சம்பவ இடங்களைக் காட்டும் வரைபடங்கள் |
பாகிஸ்தானின் லாகூர் நகரில் சிறுபான்மை மதப்பிரிவு ஒன்றின் இரு மசூதிகளை ஆயுதபாணிகள் ஏக காலத்தில் தாக்கியுள்ளனர். இதில் எழுபதுக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டதுடன், எண்பதுக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.
தொழுகையில் கலந்துகொண்ட சிலர் பணயமாக பிடித்து வைக்கப்பட்டிருந்தனர், ஆனால், தாம் அந்த இடங்களை தமது கட்டுப்பாட்டில் மீண்டும் கொண்டுவந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
லாகூர் நகரில் சிறுபான்மையின முஸ்லிம் மதப் பிரிவான அஹமதி இஸ்லாமியர்களின் பள்ளிவாசல்களில் தாக்குதல்கள் நடந்துள்ளன.
மொடல் டவுண் என்னும் இடத்தில் உள்ள பள்ளிவாசலிலும், கர்ஹி சாகூ என்னும் இடத்தில் உள்ள பள்ளிவாசலிலுமே இந்த தாக்குதல்கள் வெள்ளிக்கிழமை தொழுகை வேளையில் நடந்துள்ளன.
தாக்குதல்காரர்கள் சுமார் 40 பேரை பணயமாக பிடித்து வைத்திருப்பதாகவும், தாக்குதலாளிகளில் சிலரும் காயமடைந்துள்ளதாகவும் செய்திகள் கூறுகின்றன.
இரண்டு மணிநேரம் நடந்த மோதல்களை அடுத்து மொடல் டவுண் பகுதியில் உள்ள மசூதியை தாம் தமது கட்டுப்பாட்டில் கொண்டுவந்துவிட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக தமது நடவடிக்கைகள் குறித்து பேசிய பொலிஸ் அதிகாரி ஒருவர் தீவிரவாதிகளால் தாக்கப்பட்ட பள்ளிவாசலில் இருந்து ஆட்களை மீட்கும் பணியில் கமாண்டோ படையினர் ஈடுபடுத்தப்பட்டதாக கூறினார்.
அஹமதி பிரிவு இஸ்லாமியர்கள் லாகூரில் பல தடவைகள் சுனி இன குழுக்களால் பல தடவைகள் இலக்கு வைக்கப்பட்டுள்ளர்கள்.
அஹமதி மதப்பிரிவினர் தாம் இஸ்லாமியர்கள் என்று உரிமை கோருகின்ற போதிலும், அவர்களை முஸ்லிம் அல்லாதவர்கள் என்று பாகிஸ்தான் 1973ல் அறிவித்துள்ளதுடன், 1984ல் அவர்கள் தம்மை முஸ்லிமாக பிரகடனப்படுத்தவோ அல்லது அடையாளப்படுத்தவோ முடியாது என்றும் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளனர்.
தாக்குதலின் தீவிரம் காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்றும் அஞ்சப்படுகின்றது.
0 commentaires :
Post a Comment