இன்று 19.05.2010அம்பாறை மாவட்ட உள்ளுராட்சி உதவி ஆணையாளர் AJM இர்சாத் தலைமையில் அம்பாறை மாவட்ட உள்ளுராட்சி மன்ற அலுவலகத்தில் மேற்படி அபிவிருத்தி ஆய்வுக் குழுக்கூட்டம் இடம்பெற்றது. இக்கூட்டத்திற்கு கிழக்கு மாகாண முதலமைச்சரும் கிழக்கு மாகாண உள்ளுராட்சி அமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்;தன் உள்ளுராட்சி ஆணையாளர் உதயகுமார் அம்பாறை மாவட்ட பிரதேச சபை தவிசாளர்கள் மற்றும் பிரதேச சபை செயலாளர்கள் தொழிநுட்ப உத்தியோகத்தர்கள் மற்றும் பல அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
மேற்படி கூட்டத்தில் விசேடமாக உள்ளுராட்சி மன்றங்களின் நிலவுகின்ற ஆளனி வெற்றிடங்களை நிரப்புவது தொடர்பாக ஆராயப்பட்டது மற்றும் தற்பொழுது உள்ளுராட்சி மன்றங்களில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற கிராம மட்டங்களினாலான அபிவிருத்தி திட்டங்கள் குறித்தும் பேசப்பட்டது.
ஆளனி வெற்றிடங்கள் மீள் நிரப்புவது தொடர்பாக முதலமைச்சர் கருத்து தெரிவிக்கையில் தற்பொழுது கிழக்கு மாகாணத்திற்குட்பட்ட அனைத்து உள்ளுராட்சி மன்றங்களிலும் நிலவுகின்ற ஆளனி வெற்றிடங்கள் கணக்கெடுப்பு செய்யப்படுகின்றது இக் கணக்கெடுப்பு முடிந்தவுடன் உடனடியாக இது தொடர்பாக நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் எனவும் குறிப்பிட்டார். அத்தோடு உள்ளுராட்சி மன்றங்கள் அமைச்சர் என்கின்ற அடிப்படையிலும் கிழக்கு மாகாணத்தின் முதலமைச்சர் என்கின்ற அடிப்படையிலும் வருகின்ற முதலமைச்சர் மாநாட்டில் இது தொடர்பான ஓர் விசேட பிரேரணை ஒன்றை தான் சமர்ப்பிக்க உள்ளதாக தெரிவித்தார்.
0 commentaires :
Post a Comment