5/12/2010

காணி எல்லை வரையறுப்பதற்கான கால எல்லை நீடிக்கக் கோரியதுடன், கிழக்கு மாகாணத்தில் எல்லைகளை ஆராய தனியான குழு


இலங்கை பூராகவும் உள்ள கிராம சேவையாளர் பிரிவுகளின் நிருவாக எல்லைகள் தொடர்பான மக்களின் ஆலோசனைகளைக் கோரும் திகதி 31.04.2010 வலை விதிக்கப்பட்டது தொடர்பில் கால எல்லையினை நீடிப்பதற்கும், உரிய அறிக்கைகளை மக்களுடனும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளடனம் கலந்துரையாடி அறிக்கை சமர்ப்பிப்பதற்கும் கிழக்கு மாகாண முதலமைச்சர் சி. சந்திரகாந்தன் தலைமையில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைய கிழக்கு மாகாணசபை தவிசாளர் யுயுஆ. பாயிஸ் மூலம்      கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய நிர்வாக மாவட்டங்களுக்கென மாகாணசபை உறுப்பினர்கள் அடங்கிய தனித் தனி குழு அமைக்கப்பட்டுள்ளதுடன், இக் குழுக்கள் எதிர்வரும் 11.05.2010 ஆம் திகதிக்கு முன்னர் தமது அறிக்கைகளை மாகாணசபைக்கு சமர்ப்பித்து பின்பு அவை மத்திய அரசிற்கு சமர்ப்பிப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்திற்காக நியமிக்கப்பட்ட மாகாணசை உறுப்பினர்கள் ஆர். துரைரெட்ணம், வு.யு. மாசிலாமணி, பூ. பிரசாந்தன் , யு.ளு. ஜவாகிர்சாலி ஆகியோர் மட்டக்களப்பில் பல இடங்களில் மக்களின் கருத்துக்களைக் கேட்டடறிந்துவருவதாகத் தெரியவருகின்றது.
இதில் செங்கலடி , வெல்லாவெளி , களுவாஞ்சிக்குடி , மண்முனை வடக்கு ஆகிய பிரதேச எல்லைகள் பிரிக்கப்பட வேண்டும் என மக்கள் கோரிக்கைகள் அதிகமாகக் கிடைத்துள்ளதாகவும் , கிராம சேவையாளர் பிரிவுகள் பிரிக்கப்படுவதுடன் , பலர் பிரதேச நிருவாக எல்லைகளின் ஆளுகை தொடர்பாகவுமே கோரிக்கைகளை           . வாகரை முதற்கொண்டு வெல்லாவெளி  படுவான்கரை மக்கள் கருத்துக்களை ஆவணமாக்கி விரைவில் சமர்ப்பிக்கப் போவதாகவும் எந்தவிதமான இன, மத, மொழி பேதங்களையும் கடந்து கிராமப்புற மக்களின் நிருவாகப் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு ஏதுவானதாக இச் சந்தர்ப்பத்தினை பயன்படுத்த அனைத்து அரசியல் தலமைகளும் கட்சி பேதங்களை மறந்து இதயசுத்தியுடன் ஒன்றிணையை வேண்டும் எனவும் இக் குழுவினைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பூ. பிரசாந்தன் குறிப்பிட்டார்

0 commentaires :

Post a Comment