5/08/2010

இந்து இளைஞர் மன்ற கட்டடத்தினை புணரமைப்பதற்காக நிதி ஒதுக்கீடு

dsc00207மட்டக்களப்பில் அமைந்துள்ள பழமை வாய்ந்த இந்து இளைஞர் மன்ற கட்டிடடம் மற்றும் இந்து இளைஞர் மன்ற கலாசார மண்டபம் என்பன கடந்த காலங்களில் பாதுகாப்புப் படையினர்களின்  பாதுகாப்பரணாக இருந்தது. தற்போது கிழக்கு மாகாணம் விடுவிக்கப்பட்டு கிழக்கு மாகாண சபையின் தோற்றத்திற்குப் பின்னர்  கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் இந்து கலாச்சார விழுமியங்களைப் பேணிப் பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கின அடிப்படையில் தனது பிரத்தியேக நிதியிலிருந்து நாற்பது இலட்சம் ருபாய் நிதியினை முதற்கட்டமாக ஒதுக்கீடு செய்துள்ளார்.
கடந்த காலங்களில் இந்துக்களின் திருமணச் சடங்குகள், சைவ சமய விழாக்கள், ,இந்து மதம் சார்நத விசேட நிகழை;வுகள் என்பன மேற்படி பழுதடைந்த நிலையிலுள்ள இந்து இளைஞர் மன்ற கலாசார மண்டபத்திலே இடம் பெற்றது. அத்தோடு அங்குள்ள விடுதிகளில் இந்துக் குருமார்கள் தங்கி இருப்பதற்கேற்ப வசதிகளும் ஏற்படுத்தப்படட்டிருந்தது. ஆனால் தற்போது அக்கட்டிடம் முழுமையாக சேதமடைந்துள்ளது. இக் கட்டிடடத்தினை நேரில் சென்று பார்வையிட்ட கிழக்கு மாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் முதற்கட்டமாக நான்கு மில்லியன் ருபாய் நிதியினை ஒதுக்கிடு செய்து உடனடியாக வேலைகளை ஆரம்பிக்கும்படி உரிய அதிகாரிகளைப் பணித்துள்ளார்.

0 commentaires :

Post a Comment