5/10/2010

பேச்சுவார்த்தைக்கு வருமாறு மாவோயிஸ்டுகளுக்கு அரசு அழைப்பு

நேபாளத்தில் கடந்த சில வாரங்களாக ஆர்ப்பாட்டத்திலீடுபட்டுள்ள மாவோயிஸ்டுகளுடன் பேச்சுவார்த்தை நடந்த பிரதமர் மாதவ்குமார் தலைமையிலான அரசாங்கம் முன்வந்துள்ளது.
இதற்கான உத்தியோகபூர்வ அழைப்பை அரசாங்கம் நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுத்தது.
ஆர்ப்பாட்டத்தைக் கைவிட்டு சமாதான சூழலைத் தோற்றுவிக்குமாறு நேபாய அரசாங்கம் மாவோயிஸ்டுகளிடம் வேண்டுகோள் விடுத்தது.
மாவோயிஸ்டுகள் மே 02 ம் திகதி தொடக்கம் நேபாள அரசுக் கெதிராகப் பாரிய ஆர்ப்பாட்டத்திலீடுபட்டு வருகின்றனர். அரசைப் பதவி விலகுமாறும் முன்னாள் பிரதமர் தக்ஷின் சொத்துக்களை மீள ஒப்படைக்குமாறும் மாவோயிஸ்டுகள் நிபந்தனை விதித்துள்ளனர்.
தொடர்ச்சியாக இடம் பெறும் இந்த ஆர்ப்பாட்டங்களால் தலைநகர்  செயலிழந்துள்ளது. இதனால் பொது மக்கள் தங்களின் அன்றாட தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியாதுள்ளனர்.
பொது மக்களின் நன்மை கருதியே ஆர்ப்பாட்டத்தை கைவிடுகின்றோம்.இதில் எவ்வித அழுத்தங்களும் எங்களுக்கு விடுக்கப்படவில்லையென மாவோயிஸ்டுகள் தெரிவித்தனர்.
 

0 commentaires :

Post a Comment