5/08/2010

சட்டரீதியாக செய்வேண்டிய செலவுகட்கே கவர்ணருடன் மாராடிக்க வேண்டிய நிலையில் ஊழலாவது, மோசடியாவது

  இலங்கையில்  உள்ள    எல்லா மாகாண சபையும் வருடாவருடம் ஆண்டு கணக்கு ஆய்விற்கு  உட்படுத்தப்படுவது வழமையாகும் அதன் அடிப்படையில் கிழக்குமாகாண சபையின் கடந்த ஆண்டுகளுக்கான கணக்காய்வு இவ்வாண்டு முற்பகுதியில் நடத்தப்படவில்லை. ஒன்றின் பின் ஒன்றாக தேர்தல்கள் அறிவிக்கப்பட்டிருந்தமையால் இவ்வாண்டின் முதற்காலாண்டுப்பகுியில் நடத்தப்படவிருந்த கணக்காய்வு தற்போது நடத்தப்படுகின்றது. இச்செய்தியினை திரிபுபடுத்தி  கிழக்கு மாகாண சபையின் இருப்பினை விரும்பாத சில தீய சக்திகள் கிழக்கு மாகாண சபையில் நிதி   மோசடி என்று செய்திகளை வெளியிட்டு வருகின்றன. இது சம்பந்தமாக முதலமைச்சர் வட்டாரங்களை தொடர்பு கொண்டு கேட்டபோது சட்டரீதியாக செய்வேண்டிய செலவுகட்கே கவர்ணருடன் மாராடிக்க வேண்டிய நிலையில் ஊழலாவது, மோசடியாவது  நடக்கக்கூடிய காரியமா? என தெரிவித்தனர்.

0 commentaires :

Post a Comment