு பெற்ற பிரபல ஓவியர் கலாபூஷனம் அல் ஹாஜ்  ஜனாப் முஹமது ஷா முஹமது அசீஸ் (சமாதான நீதவான்)சென்ற வியாழக்கிழமை (17 ஜூன் 2010)  இலண்டனில் தனது 89 வயதில் காலமானார் என்ற செய்தி ஒரு துணிச்சலான சமூக பணியாளரின் மரனம் ஒரு நிகழ்வு மட்டுமல்ல; அதற்கப்பால் அவர் வாழ்ந்த சமூகத்தின் கண்ணாடியாக திகழ்கிறது என்ற வ‌கையில் ஒரு நினைவு கூரத்தக்க, பதிவு செய்யப்பட வேன்டிய வரலாறு. அவரது சமூகம் சார்ந்த பனிகளை இந்த குறிப்புரை இங்கு பதிவுசெய்கிற‌து.
இவர் மட்டக்களப்பு‍‍ ‍‍அம்பாரை பிரஜைகள் குழு (Citizen Committee) உறுப்பினராகவும் அதன் தலைவராகவும் பல வருடங்கள் 1980 களில் பணியாற்றியதுடன் இந்திய சமாதானப்படையினர் இலங்கையில் கிழக்கில் நிலை கொண்டிருந்தபோதும் அதற்கு முன்னரும் பின்னரும் இலங்கை இராணுவத்தினரின் கெடுபிடிகளுக்கும் மத்தியில் நடு நிலையாக செயற்பட்டு மட்டக்களப்பு வாழ் தமிழ் முஸ்லிம் மக்களின் பல்வேறு பட்ட சமூகப்பிரச்சனைகளை தீர்ப்பதில் முன்னின்று உழைத்தவர். இவரது நேர்மையான நெஞ்சுறுதிகொன்ட பனியை பாராட்டி மட்டக்களப்பில் இந்திய படையினரின் பொறுப்பாளராகவிருந்த இந்திய இராணுவத்தில் உயர் நிலை பதவி வகித்து இன்று ஓய்வு பெற்ற பின்னர் உலக அரசியல் இராணுவ நடவடிக்கைகள் குறித்து ஆய்வுக்கட்டுரைகள் எழுதியும் வானொலி காணொலி ஊடகஙகளுக்கு கருத்துரைகள் வழங்கியும் வரும் மேஜர் ஜெனரல் ஏ.கே. மெஹ்தா இவர் வரைந்து வழங்கிய ஓவியத்துக்காக அதனை பாராட்டி வெள்ளி வாள் ஒன்றினை பரிசாக வழங்கினார். மேலும் இந்திய சமாதானப்படை இலங்கையை விட்டு செல்ல முன்னர் ஜனாப் அசீஸுக்கு தனிப்பட்ட முறையில்  15 மார்கழி மாதம் 1990ம் ஆண்டு ஒரு கடிதம் அனுப்பியிருந்தார். அந்த கடிதத்தில்  சமூக நல்லுறவினை சட்ட ஒழுங்கை பேண இவர் ஒத்தாசை புரிந்ததனை விரிவாக  பாராட்டி  பின்வருமாறு தனது கடிததினை மெஹ்தா முடித்திருந்தார். 
விரைவில் நாங்கள் எங்களது நாட்டுக்கு செல்வோம், அத்துடன் அற்புதமான அம்பாரை மட்டக்களப்பு மாவட்ட மக்களின் அதிக மகிழ்ச்சிதரும் நினைவுகளை சுமந்து செல்வோம். நாங்கள் உங்களின் விருந்தோம்பலினாலும் சிரத்தையினாலும் மனம் நெகிழ்ந்துளோம். இலங்கை மக்களின் ஷேமத்திற்கும் தொடர்சியான மகிழ்வுக்கும் சமூக நல்லுற‌வுக்கும் வடகிழ‌க்கு மாகானங்களில் அமைதிக்கும் நாங்கள் கடவுளை பிரார்த்திக்கிறோம்.
(Soon we shall depart for our shores and we shall carry many happy memories with us of the wonderful people of Batticaloa and amparai districts. We were overwhelmed by your hospitality and consideration for us. We pray to God for the well being of the people of Sri Lanka and for the continued happiness , communal harmony and peace in the North Eastern province.”)
இலங்கை பத்திரிகைகளில் இஸ்லாமிய எழுத்தனிக்கலை கட்டடக்கலை இஸ்லாமிய சித்திரங்கள் பற்றி பல கட்டுரைகளையும் எழுதியுள்ளார். இவர் மட்டக்களப்பு கோட்டமுனை பள்ளிவாசலின் பிரதான நம்பிக்கை பொறுப்பாளராகவும் இருந்துள்ளார்.  இவரது இள‌மை வாழ்க்கை பற்றிய சம்பவங்களை பிரபல கிழக்கின் நாவல் எழுத்தாளரான முன்னாள் அரச அதிபரான ஜனாப் ஷெரிஃப் (ஜுனைதா ஷெரிஃப்) பதிவிலிட்டுள்ளமை இஙுகு குறிப்பிடத்தக்கது. இக்குறிப்புக்களில் சிலவற்றை இங்கு குறிப்பிட்டே ஆகவேன்டும்.     
இவரின் தந்தை மட்டக்கள்ப்பில் கலால் வரி உத்தியோகத்தராக (Excise Officer) பனியாற்றியவர்.  இவர் தனது கல்லூரிக்காலங்களில் மட்டக்களப்பு மத்திய கல்லூரி மாணவப் பீராயத்தில் “யுவன்” எனும் அச்சுபிரதி சஞ்சிகை ஒன்றையும் “இளைஜ‌ன்” எனும் கையெழுத்து சஞ்சிகையொன்றயும் சிலகாலமாக நடத்தியுள்ளார் என்றும்; இல‌ங்கை வானொலியில் முஸ்லிம் சேவையை  ஸேர். ராஷிக் ஃபரீட் அவர்களின் மூலமாக உருவாவதற்கு காரனமான சிலரில் இவரும் ஒருவராகும் என்பதும் இவர் சொழும்பில் லேக் கவுஸ் பத்திரிக்கையான தினகரன் பத்திரிக்கையில் ஓவியராகவும் பணியாற்றியுள்ளார். அக்காலக‌ட்டங்களில்  இலங்கை வானொலியில் பல வானொலி நாடகங்களில் மறைந்த  பேராசிரியர் கைலாசபதி, பேராசிரியர் நந்தி போன்றோருடன் வானொலி நாடகங்களுக்கு குரல் கொடுத்துள்ளார் என்றும் முன்னாள் மட்டக்களப்பு எம்.பீயும் இந்து கலாச்சார அமைச்சராகவிருந்த சொல்லின் செல்வர் செல்லையா இராஜதுரை போன்ற தனது நண்பர்களுடன் சேர்ந்து முதன் முதலில் தமிழரசுக்கட்சியினை கிழக்கிலே மட்டக்கள‌ப்பில் காலூன்ற துனைபுரிந்த அரசியல் பின்ன‌னி இவருக்குன்டு. மேலும் இவரே கிழக்கிலிருந்து சென்று யாழ் மகாஜனக் கல்லூரியில் தமிழரசுக்கட்சி பிரசாரகூட்டத்தில் பேசிய முதல் முஸ்லிம் முக்கியஸ்தராகும். இவர் எஸ்.ஜே வி .செல்வனாயகம் (தந்தை செல்வா) மற்றும் பல முக்கிய தமிழரசுக்கட்சியின் தலைவர்களூடன் ஆரம்பகாலத்தில் தமது சமகால பள்ளிக்கூட நண்பர் ராஜதுரையுடன் சேர்ந்து அரசியல் செய்தபோதும் சுதந்திரன் பத்திரிக்கையில் ஒரு ஓவியராக நியமிக்க இவர் போட்ட விண்ணப்பத்தை எஸ்.ஜே வி .செல்வனாயகம் மறுத்துவிட்டார் என்பதும் இன்கு குறிபிடத்தக்கது.
முன்னாள் இலங்கை பிரதமரான தஹா நாயக்கா, ஜே .ஆர் ஜயவர்த்தனா போன்ற பல பிரபல அரசியல் வாதிகளின் ஒவியங்களை  வரைந்து அவர்களிடம் கையளித்துள்ளார். இவர் முன்னாள் பிரதமர் நேருஜி இலங்கை வந்தபோது அவரின் ஓவியத்தை வரைந்து இலங்கை பிரதமர் எஸ்.டப்ளியூ,.பன்டாரனாயகா முன்னிலையில் கையளித்த்வர்.  1995ம் ஆன்டு இவரது ஓவியப்பனியை பாராட்டி இலங்கை அரசு இவருக்கு கலாபூஷன விருது வழங்கியது.
இவரின் பரந்துபட்ட இஸ்லாமிய  ஓவியக்கலை ஆறிவும் ஆற்றலும் இவர் வெளியிட்ட இஸ்லாமியக்கலை எனும் நூலில் துலங்கியது. இன்னூல் உலகின் பலபாகங்களிலும் எவ்வாறு இஸ்லாமிய ஓவியம் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்பதை சுருக்கமாக ஆனால் ஆழமாக மதிப்பீடு செய்கிறது.இன்னூலின் இன்னுமொரு விஷேடமான அம்சம் என்னவெனில் இன்னூலுக்கு அணிந்துரை எழுதியவர்கள் இருவருமே இவரின் இரன்டு முன்னாள் ஆசிரிய மாணவர்களான இரா.தெய்வராஜன் (மட்டக்களப்பு) நவம் ஆகியோர். முன்னுரையே எழுதாமல் அணிந்துரை மூலமே அவரின் ஓவியத்திறனை அடையாளம் காட்டிய நூல் இது.
இந்திய சமாதானப்படை இலங்கையில் இருந்தபோது ஒரு தடவை இவர் இந்திய “தூரதர்ஷன்” தொலைக்காட்சிக்கு நேர்கானல் அளித்தபோது இவர் வெளிப்படுத்திய கருத்துக்கள் குறித்து புலிகளின் தலைவர் பிரபாகரன் அதிருப்திற்றதாகவும் அதுபற்றி அவரை மட்டக்களப்பு புலிகள் விசாரித்ததாகவும் அவர்களுக்கு தகுந்த விளக்கம் அளித்து தனது கருத்தினை வலியுறுத்தியதாகவும் அவர் என்னிடம் கூறியது அவரது நேர்மையையும் துணிச்சலையும் காட்டுகிறது. மட்டக்களப்பு தமிழ் முஸ்லிம் மக்கள் மத்தியில் அவர் பெற்றிருந்த நற்பெயர் செல்வாக்கு என்பன அவரை அம்மக்களுடனே நீன்டகாலம் பதுகாப்பாக வாழும் சுழலை ஏற்படுதியது. இவரது இளமைக்கால பாடசாலை நண்பரும் அயலவருமான சொல்லின் செல்வர் செல்லையா ராஜதுரை இவரது மரணத்துக்கு சுமார் ஒரு வாரத்துக்கு முன்னரும், வைத்தியசாலை படுக்கையிலும் இவருடன் தொடர்பு கொண்டு நலம் விசாரித்தமை இவர்களின் ஆறு தசாப்தம் தான்டிய நட்பை கோடிட்டு காட்டுகிறது.
மட்டக்களப்பில் கோட்டமுனையில் ஒரு முஸ்லிம் பாலர் பாடசாலை ஒன்றினை நிறுவும் பணியில் தனது நண்பர் ராஜதுரையின் நட்பின் மூலம் அடிக்கல் நாட்டியவர். எனினும் இக்கல்லூரி பின்னர் முஸ்லிம் பாடசாலயாக இல்லாமல் பின்னர் தமிழ் பாடசாலையாக  மாற்றப்பட்டுள்ளமையும்; இவரின் நடவடிக்கையால் மட்டக்களப்பு முன்னாள் பீ. ராஜன் செல்வனாயகம்  மூலம் மட்டக்களப்பு கள்ளீயன்காடு ஷாகிரா கல்லூரிக்காக நிதி உதவி அளிக்க செய்தமையும் , இன்று அதே கல்லூரி முஸ்லிம் மாணவர்கள் மிகச் சிறீய அளவில் முக்கியத்துவம் அற்றுப்போக புலிகளின் 1990 இனச் சுத்திகரிப்பும் காரணமாக  அமைந்தமையும் இங்கு நினைவு கூரத்தக்கது.
தினகரன் மட்டக்களப்பு நிருபராக தனது இளமைக்கால நண்பரும் அப்போதய தினகரன் ஆசிரியரும் பின்னால் தினபதி சிந்தாமணி ஆசிரியருமான எஸ்.டீ .சிவனாயகம்  பனியாற்றியபோது இவரும் செய்ற்பட்டார்.
மேலும் இலக்கியம் கவிதை துறையில் அன்று பிரபலம் பெற்றிருந்த பல கவிஞர்கள் படைப்பாளிகள் இவரது நன்பர்கள்.எஸ்.பொன்னுத்துரை  ஏராவூரின் புகழ் பூத்த கவிஞன் புரட்சி கமால் சாலிஹ் , திமிலைதுமிலன் , சித்தி வினாயகம் ஆசிரியர் ஆகியோர் இவருக்கு மிகவும் நெருக்கமானவர்களாக, அறியப்பட்டவர்களாக இருந்துள்ளனர்.
அட்டாளைச்சேசெனை கலாசாலயில் கலையமுதம் என்ற சஞ்சிகையை  வெளிக்கொணர்ந்ததுடன் அக்கல்லூரியின் அதிபராக ஒரு காலகட்டத்தில் பனி புரிந்த பிரபல முஸ்லிம் இலக்கிய சமய நூல் ஆய்வாளர் , நூலாசிரியர்  எஸ்.எச்.எம். ஜமீல் உட்பட பல சமகால இலக்கிய ஆய்வாளர்கள் படைப்பாளிகளுடனும் தனது மரணம் வரையும் தொடர்புகளை கொன்டிருந்தார். இலண்டனுக்கு முருகபூபதி போன்ற தனக்கு நெருக்கமான எழுத்தாளர்கள் வந்தபோதும் அவர்களை சந்திக்க இவர் தவறியதில்லை.  ஆயினும் தான் 18 வருடங்கள் மிக நெருக்கடியான  காலங்களில்   பனியாற்றிய மட்டக்களப்பு அரசினர் ஆசிரியர் கலாசாலையில் அண்மையில் வெளியிட்ட "கலைச்செல்வி"  நினைவு மலரில் இவர் ஆற்றிய பணிகள் குறித்து இருட்டடிப்பு செய்யப்பட்டிருந்ததை காணக்கூடியதாகவிருந்தது. இது குறித்து தனது ஆதங்கத்தினையும் கலாசாலை அதிபருக்கு சுட்டிகாட்ட இவர் தவறவில்லை.  
இவர் தமது பிள்ளைகளின் வேண்டுகோளின் பேரில் இலண்டனுக்கு புலம்பெயர்ந்து வாழ்ந்தபோதும் தனது ஓவியக்கண்காட்சியொன்றினை ஹரோ பொது நூலகத்தில் 2003ம் ஆண்டு தை மாதம் நடத்தி பல ஆங்கிலேயர்களின் பாராட்டையும் பெற்றார். ஹரோ பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் ஹரத் தொமஸ் இவரது ஒவியத் திறனை இவரை தனியாக சந்தித்தபோது பராடியுள்ளமையும் இங்கு குறிப்பிட்டே ஆகவேன்டும். 
இவரின் மறைவு மட்டக்களப்புக்கு ஒரு சமூக சேவகனின் மாறாத இழப்பு மட்டுமல்ல இவரை அறிந்த தெரிந்த உலகின் பலருக்கும் ஒரு ஆழுமையும் நேர்மை நிறைந்த கலைஞனின் இழப்புமாகும். 
sbazeer@yahoo.co.uk
 
»»  (மேலும்)

6/23/2010

மட்டக்களப்பில் புதிய கல்வி வலயம் தாபிப்பது தொடர்பான விசேட கலந்துரையாடல்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது இருக்கின்ற நான்கு கல்வி வலயத்திற்கு மேலாக படுவான்கரை பிரதேசங்களை உள்ளடக்கி இருக்கின்ற பாடசாலைகளை உள்ளடக்கியதாக கல்வி வலயம் ஒன்றை அமைப்பது தொடர்பான பூர்வாங்க நடவடிக்கைகளை கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் மேற்கொண்டு வருகின்றார். அவற்றின் இறுதிக்கட்ட பணிகள் நடந்தகொண்டிருக்கின்ற சந்தர்ப்பத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தின் வலயக்கல்வி பணிப்பாளர்களுடன் விசேட கலந்துரையாடல் ஒன்றை இன்று முதலமைச்சரின் மட்டக்களப்பு வாசஸ்த்தலத்தில் நடாத்தினார் இதன்போது புதிதாக அமைக்கப்பட இருக்கின்ற கல்வி வலயத்திற்கான பெயர் ஆரம்பத்தில் படுவான்கரை கல்வி வலயம் என குறிப்பிடப்பட்டு இருந்தது ஆனால் தற்போது அப்பெயரானது மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயம் என விதப்புரை செய்யப்பட்டுள்ளது. இதற்கமைவாக 63 பாடசாலைகளை உள்ளடக்கிய இப்புதிய கல்வி வலயத்தின் வலயக்கல்வி அலுவலகமானது தாண்டியடியில் அமைப்பது தொடர்பாகவும் அனுமானிக்கப்பட்டது. இவ் விசேட கலந்துரையாடலில் மட்டக்களப்பு வலயக்கல்வி பணிப்பாளர் போல், கல்குடா வலயக்கல்வி பணிப்பாளர் சுபாச்சக்கரவர்த்தி, பட்டிருப்பு வலயக்கல்வி பணிப்பாளர் திரமதி பவளகாந்தன் மற்றும் மாகாண சபை உறுப்பினர் பூ. பிரசாந்தன், இணைப்புச் செயலாளர் தவேந்திரராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.
»»  (மேலும்)

மட்டக்களப்பில் உதைபந்தாட்டம்

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத் தினால் நடாத்தப்பட்ட மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் விளையாட்டு விழாவின் மட்டக்களப்பு மாவட்ட உதைபந்தாட்ட சம்பியனாக மண்முனை வடக்கு பிரதேச இளைஞர் கழகம் தெரிவு செய்யப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் விளையாட்டு விழாவின் உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி காத்தான்குடி ஹிஸ்புல்லா விளையாட்டு மைதானத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று நடைபெற்றது.
இவ் உதைபந்தாட்ட சுற்றுப் போட்டியில் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள வாகரை, வெல்லாவெளி உட்பட 7 பிரதேச இளைஞர் உதைபந்தாட்ட அணிகள் பங்கு கொண்டன. இச்சுற்றுப் போட்டியின் இறுதிப் போட்டியில் காத்தான்குடிப் பிரதேச இளைஞர் கழகத்தை எதிர்த்து மன்முனை வடக்கு பிரதேச இளைஞர் அணி மோதியது.
இதில் மண்முனை வடக்கு பிரதேச இளைஞர் அணி ஒரு கோலை புகுத்தி வெற்றியீட்டி சம்பியனாகியது.
»»  (மேலும்)

கனடாவில் வன்முறைகளில் ஈடுபட்டவர் இலங்கைக்கு

கனடாவில் வன்முறைகளில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டின் பேரில் ஏ. கே. கண்ணன் என்றழைக்கப்படும் ஜோதிரவி சித்தம்பலம் இலங்கைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக கனேடிய செய்திகள் தெரிவிக்கின்றன.
கனடாவின் டொரன்டோ வன்முறை வீதிக் குழுத்தலைவர் என வர்ணிக்கப்படும் இவர் 6 வருடங்களுக்கு முன் இழைத்த குற்றங்கள் நிரூபிக்கப்பட்ட நிலையிலேயே இலங்கைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக இந்த செய்திகள் தெரிவிக்கின்றன.
1990 ம் ஆண்டு அகதியாக கனடா சென்ற அவர் போதைப் பொருள் கடத்தல் உட்பட பல குற்றச் செயல்களுடன் தொடர்புபட்டவரென தெரிவிக்கப்படுகின்றது. இந் நிலையில் 2001 ம் ஆண்டு முதற் தடவையாக கைது செய்யப்பட்ட இவர் பின் விடுதலையானார்.
»»  (மேலும்)

6/21/2010

உலகத் தமிழ் செம்மொழி மாநாடு; கோவை நகரம் விழாக்கோலம் உச்சக் கட்டப் பாதுகாப்பு; முதல்வர் கருணாநிதி இன்று நேரில் சென்று ஆராய்வு


உலகத் தமிழ் செம்மொழி மாநாடு எதிர்வரும் 23ம் திகதி முதல் 27ம் திகதி வரை கோவையில் நடைபெறுகிறது.
இந்தியா மட்டும் இன்றி பல்வேறு நாடுகளில் இருந்து மாநாட்டில் எராளமான தமிழ் அறிஞர்கள் கலந்து கொள்கின்றார்கள்.
23ஆம் திகதி (புதன்கிழமை) காலை 10.30 மணிக்கு முதலமைச்சர் கருணாநிதி தலைமமையில் ஜனாதிபதி பிரதீபா பட்டீல் உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டை தொடங்கிவைக்கிறார்.
மாநாட்டில் கலந்து கொள்வதற்காக முதலமைச்சர் கருணாநிதி இன்று (திங்கட்கிழமை) காலை 11 மணிக்கு இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் கோவை செல்கிறார்.
அங்கு அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது. கோவை போய்ச் சேர்ந்ததும் மாநாட்டு நிகழ்ச்சிகள் நடைபெறும் இடங்களுக்கு கருணாநிதி சென்று ஏற்பாடுகளை பார்வையிடுகிறார். முதலமைச்சர் கருணாநிதி கோவையில் ஒரு வாரம் தங்கி இருப்பார். மாநாட்டுக்காக கொடிசியா வளாகத்தின் முன்புறம் உள்ள மைதானத்தில் 80 ஆயிரம் பேர்அமரும் வகையில் பிரமாண்டமான பந்தல் அமைக்கப் பட்டுள்ளது. அரண்மனை போன்ற தோற்றத்தில் பனை ஓலை வேலைப்பாடுகளுடன் பந்தலின் நுழைவு வாயில் அமைக்கப்பட்டுள்ளது. பந்தலின் நடுப்பகுதி மன்னர்கள் காலத்து தர்பார் பண்டபம் போல் அழகுபடுத்தப்பட்டு இருக்கிறது.
மாநாட்டு தொடக்க நிகழ்ச்சி நடைபெறும் இந்தப் பந்தலில் 6,400 சதுர அடி பரப்பளவில் மேடை அமைக்கப்பட்டுள்ளது.
மேடையில் ஜனாதிபதி பிரதீபா பட்டீல், முதலமைச்சர் கருணாநிதி, கவர்னர் கர்ஜித்சிங் பர்னாலா உள்ளிட்ட தலைவர்கள, முக்கிய பிரமுகர்கள் ஓய்வு எடுப்பதற்காக தனித்தனி அறைகளும் கட்டப்பட்டுள்ளன.
மாநாட்டையொட்டி சிற்ப வேலைப்பாடு கள், அழகிய நுழைவு வாயில்களுடன் கண்காட்சி அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது.
மாநாட்டின் முக்கிய அம்சமாக ஆய்வ ரங்கம் நடைபெறுகிறது. இதற்காக கொடிசியா ஹாலில் 21 ஆய்வரங்கங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. ஒவ்வொரு அரங்கிலும் தலா 120 பேர் அமரக்கூடிய வகையில் இடவசதி உள்ளது. 21 ஆய்வரங்கங்களுக்கும் தமிழ்ப் புலவர்களின் பெயர்கள் சூட்டப்பட்டு உள்ளன.
முதலமைச்சர் கருணாநிதி தலைமையில் ஆய்வரங்கங்களின் தொடக்க விழா நடை பெறும் முகப்பரங்கம் 5 ஆயிரம் பேர் அமரக்கூடிய வகையில் அமைக்கப்பட்டு உள்ளது. இணையத்தளத்தில் தமிழ் பயன்பாடு பற்றி மாநாட்டுக்கு வரும் பார்வையாளர்கள், பொதுமக்கள் தெரிந்து கொள்வதற்காக தமிழ் இணைய கண் காட்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மாநாட்டின் தொடக்க நாளன்று முக் கிய நிகழ்ச்சியான பேரணி நடைபெறுகிறது. பேரணியில் கொண்டு செல்வதற்காக இனியவை நாற்பது என்ற தலைப்பில் 40 அலங்கார ஊர்திகள் தயார் நிலையில் உள்ளன. உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டையொட்டி கோவை நகரமே விழாக்கோலம் பூண்டு உள்ளது. புதுப்பிக் கப்பட்ட சாலைகள் வண்ண ஓவியங்கள், கூடுதலான மின்விளக்கு வசதிகள் என்று கோவை நகரமே ஜொலிக்கிறது.
தமிழகத்தில் அடுத்தடுத்து நடந்துள்ள ரயில் கவிழ்ப்பு முயற்சி சதிவேலைகளைத் தொடர்ந்து, உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுக்கு உச்சகட்ட பாதுகாப்பு அளிக் கப்படுகிறது. வெடிகுண்டு ஊடுருவலைத் தடுக்க, அதிநவீன தொழில் நுட்ப சாத னங்களுடன் 300 நிபுணர்கள், தமிழகம் முழுவதும் இருந்து கோவை வந்துள்ளனர்.
முக்கிய தகவல்கள், வெளிநாட்டு விருந் தினர் தங்குமிடங்கள், மாநாட்டு வளாகம் மற்றும் அலங்கார அணிவகுப்பில் பங் கேற்கும் வாகனங்களை முன்கூட்டியே வெடிகுண்டு சோதனைக்கு உட்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. மாநாட்டு பாது காப்பு மற்றும் வாகன போக்குவரத்தை சீரமைக்கும் பணிக்காக 333 எஸ். பி.க் களைக் கொண்ட பாதுகாப்புப் படை ஏற் படுத்தப்பட்டுள்ளது. இவர்களின் தலை மையில் 10 ஆயிரம் பொலிஸார் மாநாட்டு பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகின்றனர்.
 
»»  (மேலும்)

இலங்கை உள்விவகாரங்களில் ஐ.நா.தலையிடக் கூடாது*----யசூஸி அகாஸி


‘இலங்கையை கட்டியெழுப்புவதற்கு ஆலோசனைகளையும் சிபாரிசுகளையும் வழங்க முடியும் ’



ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலர் பான் கீ மூனுக்கு இலங்கை தொடர்பான ஆலோசனை வழங்குவதற்காக நியமிக்க உத்தேசித்துள்ள குழுவானது இலங்கையைக் கட்டியெழுப்புவதற்கான ஆலோசனைகளையும் சிபாரிசுகளையும் வழங்க முடியும். எனினும் உள்நாட்டு விவகாரங்களில் அது (ஐ.நா) தலையிடக்கூடாதென இலங்கைக்கான ஜப்பானிய விசேட தூதுவர் யசூஸி அகாஸி தெரிவித்தார்.
ஐ.நா. செயலாளர் நாயகத்தினால் நியமிக்கப்படவுள்ள இத்தகைய குழு பிரயோசனம் உள்ளதாக இருக்க முடியுமெனக் குறிப்பிட்ட அவர், அக்குழு இலங்கையின் அபிவிருத்தி மீள் கட்டமைப்பு நடவடிக்கைகளுக்கு சிறந்த ஆலோசனைகளை முன்வைக்க முடியுமெனவும் தெரிவித்தார். ஐந்து நாள் உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டு இலங்கை வந்திருந்த ஜப்பானியத் தூதுவர்.
இம்முறை நாம் மேற்கொண்டிருந்த இலங்கை விஜயத்தின்போது பல சாதகமான மாறுதல்களை அவதானித்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், வடக்கில் அரசாங்கம் மேற்கொண்டுவரும் முன்னேற்றகரமான செயற்திட்டங்கள் குறித்த தமது மகிழ்ச்சியையும் தெரிவித்தார்.
அரசாங்கத்தின் நடவடிக்கைகளை தவறான கண்ணோட்டத்தில் நோக்கும் சில நாடுகள் அதனை நேரில் கண்டு உண்மை நிலையைத் தெளிவுபடுத்திக் கொள்ள முடியுமெனவும் தெரிவித்தார்.
ஐந்து நாள் உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டு இலங்கை வந்திருந்த ஜப்பானியத் தூதுவர் யசூஷி அகாஸி ஜனாதிபதி, பிரதமர், வெளிவிவகார அமைச்சர் மற்றும் எதிர்க்கட்சி முக்கியஸ்தர்களையும் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியதுடன் வடபகுதிக்கான விஜயமொன்றையும் மேற்கொண்டிருந்தார்.
இதனையடுத்து நேற்று நாடுதிரும்ப முன்னர் அவர் கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் செய்தியாளர் மாநாடொன்றை நடத்தினார். அதன்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
ஜப்பானியத் தூதுவர் யசூஷி அகாஸி இங்கு மேலும் குறிப்பிடுகையில்;
ஐ.நா செயலாளர் நாயகத்திற்கென நியமிக்கப்படவுள்ள இலங்கை தொடர்பான குழு இலங்கை ஜனாதிபதியால் நியமிக்கப்படவுள்ள நல்லிணக்கக் குழுவிற்கு தமது அனுபவங்களையும் ஆலோசனைகளையும் வழங்க முடியும். எனினும் அந்த நல்லிணக்கக் குழுவின் நடவடிக்கைகளில் தலையிடக் கூடாது.
இம்முறை விஜயத்தின்போது நான் தமிழ்க் கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தினேன்.
தமிழ் மக்களின் பல்வேறு பிரச்சினைகள் குறித்தும் அரசியல் தீர்வொன்று சம்பந்த மாகவும் இதன்போது கலந்துரையாடப் பட்டது.
வடக்கில் மீள்குடியேற்றம் மீள் குடி யேற்றப்பட்டுள்ள மக்களின் உணவு மற் றும் வாழ்வாதாரப் பிரச்சினைகள் சம்பந் தமாக அவர்கள் தெளிவுபடுத்தினர். குறிப்பாக வடக்கில் பெருமளவு இராணு வத்தினர் உள்ளதாகவும் குறிப்பிட்டனர்.
இலங்கையில் மேற்கொள்ளப்படவுள்ள அரசியலமைப்பு மாற்றங்கள் பல்வேறு எதிர்பார்ப்புகளைத் தோற்றுவித்துள்ளது. இதன் மூலம் சகல இன, மத மக்களும் சுபீட்சமாகவும் அமைதியாகவும் நல்லிணக் கத்துடனும் வாழும் இலங்கை யொன்றைக் கட்டியெழுப்ப முடியும் என நான் நம்பு கின்றேன்.
இலங்கையில் தற்போது பல சாதகமான மாற்றங்களைக் காண முடிகிறது. அபிவி ருத்தி உட்பட பல முன்னேற்றகரமான செயற்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பல்வேறு நாடுகள் அதற்கான உதவி ஒத்துழைப்புகளை வழங்கி வருகின் றன. ஜப்பானும் இத்தகைய நடவடிக்கை களுக்குத் தமது பூரண ஆதரவினையும் ஒத்துழைப்புகளையும் தொடர்ந்தும் வழங்கும்.
ஜப்பானிய அரசாங்கம் இவ்வருடத்திற் கென 39 பில்லியன் யென்களை இலங் கைக்கு நிதியுதவியாக வழங்குகிறது. நாட்டின் தேசிய நலனைக் கருத்திற்கொண்டு இந்நிதி வழங்கப்படுகிறது. இதன் மூலம் நான்கு முக்கிய செயற்திட்டங்கள் முன் னெடுக்கப்படவுள்ளன. கிழக்கு மத்திய மாகாணங்களின் அபிவிருத்தித் திட்டங்கள் அம்பாறை மற்றும் கண்டி மாவட்டங்களின் குடிநீர்த்திட்டங்கள், யாழ். போதனா வைத்தியசாலை புனரமைப்பு மற்றும் மேல் கொத்மலை திட்டங்களின் புனரமைப்புக்கும் இந்நிதி செலவிடப்படவுள்ளன.
இலங்கை பல முக்கிய சவால்களை எதிர்கொண்டு தற்போது முன்னேற்றகர மானதும் சாத்தியமானதுமான பல திட்டங்களை முன்னெடுத்துள்ளது. அர சாங்கம் மேற்கொள்ளும் திட்டங்களை வெறுமனே விமர்சிப்பது முறையல்ல. இடம்பெற்று வரும் மாறுதல்களை நேரில் கண்டு அவை பற்றி பேச வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு தற்போது நிலவும் சிறந்த சூழலில் தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்களை விடு விப்பது தொடர்பில் ஜப்பான் கொண்டுள்ள நிலைப்பாடுகள் பற்றி ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அகாஸி; இவ்விவகாரத்தில் நாட்டின் பாதுகாப்பு சம்பந்தப்படுகிறது. பாதுகாப்பு விவகாரங்களுக்கு முன்னுரிமையளிக்கப்பட்டு வருவதனால் அதனூடாகவே தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் விடுதலை தொடர்பான தீர்மானத்தை மேற்கொள்ள முடியும். நிலைமைகள் சீரடைந்து வருவ தால் அரசாங்கம் இது விடயத்தில் உரிய கவனம் செலுத்தும் என்ற நம்பிக்கை உள்ள தாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
»»  (மேலும்)

வன்னிமக்களின் உணர்வுகளை யாழ் மக்கள புரிந்து கொள்ள வேண்டும் - வீ. ஆனந்தசங்கரி

யூன் மாதம் 22ம் திகதி தெடக்கம் 17 நாட்கள் நீடிக்கக் கூடியதாக மக்கள் களரி நாடகக் குழுவினர் நாடகக் கலைவிழா ஒன்றை ஆரம்பிக்க இருப்பது எனக்கு பெரும் ஆச்சரியத்தை தருகின்றது. தம் உறவினர் இறந்த சோகமும் பல சொத்துக்களை இழந்த கவலையிலும் மூழ்கியிருக்கும் வன்னி மக்கள் தமக்கு ஏற்பட்டுள்ள அதிர்ச்சியிலிருந்து மீள முன்பு யாழ் மக்கள் மகிழ்ச்சி ஆரவாரங்களில் ஈடுபடுவது வருந்தத்தக்க விடயமாகும். குழு அங்கதினர் சகல ஏற்பாடுகளையும் செய்துள்ள இவ் வேளை இதுபற்றி அவர்களுக்கு கூறியமைக்கு அவர்களிடம் மன்னிப்புக் கேட்கின்றேன். ஒரு தடவை உறுப்பினர்கள் வன்னிக்குச் சென்று கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டத்தில் உளள ;வீதிகளுக்கூடாகச் சென்று அங்கே ஏற்பட்டுள்ள பெரு அழிவுகளையும் இடம் பெயர்ந்து மீள் குடியமர்ந்த மக்கள் ஒருவருடத்;தின் பின்பும் எத்தகைய பரிதாப நிலையில் இருக்கின்றனர் என்பதையும் பார்க்கவேண்டும். அவர்கள் மீளக் குடியமர்ந்தவர்களாகத் தெரியவில்லை. மீண்டும் இடம் பெயர்ந்தவர்களாகவே தெரிகின்றனர்.

வன்னி மக்களின் முகத்தில் ஒரு புன்சிரிப்பையும் காணமுடியாது. கடந்த வருடம் வீட்டை விட்டு தம் குடும்ப அங்கத்தவர்கள் சுமக்கக் கூடிய பொருட்களோடு சென்றவர்கள் இன்றுவரை ஒரு நாளேனும் நிம்மதியாக உறங்கியதில்லை. தம் வீடுகளுக்கு அவர்கள் வந்து பார்த்த போது வீடுகள் தரை மட்டமாகவும் சில பெரிய அளவில் தகர்க்கப்பட்டும் சில வீடுகள் கூரை இன்றி யன்னல்கள் இன்றியும் உள்ளன. அவர்களின் வீடுகளில் எந்த ஒரு பொருளும் இருக்கவில்லை.

சொத்துக்கள் அனைத்தையும் இழந்து ஒட்டாண்டியாக வாழும் கிளிநொச்சி முல்லைத்தீவு மக்கள் மத்தியில் யாழ் மக்களுக்கு தம்மீது அனுதாபம் இல்லை என்று எண்ணம் பரவியுள்ளது. பலர் தமது உறவுகளை இழந்தும் சில குடும்பங்கள் முற்றாக அழிந்துமுள்ளன. சிலரை மக்கள் இன்னும் தேடிக் கொண்டுமிருக்கின்றனர்.  இரு கால்களையும் இரு கைiளையும் இழந்தவாகள் தம் வீடுகளை எவ்வாறு கட்டுவோம் என ஏக்கம் ஒரு புறம் புலி உறுப்பினாகள் என பிடித்து வைக்கப்பட்டிருக்கும் தம் பிள்ளைகளைப் பற்றி கவலை அவர்களுக்கு. இக்கட்த்தில் தான் அங்கு சென்று அவர்களுக்கு உதவ வேண்டும். இடிபாடுகள் நிறைந்த அவர்களின் கிணறுகளை சுத்தம் செய்து அவர்களின் உறைவிடம் திருத்த உதவ வேண்டும். 

இன்று அவர்களின் வீடுகளை கட்டுவோமா என்ற பயம். கட்டப் பொருட்கள் உதவியாக கொடுத்தாலும் கட்ட முடியுமா என்ற பயம் அவர்களுக்கு. முழு அளவிலான நட்ட ஈட்டு பெறத்தகுதியுடையவர்கள். அரசோ சர்வதேச சமூகமோ அத்தனை நம்பிக்கையைக் கொடுக்கவில்லை. வெறும் விவசாயிகளுக்கு உதவியை மட்டுமே கொடுப்பதாகவே அரசு முன்வருகிறது, இந்த நிகழ்சியை நடத்துவா விடுவதா என்கின்ற விடயமாக முடிவை எடுக்க வேண்டியவர்கள் நாடகக் குழுவினர்ரே. நான் ஒரு நாடக கூத்து இரசிகன். இந்த விடயத்தில் வன்னி மக்களின் உணர்வுகளை யாழ் மக்களுக்கு உணரவைப்போன். இதற்கு முன்பும் சில சங்கீத நிகழ்சிகள் நடந்துள்ளன. ஆனால் அவை அனைத்துமே வேறு நிறுவனங்களால் நடத்தப்பட்டவை. இந்த விடயத்தில் பொருத்மான ஆலோசனையை பெருத்தமான நேரத்தில் வழங்கப்படாமை வருத்தத்திற்குரியதே. இவ்விடத்தில் இளைளுர்கள் மற்றும் மக்களும் ஒரு தீர்வை எடுக்கலாம். எந்த முடிவும் நல்ல முடிவாக தெரியவேண்டியது அவர்களே. இந்நிகழ்வில் பங்குபற்றும் அனைவருக்கும் நான் பாதித்திருந்தால் மன்னிக்க வேண்டுகின்றேன்.
வீ. ஆனந்தசங்கரி - தலைவர்
தமிழர் விடுதலைக் கூட்டணி
»»  (மேலும்)

உறவுகளை தேடும் உள்ளங்கள்

 
கணவரைத் தேடும் உதா
கணவரைத் தேடும் உதா
இலங்கையின் கிழக்கு மாகாணம் விடுவிக்கப்பட்ட பின்னர் மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு சந்தர்ப்பங்களில் காணாமல் போனதாக கூறபப்டுபவர்களின் நூற்றுக்கும் மேற்பட்ட உறவினர்கள் கலந்து கொண்ட கூட்டமொன்று மட்டக்களப்பு நகரில் நடை பெற்றுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், மாவட்டத்தின் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
»»  (மேலும்)

6/20/2010

ஈ.பி.ஆர்.எல்.எப் உறுப்பினா கே.பத்மநாபாவின் 20 ஆவது நினைவு தின நிகழ்வு

 
  விடுதலைப்புலிகள் அமைப்பினரால் கடந்த கால யுத்தத்தின் போது 1165 ஈ.பி.ஆர்.எல்.எப் உறுப்பினர்கள் கொல்லப்பட்டுள்ளதாக அக்கட்சியின் பத்மநாபா அணியின் அமைப்பாளரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான இரா.துரைரட்ணம் தெரிவித்தார்.

கடந்த 19.06.1990 அன்று சென்னையில் புலிகளால் படுகொலை செய்யப்பட்ட ஈ.பி.ஆர்.எல்.எப்.தலைவர் கே.பத்மநாபாவின் 20 ஆவது நினைவு தினதியாகிகள் தினமான இன்று இறந்த போராளிகளின் நினைவாக நினைவுத்தூபி திறக்கப்பட்டதுடன் இரங்கல் கூட்டமும் நடைபெற்றது.

மட்டக்களப்பு ஈபிஆர்எல்எப் மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வுகளில் ரி.எம்.வி.பி.கட்சின் செயலாளர் நாயகம் ,  மாகாண சபைஉறுப்பினர்கள், இறந்த போராளிகளின் உறவுகள் உட்பட பெரும் எண்ணிக்கையிலானோர் கலந்து கொண்டனா
»»  (மேலும்)

புலம்பெயர்ந்த புலித் தலைவர்கள் அரசாங்கத்துக்கு ஒத்துழைப்பு கே.பி.உட்பட 9 பேர் கொழும்பில் பேச்சுவார்த்தை

 ஆங்கில வார இதழான ‘சண்டே ஒப்சேர்வர்’ பத்திரிகையாளர் அனந்த் பாலகிட்ணருக்கு கே. பி. என அழைக்கப்படும் குமரன் பத்மநாதன் வழங்கிய பிரத்தியேகப் பேட்டி


புலிகள் இயக்கத்தின் முன்னாள் சர்வதேச ஆதரவாளர்கள், போருக்குப் பின்னரான புனர்வாழ்வு, புனரமைப்புப் பணிகளில் அரசாங்கத்திற்கு ஒத்துழைக்க முன்வந்துள்ளனர்.
புலிகளின் முன்னாள் சர்வதேச தலைவரான குமரன் பத்மநாதன் உள்ளிட்ட ஒன்பது புலம்பெயர் தமிழ்ப் புத்தி ஜீவிகள் குழு அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்றப் போவதாக அறிவித்துள்ளது.
கனடா, சுவிட்சர்லாந்து, ஜேர்மன், பிரிட்டன், பிரான்ஸ், அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளில் உள்ள புலி ஆதரவாளர்கள் குமரன் பத்மநாதன் ஏற்பாட்டில் கொழும்புக்கு வந்து பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவையும் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி. எல். பீரிஸையும் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
இதன் போதே அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு உதவ அவர்கள் விருப்பம் தெரிவித்துள் ளனர். புலிகளின் ஆதரவாளர்களது இந்த மனமாற்றம் குறித்துக் கருத்துத் தெரிவித்த குமரன் பத்மநாதன் (கே. பீ.), வெளிநாடுகளில் உள்ள புலிகளின் ஆதரவாளர்கள் தற்போது யதார்த்த நிலையை நன்கு புரிந்துகொண்டு ள்ளார்கள் எனக் குறிப்பிட்டார். கடந்த வருடம் மே மாதம் யுத்தம் நிறைவுக்கு வந்ததிலிருந்து நாட்டின் நிலவரத்தைப் புலம்பெயர் தமிழர்கள் நன்கு அவதானித்து வருகின்றனர். ஆரம்பத்தில் நாட்டில் அமைதியை விரும்பாத சில அமைப்புகள் எதிர்மறையான பிரசாரங்களை முன்னெடுத்து வந்தன. எனினும் கடந்த ஒரு வருட காலத்தில் புலிகளின் ஆதரவாளர்களாகவிருந்த புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் பாரிய மனமாற்றம் ஏற்பட்டுள்ளதாக பத்மநாதன் சுட்டிக்காட்டினார்.
கொழும்பில் முக்கிய பேச்சுவார்த்தை நடத்திய பத்மநாதன் தலைமையிலான குழுவினர் வடக்கில் மீள்குடியேற்றப் பகுதிகளுக்கும் நேரடியாக விஜயம் செய்து நிலைமைகளை ஆராய்ந்துள்ளனர்.
மீள்குடியேற்றத்தில் சில குறைபாடுகள் காணப்படுவதாக அவர்கள் சுட்டிக்காட்டிய தாகவும், அதனை நிவர்த்திப்பதாக அரசாங்கத் தரப்பில் உறுதியளிக்கப்பட்டுள் ளதாகவும் பத்மநாதன் தெரிவித்தார்.
“புலிகள் இயக்கத்திற்காக வெளிநாடுகளில் திரட்டப்பட்ட பெருந்தொகையான நிதியை அரசாங்கத்தின் அபிவிருத்திச் செயற்பாடுகளுக்கு வழங்கப் போவதாகத் தெரிவித்த குமரன் பத்மநாதன், இதனை ஒருங்கமைப்பதற்காக வெளிநாட்டில் தன்னார்வ தொண்டு நிறுவனமொன்றை ஸ்தாபிக்க இணக்கம் காணப்பட்டுள்ள தாகவும் குறிப்பிட்டார். “வடக்கு, கிழக்கு அபிவிருத்தித் திட்டம்” எனப் பெயரிடப்பட வுள்ள இந்தத் தன்னார்வ அமைப்பின் மூலம், போருக்குப் பின்னரான மனிதாபிமானப் பணிகள் குறித்து புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
வெளிநாடுகளில் புலிகளுக்குப் பல மில்லியன் டொலர் சொத்து உள்ளதாக கூறிய குமரன் பத்மநாதன், புலிகளுக்காக சேகரிக்கப்பட்ட பணத்தைக் கையாள்வோர் தற்போது அதனை நாட்டின் மனித நேயப் பணிகளுக்குப் பரிமாற்றம் செய்ய இணக்கம் தெரிவித்திருப்பதாகவும் கூறினார்.
இதேவேளை, அரசாங்கத்துடன் இணை ந்து செயற்படுவதென்ற தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நிலைப்பாட்டை வரவேற்பதாகக் கூறிய கே. பீ, எந்தவிதமான வேறுபாடு களுமின்றி சமாதானத்தைக் கட்டியெழுப்புவதற்காக அனைவரும் ஒன்றுபட்டுப் பாடுபட வேண்டுமென்றும் வலியுறுத்தினார்.
»»  (மேலும்)

கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியிலே கைகலப்பு? உண்மை நிலை.


மட்டக்களப்பு மாவட்டத்தின் வந்தாறுமூலையில் அமைந்திருக்கின்ற மிகப் பிரபல்யமான கிழக்கு பல்கலைக்கழக விடுதியிலே 17.06.2010 அன்று இரவு இரு மாணவ குழுக்களிடையே ஏற்பட்ட தகராறு மிகவும் பூதாகரமாக வெடித்துள்ளது. கடந்த காலங்களோடு ஒப்பிடுகின்ற போது கிழக்கு பல்கலைக்கழகத்திலே மூவின மாணவர்களும் கல்வி பயின்று வருவது விசேட அம்சமாகும். கடந்த காலங்களில் நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக தமிழ் பேசும் மாணவர்களே இப்பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்று வந்தார்கள். அனால் தற்போது நாட்டில் சாதாரண சூழலால் சமூக மேம்பாட்டு அபிவிருத்திக்காக பெரும்பான்மை இன மக்களும் சிறுபான்மை இன மக்களோடு இணைந்து கல்வி நடவடிக்கைகளில் ஈடுபடுவது பாராட்டுக்குரியது. எது எவ்வாறாயினும் சில கசப்பான சம்பவங்கள் கல்விச் சமூகத்தின் மத்தியிலிருந்து ஏற்படுவது வேடிக்கையான விடயமே ஆகும்.
கடந்த 17.06.2010 அன்று கிழக்கு பல்கலைக்கழகத்தின் ஆண் மாணவர்களின் விடுதியில் நடந்த சம்பவத்திற்கான உண்மை காரணங்கள்  தொடர்பாக எமக்கு தெரிய வந்தவைகளை உங்களோடு பகிர்ந்து கொள்கின்றேன். குறித்த சம்பவம் நடந்த போது விடுதியி;ல் சுமார் 17 சிங்கள மாணவர்கள் இருந்திருக்கின்றார்கள். இவர்கள் அனைவரும் வர்த்தக பிரிவு மாணவர்கள். இங்கு கல்வி கற்கின்ற சிங்கள மாணவர்கள் ஓரிரு வாரங்களுக்கு முன்னர் போயா தின (பொஷன்) நிகழ்வினை சிறப்பித்து அனுஷ்ட்டிப்பதற்காக மாணவர்கள் மத்தியில் நிதி வசூலித்திருக்கின்றார்கள். அதற்கு அனைத்து மாணவர்களும் ஒத்துளைப்பு வழங்கினார்கள். ஆனால் இந் நிதி அதற்காக பயன்படுத்தவில்லை என தமிழ் மாணவர்கள் தெரிவித்திருக்கின்றார்கள். உண்மையிலேயே குறித்த இந்நிதியானது போர் வீரர்களின் வெற்றியினை கொண்டாடுவதற்காகவே அறவிடப்பட்டது என ஒரு சிலர் குறிப்பிடகின்றார்கள். குறித்த அன்றிரவு பெரம்பான்மை இன மாணவர்கள் மது போதையுடன் கூடிய ஓர் விருந்துபசாரத்தினையும்; ஏற்பாடு  செய்திருந்தார்கள். இவ் மதுவிருந்துபசாரம் எதற்காக ஏற்பாடு செய்யப்பட்டது என்பதிலேயே இப்பிரச்சினை ஆரம்பித்திருக்கின்றது.
உண்மையிலேயே வட பகுதி மாணவர்கள் ஒரு சிலர் போராட்டத்தின் கொடுமையில் நேரடியாக  பாதிக்கப்பட்டவர்கள் அதாhவது தாய் தந்தை சகோதரங்களை இழந்தவர்கள் இவர்கள் அவ் மதுவிருந்துபசாரத்தினை ஏற்பாடு செய்த மாணவர்களிடம் கூறியிருக்கின்றார்கள். “நீங்கள் எது வேண்டுமானாலும் செய்யுங்கள் ஆனால் எங்களது அறைக்கு வராமல்” ஆனால் அச்சிங்கள மாணவர்கள் அன்றிரவு பெரும் கூச்சலிட்டு ஆரவாரம் பண்ணியிருக்கின்றார்கள். எனவே இதனை பொறுக்காத ஒரு சில மாணவர்கள் அவர்களுடன் வார்த்தைகளால் மோதியிருக்கின்றார்கள் இதனால் முறுகல் நிலை கைகலப்பு வரை செல்லுமளவுக்கு சூடானது. ஆனால் கைகலபு; இடம்பெறவில்லை. பின்னர் பல்கலைக்கழக நிர்வாகமும் பொலிசாரும் தலையிட்டு பிரச்சினையினை தீர்வுக்கு கொண்டுவந்தனர்.
இதனூடாக வெளிப்படுவது உண்மையில் இரண்டு விடயங்கள், அதாவது அக்குறித்த சிங்களன மாணவர்கள் வேண்டுமென்றே இதனை செய்திருந்தால்  போராட்டத்தின் வலியினை நேரடியாக தாங்கிய தமிழ் மாணவர்களுக்கு வேதனையளித்திருக்கும். அத்தோடு குறிபிபிட்ட ஒரு சில சிங்கள மாணவர்கள் பெருந்தொகையாக இருக்கின்ற தமிழ் மாணவர்களுக்கு எதிராக செயற்பட்டமை என்பது வேதனையே. போரின் வடுக்கள் இன்னும் அழியாத நிலையில் இப்படியான போர் வெற்றியினை அதில் நேரடியாக ஈடுபடாதவர்கள் அதே ஒரு பெரும் கல்விச் சமூகம் பாதிக்கப்பட்ட  மாணவர்கள் இருக்கின்ற இடத்தில் கொண்டாடுவதென்பது உண்மையில் வேதனையே, ஆனால் இராணுவ வீரர்களோ அதன் பங்காளர்களோ அதனை கொண்டாடுவது நியாயம் என ஒரு புறம் இருந்தாலும், இவ்வாறான நன்கு கற்ற சமூகம் ஒரு புரிந்துணர்வுடன் செயற்படாமை வேதனையளிக்கின்றது.
அடுத்தது என்னவெனில் குறித்த சிங்கள மாணவர்கள் இங்கிருந்து இடமாற்றம் பெற்றுச் செல்ல வேண்டும் என்பதற்காகவும் இதனை ஒரு பெரிய பிரச்சினையாகக்கியிருக்கலாம் எனவும் எண்ண தோன்றுகின்றது. எது எவ்வாறாயினும் படித்த ஒரு சமூகம்தான் சமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டியவர்கள் அவர்களே தங்களுக்குள் தாங்கள் புரிந்துணர்வின்றி செயற்படவது உண்மையில் வெட்கமாக இருக்கின்றது. இது முடிந்தவை முடிந்தவையாக இருக்கட்டும் இனி வருங் காலங்களில் இது போன்ற தவறுகளை விடாமல் மாணவர் சமூகங்கள் ஒரு சமூகத்தின் விருப்பு வெறுப்புக்களுக்கு அப்பாற்பட்ட சமூகத்தின் ஒற்றுமைக்கான தோற்றுவாயாக அமைய வேண்டும் என நான் எதிர்பார்க்கின்றேன்.
மீன்மகளுக்காக,
நரசிம்மன்.
»»  (மேலும்)

6/17/2010

இலங்கைக்கு சர்வதேச அமைப்புகள் அழுத்தம் கொடுக்க வேண்டியதில்லை -ஜப்பானிய விசேட தூதுவர் அகாஷி

இலங்கையில் போர்க் குற்றங்கள் இடம்பெற்றிருப்பதாகக் கூறப்படுவதை அரசாங்கம் மீண்டும் திட்டவட்டமாக நிராகரித்துள்ளது.
வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் நேற்று (16) இதனை அறிவித்தார்.
இலங்கைக்கு வருகை தந்துள்ள ஜப்பானிய விசேட தூதுவர் யசூசி அகாஷியுடனான சந்திப்புக்குப் பின்னர் வெளிவிவகார அமைச்சில் அவருடன் கூட்டாக நடத்திய செய்தியாளர் மாநாட்டிலேயே பேராசிரியர் பீரிஸ் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
போர்க் குற்றங்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டுமெனக் கூறப்படுவது பற்றி ஜப்பானின் நிலைப்பாடு யாதென்று செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.
இதற்கு அகாஷி பதிலளித்ததன் பின்னர் இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாட்டை அமைச்சர் பீரிஸ் விளக்கினார். அதேநேரம், அரசியல் தீர்வு விடயமாக சிறுபான்மைக் கட்சிகளுடன் அரசாங்கம் பேச்சுவார்த் தைகளை ஆரம்பித்துள்ளதாகக் குறிப்பிட்ட அமைச்சர் பீரிஸ், தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோருடன் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளதாகவும் தொடர்ச்சியாக இந்தப் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.
போர்க்குற்ற விசாரணை தொடர்பான கேள்விக்குப் பதில் அளித்த ஜப்பானிய விசேட தூதுவர் அகாஷி, இலங்கைக்கு சர்வதேச அமைப்புகள் அழுத்தம் கொடுக்க வேண்டியதில்லையென்றும், தேவையான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டிருப்பதாகவும் குறிப்பிட்டார்.
அதனை ஜப்பான் உன்னிப்பாக அவதானித்துக் கொண்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
»»  (மேலும்)

6/16/2010

இராஜதந்திரிகள் விஜயம்

இலங்கை அரசாங்கம் போரில் வெற்றிபெற்று ஒரு வருடம் கழிந்த நிலையில் அந்த நாடு எதிர்கொள்கின்ற சவால்களை விவாதிக்கும் வகையில் இந்த வாரத்தில் இலங்கைக்கு பல வெளிநாட்டு மூத்த இராஜதந்திரிகள் விஜயம் செய்கிறார்கள்.
ஐநாவின் மூத்த அதிகாரியான லின் பஸ்கோ மற்றும் ஜப்பானின் இலங்கைக்கான சிறப்புத்தூதுவரான யசூசி அகாசி ஆகியோர் வரவிருக்கும் நிலையில், யாரும் எதிர்பாராத வகையில் அமெரிக்க அதிபர் ஒபாமாவின் மூத்த ஆலோசகர்கள் இருவர் ஏற்கனவே இலங்கைக்கு வந்துவிட்டார்கள்.
விடுதலைப்புலிகளுக்கு எதிரான போரில் இலங்கை அரசாங்கம் வெற்றி பெற்ற ஒரு வருடத்தை கடந்த மாதம் இலங்கை பூர்த்தி செய்திருந்த நிலையில், இலங்கை அரசாங்கமும், விடுதலைப்புலிகளும் போரின் இறுதிக்கட்டத்தில் போர்க்குற்றங்களை செய்திருக்கலாம் என்று குற்றஞ்சாட்டி அம்னஸ்டி இன்டர்நேஷனல் அமைப்பு தொடர்ச்சியாக வெளியிட்ட அறிக்கைகள் இலங்கை அரசாங்கத்தை கடுமையாக கோபப்படுத்தியிருந்தன.
அப்படியான நடவடிக்கைகளில் தமது படையினர் ஈடுபடவில்லை என்று இலங்கை அரசாங்கம் மறுத்திருந்தது.
ஆனால், ''போர்க்குற்றங்கள் மற்றும் அக்கிரமங்கள்'' ஆகியவை குறித்த அமெரிக்க தேசிய பாதுகாப்புக் கவுன்ஸிலின் இயக்குனரான டேவிட் பிரஸ்மனும், அதிபர் ஒபாமாவின் மற்றுமொரு மூத்த ஆலோசகரான சமந்தா பவர் அவர்களும் ஏற்கனவே இலங்கையில் வந்தது தங்கியிருக்கிறார்கள் என்று திடீரென தெரியவந்துள்ளது.
அதிகாரிகளையும், சிவில் சமூக உறுப்பினர்களையும் சந்தித்து வருகின்ற அவர்கள், இலங்கையின் போர் நடந்த இடங்களுக்கும் விஜயம் செய்கிறார்கள்.
இலங்கை அரசாங்கம் போரின் போது கையாண்ட யுக்திகள் தொடர்பாக கடுமையாக விமர்சித்துவந்த அமெரிக்கா, அண்மைக்காலமாக, இலங்கையை ஊக்கம் தந்து திருத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கிறது.
சில சர்வதேச விமர்சனங்களால் கவரப்படாமல், இலங்கை அரசாங்கத்தால், நியமிக்கப்பட்டுள்ள புதிய நல்லிணக்கக்குழு தனது பணியை செய்ய அனுமதிக்க வேண்டும் என்று அமெரிக்க அரசுத்துறைச் செயலர் ஹிலாரி கிளின்டன் கூறியுள்ளார்.
அதற்கு எதிராக முத்த ஐநா அதிகாரிகள் இலங்கையில் போரின் இறுதி நாட்களில் இடம்பெற்ற நிகழ்வுகள் குறித்து சர்வதேச விசாரணை ஒன்று நடத்தப்பட வேண்டும் என்று அழைப்புவிடுத்துவருகின்றார்கள்.
பல தடவைகள் தனது இலங்கைக்கான விஜயத்தை பின்போட்டு வந்த ஐநாவின் மூத்த அரசியல் அதிகாரியான லின் பாஸ்கோ அவர்கள் இறுதியாக புதனன்று இலங்கை வரவுள்ளார்.
இலங்கையில் சர்வதேச மனித உரிமைச் சட்டங்கள் மீறப்பட்டனவா என்பது குறித்த பொறுப்புக் சுமத்தும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக ஐநாவின் தலைமைச் செயலர் பான் கீ மூன் அவர்கள், இலங்கை விவகார நிபுணர்கள் குழு ஒன்றை நியமித்துள்ளார்.
''பொறுப்பு சுமத்தல்'' மற்றும் ''நல்லிணக்கம்'' என்ற இந்த இரண்டு பதங்கள்தான், அவற்றை வலியுறுத்தும் முறையே ஐநா மற்றும் அமெரிக்க அதிகாரிகள் போரின் பின்னரான இலங்கையில் எதற்கு முன்னுரிமை கொடுத்து ஆராய விழைவார்கள் என்பதற்கு ஒரு தடயமாகும்.
 
»»  (மேலும்)

மாவோயிஸ்ட் பிரச்னைக்கு மத்திய அரசுகளே காரணம்: மாயாவதி

 


  : தொடர்ந்து வந்த மத்திய அரசுகளின் தவறான சமூக-பொருளாதர கொள்கைகளே மக்களை மாவோயிஸ்ட்களாக மாற்றியுள்ளது என்று உத்தர பிரதேசத்தின் முதல்வர் மாயாவதி கூறியுள்ளார்.   சுதந்திரத்துக்குப் பின் ஆட்சி புரிந்த காங்கிரஸ்,பா.ஜ.க, மற்றும் இதர கட்சிகள் தவறான சமூக-பொருளாதர கொள்கைகளே கொண்டுள்ளன. இதனாலே ஏழை மக்கள்கள் தங்களின் நியாயங்களுக்காக வன்முறை பாதையை தேர்ந்தெடுக்க வேண்டியதாகிப் போனது. ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தவறான கொள்கைகளே தற்போது நிலவும் கடுமையான விலையேற்றத்துக்கு காரணமாகும்.பெட்ரோல், டீசல் விலைகளை ஏற்றுவதன் மூலம் மத்திய அரசு விலை உயர்வு பிரச்சனையை முக்கியமானதாக கருதவில்லை என்பது தெளிவாகிறது.   நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில், மக்களின் வாக்குகளை பெறவே ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு அப்போது பெட்ரோல், டீசல் விலைகளை ஏற்றவில்லை. ஆனால், ஆட்சிக்கு வந்தவுடன் விலைகளை ஏற்றிவிட்டது. பெரிய கட்சிகளான காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க தங்களின் பொதுக்கூட்டங்களுக்கும், தேர்தல் செவுகளுக்கும் பெரிய நிறுவனங்களிடமிருந்து பணத்தை பெறுகின்றன. ஆட்சிக்கு வந்தப் பின், அத்தொகையை திரும்ப தருகின்றன என்றும் அவர் கூறினார்.மே.வங்கம், பிகார் தேர்தல்களில் பி.எஸ்.பி தனித்துப் போட்டி: நடைபெறவுள்ள பிகார், மேற்கு வங்கம், ஒரிசா மற்றும் ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல்களில் பகுஜன் சமாஜ்வாதிக் கட்சி தனித்து நின்று போட்டியிடும் என்றும் அவர் கூறினார்.   பிகாரில் உள்ள கட்சித் தொண்டர்களிடம், உத்தர பிரதேசத்தில் உள்ளது போல அனைத்து சாதியினரையும் ஒன்றிணைத்து தேர்தலை சந்திக்க வேண்டும் என்று அவர் கூறினார். கட்சியின் கொள்கையை அடிதட்டு மக்களிடம் சென்று விளக்க வேண்டும் என்று கூறினார். உத்திர பிரதேசத்தில் ஆட்சிக்கு வந்த பின் நடைபெற்ற பல இடைத் தேர்தல்களில் சமாஜ்வாதிக் கட்சியிடமிருந்து, பல தொகுதிகளை பகுஜன் சமாஜ்வாதிக் கட்சி தன் வசமாக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
»»  (மேலும்)

ஆப்கானிஸ்தானில் விலைமதிப்பற்ற கனிப்பொருள் வளங்கள் உள்ளதாகத் தகவல்

ஆப்கானிஸ்தானில் எண்ணற்ற கனிப்பொருட்கள் காணப்படுவதாகவும் இதன் பெறுமதிகள் ஒரு டிர்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிகமானதென்றும் அமெரிக்காவின் பாதுகாப்புத் தலைமைய கமான பென்டகன் அறிவித்துள்ளது.
இக்கனிப் பொருட்கள் முறையாகப் பெயர்க்கப்பட்டு பாவனைக்கு வரும் பட்சத்தில் ஆப்கானை செல்வம் கொழிக்கும் நாடாக மாறும். எண்ணெய் வளத்தால் சவூதி அரேபியா பெறும் வருமானத்தை விடவும் கூடுதலான செல்வத்தை ஈட்டமுடியும் என பென்டகன் கூறியுள்ளதுடன் நீண்டகால யுத்தத்தால் சீரழிந்து போயுள்ள ஆப்கானின் புனருத்தாரணப்பணிகள், கல்வி, சுகாதாரம் அபிவிருத்தி போன்ற துறைகளில் இப்பணத்தைச் செலவிட முடியுமெனவும் பென்டகன் கூறியுள்ளது.
தங்கம், செம்பு, வெள்ளி, பித்தளை, லதியம் உள்ளிட்ட பெறுமதியான கனிப் பொருட்கள் ஆப்கானிஸ்தானிலுள்ளதாக நம்பப்படுகிறது. ஆனால் இவை பெரும்பாலும் தலிபான்களின் செல்வாக்குள்ள பிரதேசங்களிலேயே காணப்படுகின்றன.
இவை தலிபான்களின் கைவசம் செல்லுமாயின் அவர்கள் நிறையப் பணங்களைச் சம்பாதிப்பர். இது தலிபான்களின் இராணுவ பலத்தை அதிகரிக்கும். எனவே ஆப்கான் அமெரிக்க அரசுகள் இக்கனிப் பொருட்களை பெறுவதில் கூடிய கவனத்தை செலுத்தியுள்ளன.
கடும் சண்டைக்குப் பின்னர் இந்நிலங்களைத் தலிபான்களிடமிருந்து மீட்ட பின்னரே இக்கனிப் பொருட்களைப் பெறமுடியும் எனக் கருதப்படுகின்றது.
 
»»  (மேலும்)

திரு. ஆனந்சங்கரிக்கு அகவை 77

தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் திரு. வீ. ஆனந்தசங்கரி அவர்களுக்கு இன்று (15.06.2010) அகவை 77. எதையும் துணிச்சலுடன எதிர்நோக்குகின்ற, அநீதிக்கு எதிராக போராடும் போர்க்குணம் கொண்ட அவரின் ஆரோக்கியமான அரசியல் பிரவேசம் கிளிநொசிப் பிரதேசம்தான். ஆசிரியராக தனது தொழிலை ஆரம்பித்து படிப்படியாக அரசியல் பிரவேசம் செய்தார். அதோடு சட்டக் கல்லூரியிலும் பயின்று சட்டத்தரணியானார். கிளிநொச்சியில் அரசியல் என்பது நிலப்பிரபுக்களுக்கு மட்டுமே சொந்தமாக இருந்த நேரம் அது. கிளிநொச்சிப் பகுதியில் உள்ள ஏழை விவசாயிகளோடு கைகோர்ததுக்கொணடு 1960ம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு பின் 1965ம் ஆண்டு கிராமசபைத் தலைவராகி அரசியல் அங்கீகாரத்தை பெற்றுக்கொண்டார். பின்னர் பட்டிணசபைத் தலைவராகி அதன் பின்பு 1970ல் முதன்முதலாக பாராளுமன்றத்திற்கு தெரிவானார்;. 1977ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலிலும் மீண்டும் பாராளுமன்ற உறுப்பினரானார்;. 1970தொடக்கம்1983 வரை அவர் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த காலம்தான் கிளிநொச்சியின் பொற்காலமாகும். விவசாயிகளின் அத்தனை தேவைகளும் பூர்த்திசெய்யப்பட்டன. வயல்காணிகளும்சரி, தோட்டக்காணிகளும்சரி அமோக விளைச்சல் கண்டன. வாரத்தில் சனிக்கிழமை மட்டுமே கூடிய சந்தை அமோக விளைச்சல் காரணமாக புதன் கிழமையும் கூடத்தொடங்கியது. வேலை வாய்ப்புகள் அனைத்தும் குறிப்பாக பரந்தன் இரசாயனத் தொழிற்சாலை, ஆனையிறவு உப்பளம், தென்னை ஆராய்ச்சி நிலையம், நீர்பாசனத்திணைக்களம், கமநலசேவைநிலையம் போன்றவற்றில் உள்@ர் வாசிகளுக்கே முன்னுரிமை கொடுக்கப்பட்டன.

கல்வியில் புது புரட்சி ஏற்படுத்தப்பட்டது. 1973ம் ஆண்டு நான் க.பொ.த.சாதாரணதர மாணவன். கிளிநொச்சி மகாவித்தியாலயத்தில் அதுவரை எவரும் குறிப்பிட்டு சொல்லும் அளவிற்கு சித்தியடையவில்லை. மாணவர்களில் அனேகர் வட்டக்கச்சி, இராமநாதபுரம், உருத்திரபுரம், பரந்தன் போன்ற பகுதிகளில் இருந்து வருபவர்கள். மாணவர்கள் அனைவரையும் அழைத்து தன்னுடைய அலுவலகத்தில் இரவு நேரத்தில் குழுவாக சேர்ந்து படிப்பதற்கு அனுமதி தந்தார் திரு. ஆனந்தசங்கரி. அவர் அலுவலகத்தின் பின்பகுதியில் குடும்பத்துடன் வசித்துவந்தார். ஆனந்தசங்கரி அவர்கள் அதிகாலையில் 4.30 மணிக்கு அலாரம் வைத்து எங்களை எழுப்பிவிடுவார். அவரைத் தொடந்து அவர் துணைவியார் சுடச்சுட தேனீருடன் பனங்கட்டியும் தருவார். ஆனந்தசங்கரி நினைத்ததை பரீட்சை முடிவில் நாங்கள் சாதித்து காட்டினோம். ஆம் கலைப்பிரிவிலேயே சித்தியடையமுடியாமல் இருந்த பாடசாலையில் விஞ்ஞானப் பிரிவில் அதுவும் விஞ்ஞானப்பாடத்திலும், கணிதப்பாடத்திலும் திறமைச்சித்திகளுடன் சித்தியடைந்தோம். விஞ்ஞானப்பிரிவில் அதிகூடிய திறமை சித்திகளுடன் நான் முதல் மாணவனாக சித்தியடைந்தேன். திரு. ஆனந்தசங்கரியின் அலுவலகத்தில் இருந்து படித்தவர்கள் அத்தனைபேரும் இன்று உயர்

பதவியில் இருக்கின்றார்கள். இலங்கையில்; தன் அலுவலகத்தையே மாணவர்கள் படிப்பதற்காக பயன்படுத்தக்கொடுத்த ஒரே பாராளுமன்ற உறுப்பினர் தமிழர் விடுதலைக்கூட்டணித் தலைவர் திரு.வீ. ஆனந்தசங்கரி அவர்கள் மட்டுமே. அந்தளவிற்கு மாணவர்களின் கல்வியில் அக்கறை காட்டினார்.

கிளிநொச்சித் தொகுதி மாணவர்கள் கல்வியில் யாழ் மாவட்டத்தில் உள்ள மாணவர்களுடன் போட்டி போட்டே கல்விகற்க வேண்டியிருப்பதால் பாடசாலைகளின் ஆய்வுகூட வசதிகள் உட்பட அனைத்து வசதிகளும் செய்து பாடசாலைகளின் தரங்களை உயர்த்தினார்;. இருந்தும் மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்கு தெரிவாவதில் மிகுந்த சிரமங்களை எதிர்நோக்கினார்கள். இதனை சீர்செய்ய வேண்டுமானால் தனிமாவட்டமே சரியான தீர்வு என்பதை ஆனந்தசங்கரி புரிந்து கொண்டார். அதுமட்டுமல்ல அபிவிருத்தி, மற்றும் வேலைவாய்ப்பு அனைத்திற்கும் தனிமாவட்டமே சரியான வழியென தெரிந்து கொண்டு அதற்காக போராடினார். தமிழர் விடுதலைக் கூட்டணி பாரர்ளுமன்ற உறுப்பினர்கள், கிளிநொச்சி தவிர்ந்த ஏனைய தொகுதியில் உள்ள கட்சியின் முக்கிய பிரமுகர்கள் அனைவரும் தனிமாவட்ட கோரிக்கையை எதிர்த்தார்கள். தனியாக நின்று போராடி கிளிநொச்சி மக்களின் துணையுடன் தனிமாவட்டமாக்கினார். அதன் பின்னர்தான் தனி மாவட்டச் செயலகம், தனியானதொரு மாவட்டவைத்தியசாலை, மற்றும் தனித்தனி மாவட்;ட திணைக்களங்கள் என அத்தனை வளர்ச்சியும் கண்டன. எல்லாவற்றுக்கும் மேலாக பலகலைக்கழகத்திற்கு அதிகமான மாணவர்கள் தெரிவானார்கள். பல வைத்தியர்கள்; உருவாகினார்கள, பல பட்டதாரிகள் தோன்றினார்கள். கிளிநொச்சியில் உருவான வைத்தியர்களும், பட்டதாரிகளும் ஆனந்தசங்கரி அவர்களுக்கு நன்றிக்கடன் பட்டவர்களாவார்கள். அதுமட்டுமல்ல இன்று வரை எத்தனையோ ஏழை மாணவர்களின் கல்விக்கு உதவி செய்து கொண்டிருப்பதோடு, பல முன்பள்ளி ஆசிரியாகளுக்கான கொடுப்பனவுகளையும் மாதாமாதம் கொடுத்துக் கொண்டிருக்கின்றார். அவரை நாடி வரும் ஏழை எளிய மக்களுக்கு தன்னால் முடிந்ததை செய்து கொண்டிருக்கின்றார். எத்தனையோ உயிர் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் இன்று வரை எம்முடன் வாழ்ந்து கொண்டிருக்கின்றார் என்றால், அவர் செய்த தரும காரியங்களே அவரை காத்து நின்றது எனலாம்.

விடுதலைப்புலிகளுக்கும் அரசுக்கும் யுத்தம் நடந்த நேரத்தில் பலர் விடுதலைப்புலிகளுக்கு உசுப்பேத்தி ரணகளத்திற்கு கொண்டு சென்ற வேளையில் ஆனந்தசங்கரி மட்டும்தான் விடுதலைப்புலிகளுக்கு அறிவுரை கூறி யுத்தத்தை நிறுத்தி பேச்சுவார்த்தைக்கு வரும்படி வேண்டினார். ஆரம்பத்திலிருந்தே புலிகளுக்கு இடித்துக்கூறி சரியான வழியை காட்டினார். துரதிஸ்டவசமாக அவர்களால் அதை புரிந்து கொள்ளமுடியவில்லை. இவருடன் இணைந்து அரசியல் தலைவர்களும், புத்திஜீவிகளும் விடுதலைப் புலிகளுக்கு இடித்துக்கூறி உண்மை நிலையினை தெளிவு படுத்தியிருந்தால் முள்ளிவாய்க்கால் பகுதியில் கொள்ளிவைப்பதற்குகூட ஒரு தமிழன் இல்லாமல் கொல்லப்பட்ட சமபவம் நடந்தும் இருக்காது, விடுதலைப்புலிகளும் அரசியல் நீரோட்டத்தில் கலந்து தழிழனை தலைநிமிரச் செய்திருப்பார்கள். தழிழினத்திற்கு இந்த நிலை வரப்போகின்றது, புலிகளும் அழியப் போகின்றார்கள், தயவு செய்து எனது பேச்சைக் கேளுங்கள். தமிழர்களையும், போராளிகளையும் காப்பாற்றுங்கள் என புலிகளை கெஞ்சி மன்றாடி எத்தனையோ கடிதங்கள் எழுதினார். கடைசியில் அவர் சொன்னபடியே எல்லாம் நடந்து முடிந்து விட்டது. கசப்பாக இருந்தாலும் உண்மையை சொன்ன ஒரே தலைவன் ஆனந்தசங்கரி மட்டுமே. உண்மையை சொன்ன ஒNரு காரணத்திற்காக துரோகியாக்கப்பட்டார். யதார்த்தவாதி வெகுஜனவிரோதி என்பார்கள். சிந்திக்கத் தூண்டிய சோக்ரடீஸ_க்கு நஞ்சு கொடுத்த சமூகம் இது, உலகம் உருண்டையென கூறிய கலிலியோவின் கண்களைப் பறித்த சமூகம் இது, யேசுநாதரை சிலுவையில் அறைந்த சமூகம் இது, இன்று அனைத்து தமிழர்களாலும் ஏற்றுக் கொள்ளப்படுகின்ற இந்திய அரசியல் அமைப்பு முறைதான் தமிழர்களுக்கு ஏற்ற தீர்வாக அமையுமென அன்றே எடுத்துக் கூறியதற்காக தமிழர் விடுலைதக்கூட்டணியின் செயலாளர் நாயகம் அமரர் அமிர்தலிங்கத்தை சுட்டுக்கொன்ற சமூகம் இது. தலைவர் ஆனந்தசங்கரியையா விட்டு விக்கப் போகின்றது? துரோகிப் பட்டம் கொடுத்து தேர்தலில் அடுத்தடுத்து தோல்வியை கொடுத்தது நம் தமிழ் சமூகம். ஆனால் ஆனந்தசங்கரி தோல்வியைக்கண்டு துவண்டு போகவில்லை. தொடர்ந்தும் தமிழ் சமூகத்திற்கு ஒரு விடிவு கிடைக்க போராடிக் கொண்டேயிருக்கின்றார். “சிங்கத்தின் கால்கள் பழுது பட்டாலும் சீற்றம் குறைவதில்லை”. நீதி, நேர்மை, அரசியலில் தூய்மை, பதவியை துச்சமென நினைக்கும் தன்மை, எவர் தவறு செய்தாலும் துணிச்சலுடன் தட்டிக்கேட்கும் போர்க்குணம் இதுதான்; அவரிடம் நான் கண்ட சிறப்பு. ஆனால் இத்தனை சிறப்புகளையும் கொண்ட அந்த தலைவனுக்கு தமிழ் மக்கள், இன்னல்கள் நிறைந்த இந்த காலகட்டத்தில் ஒரு உயர்ந்த அரசியல் அங்கீகாரம் அளிக்காமல் துரோகம் செய்ததுதான் வரலாற்றுக் கொடுமை. இதன் மூலம் தமிழ் மக்கள் தங்களுக்கு தாங்களே துரோகம் செய்து கொண்டனர். ஆனாலும் எங்கோ இருக்கின்ற யுனெஸ்கோ நிறுவனம் சகிப்புத்தன்மையுடன் வன்முறைக்கெதிராக செயற்பட்டதற்கான விருது கொடுத்து அவரை கௌரவித்தது. சர்வதேசத்திற்கே தெரிந்த அந்தத் தலைவனின் அருமை, அருகில் இருந்த எம்மவர்களுக்கு புரியாமல் போனது வியப்புக்குரியது மட்டுமல்ல, நாம் அனைவரும் வெட்கித் தலைகுனிய வேண்டிய விடயமுமாகும். ஆனந்தசங்கரி அவர்களின் அரசியல்,சமூக சேவைகளை பெற்றுக் கொள்ளமுடியாமல் அவரை தேர்தலில் தோல்வியைக் கொடுத்து தமிழினம் சாபத்தை தேடிக்கொண்டது.

இத்துனை சிறப்புகளைக் கொண்ட அந்தத் தலைவனின் அருகில் இருந்து அரசியல் பணி செய்ய கிடைத்த வாய்ப்பை ஆண்டவன் எனக்களித்த  பெரும் கொடையாக நினைக்கின்றேன். அரசியலில் தன்னலம் கருதாத இவ்வாறான துணிச்சலான தலைவர்கள் எப்போதாவதுதான் பிறப்பார்கள்;. அந்தவகையில் ஆனந்தசங்கரியும் ஒருவராவார். இவர் இன்னும் பல்லாணடு வாழ்ந்து தமிழினத்திற்கு சேவை செய்ய வேண்டுமென எல்லாம் வல்ல இறைவனை பிரார்திக்கின்றேன்.


இரா. சங்கையா,

யாழ் மாநகர சபை உறுப்பினர் 
»»  (மேலும்)

6/15/2010

'சுதந்திரக் காற்றை சுவாசிக்க விடுங்கள்' : தமிழ் அரசியல் கைதிகள் மகஜர் _

'
 
 
  "நான்கு சுவர்களுக்குள் அடைக்கப்பட்டு சுதந்திரக் காற்றைச் சுவாசிக்க முடியாமல் தவிக்கும் நாமும் இந்நாட்டுப் பிரஜைகளே. எமது விடுதலையை துரிதப்படுத்தி எங்கள் உறவுகளோடு இணைந்து வாழ உதவுங்கள்" என தமிழ் அரசியல் கைதிகள் அனைவரும் இணைந்து ஜனாதிபதியிடம் உருக்கமான கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளனர்.

தங்களது கோரிக்கைகளை முன்வைத்து ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு மகஜரொன்றை அனுப்பி வைத்துள்ளனர்.

"இலங்கையிலுள்ள அனைத்துத் தமிழ் அரசியல் கைதிகள் சார்பாக கொழும்பு புதிய மகஸின் சிறைச்சாலைக் கைதிகள், ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு அனுப்பி வைத்துள்ள மகஜரிலேயே இவ்வாறு கோரப்பட்டுள்ளது.

அந்த மகஜரில் மேலும் குறிப்பிடப்பட்டள்ளதாவது : "ஜனாதிபதி அவர்களே !

நீண்டகாலமாக தடுத்துவைக்கப்பட்டுள்ள நாம் யுத்தம் முடிவடைந்து ஒரு வருடமாகியும் தொடர்ந்து சிறையில் வாடுகின்றோம். எமது விடுதலை தொடர்பாக எவ்வித கரிசனையும் காட்டப்படவில்லை.

கடந்த மூன்று தசாப்தங்கள் நீடித்து வந்த யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்து, அனைத்து மக்களும் சமூக ஒற்றுமையுடனும் ஐக்கியத்துடனும் நற்பிரஜைகளாக வாழவேண்டும் என்பதே தங்களின் விருப்பமாகும். கிழக்கின் உதயம், வடக்கின் வசந்தம் போன்ற மனிதாபிமான செயற்பாடுகளைத் தங்களின் சிறந்த தலைமையில் நடத்தி வருகின்றீர்கள்.

நான்கு சுவர்களுக்குள் சுதந்திரக் காற்றைச் சுவாசிக்க முடியாமல் இருக்கும் நாமும் எதிர்காலத்தில் இந்த நாட்டின் நற்பிரஜைகளாக வாழவே விரும்புகின்றோம்.

எங்களுக்கு எப்போது வசந்தம் வீசும்? கடந்த காலங்களில் நீதி அமைச்சர் மற்றும் சட்டமா அதிபர், சமூகப் பெரியோர்கள், அரசியல்வாதிகள் எனப் பல்வேறு தரப்பினரும் எம் விடுதலையைத் துரிதப்படுத்துவதாக உறுதிமொழிகள் கூறியும் எவ்வித முன்னேற்றமோ, நன்மையோ இதுவரை ஏற்படவில்லை.

"சிறுபான்மை இனம் என்ற ஒன்றில்லை; அனைவரும் இந்த நாட்டை நேசிக்கும் மக்களே..." என்று நீங்கள் கூறியுள்ளீர்கள்.

தமிழ் மக்கள் அனைவரும் இந்த நாட்டில் பயமின்றி சுதந்திரமாக வாழவேண்டும் என்பதே தங்களின் விருப்பமாகும்.

எனவே நீண்டகாலமாக இலங்கையில் உள்ள பல சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள எம் மீது கருணைகாட்டி எம் வாழ்வுக்கு வழிகாட்டுவீர்கள் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கின்றோம்."

இவ்வாறு அந்த மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ளது. ___
»»  (மேலும்)

குழாய் மூலம் எரிவாயு விநியோகம் ஈரான் - பாகிஸ்தானிடையே ஒப்பந்தம்

ஈரானும், பாகிஸ்தானும் குழாய் மூலமான எரிவாயு விநியோகத்தில் சென்ற ஞாயிற்றுக்கிழமை கைச்சாத்திட்டன. ஈரான் தலைநகர் தெஹரானில் இந்த ஒப்பந்தம் கைச்சாத்தானது.
ஈரான் எண்ணெய் வள அமைச்சர், பாகிஸ்தான் எண்ணெய் வளத்துறை அமைச்சர்கள் இதில் பங்கேற்றனர். இது மிக சந்தோசமாக நாளென ஈரான் அமைச்சர் சொன்னார். நாளாந்தம் 742 மில்லியன் கியுபிக் எண்ணெய் பாகிஸ்தானுக்கு வழங்கப்படவுள்ள இத்திட்டம் 2014ம் ஆண்டு ஆரம்பமாகவுள்ளது.

ஈரான், பாகிஸ்தான் அமைச்சர்கள் குழாயூடான எரிவாயு விநியோக ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுகின்றனர்.
இதற்கென 700 கி. மீறறர் தூரம் வரை குழாய் பதிக்கப்படவுள்ளது. மூன்று வருடங்களின் பின்னர் இந்த குழாய் பதிக்கும் வேலைகள் பூர்த்தியானதும் எரிவாயு விநியோகம் ஆரம்பமாகும். ஈரானின் தென்கிழக்கு எல்லையிலுள்ள பாகிஸ்தானின் எல்லைகளூடாக இந்த எரி வாயு விநியோகம் இடம்பெறவுள்ளது. இதற்கான பேச்சுவார்த்தைகள் பத்து வருடங்களாக நடந்தன.
ஈரானிலிருந்து பாகிஸ்தான், பாகிஸ்தானிலிருந்து இந்தியாவுக்கு குழாயுடாக எரிவாயு விநியோகம் செய்யும் நோக்குடனே இத்திட்டமும் பேச்சுவார்த்தைகளும் ஆரம்பமாகின. பின்னர் சென்ற ஆண்டு இந்தியா இதிலிருந்து விலகிக் கொண்டது. பாகிஸ்தானுக்குச் செல்லும் குழாய்க்கு அதிக வாடகை கேட்டதால் இந்தியா இதிலிருந்து விலகியது.
பாகிஸ்தான், இந்தியாவிடையேயுள்ள தீர்க்கப்படாத நீண்டகால முரண்பாடுகள் எல்லைதாண்டிய பயங்கரவாதம் வர்த்தகக் கொடுக்கல்வாங்கல்களிலுள்ள சிக்கல்களும் இந்தியாவை இத்திட்டத்திலிருந்து விலக வைத்தது.
ஈரானிலிருந்து இந்தியாவுக்கு 7500 கி.மீற்றர் தூரம் வரை குழாய்களைப் பதிக்க வேண்டும்.
இவ்வேலைகளைச் செய்து முடிக்க மிகவும் பிரயத்தனங்கள் செய்யவேண்டியுள்ளதுடன் பாதுகாப்பு பிரச்சினைகளும் பிரதான காரணமாகவுள்ளன. பாகிஸ்தானை விடுத்து வேறுவழியாக இந்தியாவுக்கு எரிவாயுவைக் கொண்டுவர ஈரான் அதிகாரிகளிடம் இந்திய அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும்.
 
»»  (மேலும்)

அவுஸ்திரேலியாவுக்கு படகில் சென்ற 12 அகதிகள் பலி


இந்தோனேசியாவில் இருந்து அவுஸ்திரேலியாவுக்கு செல்ல முற்பட்ட 12 அகதிகள் பாதகமான காலநிலை காரணமாக கடலில் மூழ்கி காணாமல் போய் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட் டுள்ளது.
அவர்களில் இருவர் இலங்கையை சேர்ந்தவர்கள் எனவும் ஏனையோர் ஆப்கானிஸ்தானை சேர்ந்தவர்களெனவும், அவுஸ்திரேலியாவுக்குள் நுழைய முற்படும் நோக்கில் பெரிய கப்பலில் இருந்து மீன்பிடி படகுக்கு மாற்றும் போது ஏற்பட்ட பாதகமான காலநிலை காரணமாக அவர்கள் கடலில் மூழ்கி இறந்திருக்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
 
»»  (மேலும்)

வடக்கு மக்களுக்கு ஒரு வரப்பிரசாதம்

பூநகரிக்கும் யாழ். குருநகருக்கும் இடையிலான படகுச்சேவை நேற்று முன்தினம் (13) பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. தரை வழியே 2 1/2 மணி நேரம் மேற்கொள்ளும் பயணத்தை இந்தப் படகு சேவையின் மூலம் சுமார் 45 நிமிடங்களுக்குள் மேற்கொள்ள முடியும்.
பூநகரியிலிருந்து குருநகருக்கு தற்போது அறவிடப்படும் பஸ் கட்டண த்தை விடக் குறைந்ததாக படகின் மூலம் செல்லும் பயண மொன்றுக்கு 40 ரூபா மாத்திரமே அறவிடப்படுகிறது.
இரண்டு மாதங்களுக்கு முன்னர் பாரா ளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இப் பிரதேசத்துக்கு விஜயம் செய்தபோது பிரதேச மக்களால் விடுக்கப்பட்ட வேண்டுகோளையடுத்து 40 இலட்ச ரூபா செலவில் இந்தப் படகுச் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் கலந்துகொண்ட பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வட மாகாண ஆளுநர் ஜி. ஏ. சந்திரசிறி ஆகியோரையும், படகு சேவையில் ஈடுபடுத்தப்பட்டிருப்பதையும் படங்களில் காண்க.
»»  (மேலும்)

பாலியல் குற்றம்: சந்தேக நபர்கள் அடையாளம்

இலங்கையின் வடக்கே பெண்கள் இருவர் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் குற்றச் சந்தேக நபர்கள் நான்கு பேர் அடையாளம் காணபபட்டுள்ளனர்.
கிளிநொச்சி விசுவமடு பகுதியில் கடந்த 6 ஆம் திகதி இந்த பாலியல் குற்றச் சம்பவம் நடந்திருந்தது.
இந்த வழக்கில் சந்தேகத்தின் பேரில் 6 இராணுவத்தினர் கைது செய்யப்பட்டிருந்தார்கள்.
குற்றத்தில் சம்பந்தப்பட்டவர்களை அடையாளம் காண்பதற்காக இவர்கள் கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றத்தில் சாட்சிகளின் முன்னால் நிறுத்தப்பட்டனர்.
அவர்களில் அடையாளம் காணப்பட்டவர்கள் தவிர ஏனைய இருவரையும் கிளிநொச்சி நீதவான் பெ.சிவகுமார் விடுதலை செய்துள்ளார்.
இந்த அடையாள அணிவகுப்பின்போது பாதிக்கப்பட்ட பெண்கள் சார்பில் கொழும்பில் இருந்து சென்றிருந்த முக்கிய சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தார்கள்.
கொழும்பு, மன்னார், வவுனியா ஆகிய பகுதிகளில் உள்ள பெண்கள் அமைப்பின் முக்கியஸ்தர்களும் இந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்களுக்குத் தமது ஆதரவைத் தெரிவிக்கும் வகையில் கிளிநொச்சி நீதிமன்றத்திற்குச் சென்றிருந்தனர்.
கிளிநொச்சி நீதிமன்றத்திற்குச் சென்ற சட்டத்தரணிகள் குழுவில் இடம்பெற்றிருந்த மனித உரிமைகள் சட்டத்தரணி கே.எஸ்.ரட்னவேல் கருத்து தெரிவிக்கையில், "இந்த வழக்கில் பொலிசார் உடனடியாகச் செயற்பட்டு விசாரணைகளைத் தொடர்ந்து நடத்தி குற்றச் செயலில் சம்பந்தப்பட்டவர்களை அடையாளம் காண உதவியிருக்கின்றார்கள். எனினும் கடந்த காலங்களில் பெண்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள், வன்முறைகள், பாலியல் குற்றங்கள் தொடர்பில் பொலிசார் இவ்வாறு நடந்து கொள்ளவில்லை" என சுட்டிக்காட்டினார்.
"சந்தேக நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள போதிலும், எதிர்காலத்தில் இவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை வைத்து வழக்தைத் தொடர்ந்து நடத்துவதில் சட்டமா அதிபர் காட்டும் மும்முரத்தை பொறுத்தே இந்த வழக்கில் நியாயம் கிடைக்குமா அல்லது கடந்த காலங்களைப்போல வழக்கு கிடப்பில் போடப்படுமா என்பது தெரியவரும்." என சட்டத்தரணி ரட்னவேல் தெரிவித்துள்ளார்.
»»  (மேலும்)