அநாமதேய குறுந்தகவல்கள் மூலம் பொதுமக்களை வீண் பீதிக்கு உட்படுத்தியவர்களைக் கண்டுபிடித்துத் தருமாறு தொலைத் தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு தொலைத் தொடர்பு நிறுவனங்களைக் கோரியுள்ளது.
இது தொடர்பில் நேற்றுத் தகவல் தெரிவித்த ஆணைக்குழுவின் தலைவர் அனுஷ்பெல்பிட்ட குறுந்தகவல்கள் மூலம் புரளியைக் கிளப்பியவர்களைக் கண்டுபிடிப்பதில் தீவிர கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
இது தொடர்பில் தொலைத் தொடர்பு நிறுவனச் செயற்பாட்டாளர்களுக்கு விசேட பணிப்புரைகளை வழங்கியுள்ளதாகத் தெரிவித்த அவர், சம்பந்தப்பட்டவர்களைக் கண்டுபிடிக்க உதவுமாறு அவர்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார். இவ்வாறு உறுதிப்படுத்தப்படுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் குறிப்பிட்டார். இதேவேளை மேற்படி புரளிகளைக் கிளப்பியவர்கள் சம்பந்தமாகத் தகவல்களைத் தெரிவிக்க முன்வருவோர் பொலிஸ் நிலையங்களில் தமது தகவல்களைத் தெரிவிக்க முடியுமெனவும் தெரிவித்தார்.
0 commentaires :
Post a Comment