சூடான் ஜனாதிபதித் தேர்தலில் ஒமர் ஹஸன் அஹமத் அல் பiர் அளிக்கப்பட்ட வாக்குகளில் 68 வீதம் பெற்று தெரிவு செய்யப்பட்டுள்ளார். இருபது வருடங்களுக்கு மேலாக எவ்விதத் தேர்தலும் இல்லாமல் ஜனாதிபதியாகப் பதவி வகித்த அல்பiர் இப்போது தான் மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி என்ற அந்தஸ்தைப் பெறுகின்றார்.
பிரித்தானியாவிடமிருந்து சூடான் 1956ம் ஆண்டு சுதந்திரம் பெற்றது. பiர் 1989ம் ஆண்டு சதிப்புரட்சி மூலம் ஆட்சியைக் கைப்பற்றினார். அதற்குப் பின் இப்போது தான் தேர்தல் நடைபெற்றிருக்கின்றது. தேர்தலில் முறைகேடுகள் இடம்பெற்றதாக எதிரணியினர் குற்றஞ்சாட்டுகின்றனர்.
இருபது வருட காலம் சர்வாதிகார ஆட்சி நடைபெற்ற நாட்டில் தேர்தல் முறைகேடுகள் இடம்பெறுவதொன்றும் புதுமையானதல்ல. எவ்வாறாயினும் நாட்டின் தலைவரைத் தெரிவு செய்வதற்கான உரிமை இருபது வருடங்களுக்குப் பின் மக்களுக்குக் கிடைத்திருப்பதையிட்டுத் திருப்தி அடைந்தாக வேண்டும்.
தர்பூர் ளிarஜீur பிரச்சினை கடந்த எட்டு வருட காலத்தில் சூடானின் கொதிநிலைப் பிரச்சினையாக மாறியது. தர்பூர் சூடானின் தென் பகுதியிலுள்ள பிரதேசம். பிரான்சின் பரப்பளவுக்குச் சமனானது. சூடானின் வடபகுதியில் வாழ்பவர்கள் இஸ்லாமியர்கள். பெரும்பாலானோர் அராபியர்கள். ஆட்சியாளர்களும் அவர்களே.
தர்பூர் பிரதேசத்தில் வாழ்பவர்களில் பெரும்பாலானோர் கிறிஸ்தவ ஆபிரிக்கர்கள். சூடானின் இஸ்லாமிய ஆட்சியாளர்கள் மாற்று மதத்தவர்களான தங்களை ஓரங்கட்டுகின்றார்கள் என்ற குற்றச்சாட்டை முன்வைத்துத் தர்பூர் மக்கள் ஆரம்பித்த எதிர்ப்பு இயக்கம் 2003 பெப்ரவரி மாதத்தில் ஆயுதப் போராட்டமாக மாறியது. கடந்த ஏழு வருட காலத்தில் இந்த ஆயுதப் போராட்டத்தின் விளைவாக எழுபதாயிரத்துக்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
சூடான் ‘அரேபியாவின் பாதம்’ என்கின்றனர் ஆட்சியாளர்கள். அது ‘ஆபிரிக்காவின் தலை’ என்கின்றனர் ஆபிரிக்கர்களான தர்பூர் மக்கள். சூடான் எகிப்தின் தெற்கு எல்லையில் அமைந்திருக்கின்றது. சூடானின் மற்றைய மூன்று எல்லைகளில் ஆபிரிக்க நாடுகள் உள்ளன. சூடான் ஆபிரிக்க நாடா அல்லது அரேபியா நாடா என்பதில் இரு தரப்பினரும் மாறுபட்ட கருத்துகளை வெளியிடு வதிலிருந்து தர்பூர் பிரச்சினையின் அடிப்படையைப் புரிந்துகொள்ள முடியும்.
தர்பூர் பிரச்சினையை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான ஒப்பந்த மொன்று அமெரிக்காவின் மத்தி யஸ்தத்துடன் 2006 மே மாதம் 5ந் திகதி கைச்சாத்திடப்பட்டது. சூடான் அரசாங்கத்தினதும் சூடான் மக்கள் விடுதலை இயக்கத்தினதும் பிரதிநிதிகள் இவ்வொப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர். இந்த ஒப்பந்தத்தின்படி, தர்பூர் பிரதேசம் சூடானிலிருந்து பிரிந்து செல்வதா அல்லது சூடானின் ஒரு பகுதியாகத் தொடர்ந்து இருப்பதா என்பதைத் தீர்மானிப்பதற்கான சர்வசன வாக்கெடுப்பு 2011ம் ஆண்டுக்கு முன் நடைபெற வேண்டும்.
இந்தப் பின்னணியிலேயே சூடான் ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்றது. தேர்தலை அமைதியாக நடத்துவதற்கு ஏதுவாக அரசாங்கமும் சூடான் மக்கள் விடுதலை இயக்கமும் 2010 பெப்ரவரி மாதத்திலிந்து யுத்தநிறுத்தத்தைக் கடைப்பிடித்து வருகின்றன. ஒப்பந்தத்தின் படி தர்பூர் பிரதேசத்தில் சர்வசன வாக்கெடுப்பு நடத்தப்படும் என்று ஜனாதிபதி பiர் கூறுகின்றார்.
இதே நேரம், சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் ஜனாதிபதி அல் பiரைக் கைது செய்வதற்காக 2009 மார்ச் மாதம் பிடியாணை பிறப்பித்திருக்கின் றது. தர்பூரில் இடம்பெற்ற யுத்தக் குற்றச் செயல்களுக்கு அவரைப் பொறுப்பாளி ஆக்கியே இப் பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.
சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் ரோமாபுரியில் நிறைவேற்றப்பட்ட ஒரு தீர்மானத்தின் அடிப்படையில் 2002 ஜுலை 1ந் திகதி நடைமுறைக்கு வந்தது. மார்ச் 2010 வரை 111 நாடுகள் இதில் அங்கத்துவம் பெற்றிருக்கின்றன. சீனா, இந்தியா, ரஷ்யா, அமெரிக்கா உட்படப் பல நாடுகள் இந்த நீதிமன்றத்தின் அமைப்பையும் அதன் அதிகாரத்தையும் கண்டனத்துக்கு உள்ளாக்கியிருக்கின்றன.
சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் அங்கத்துவம் பெற்றிருக்கும் நாடொ ன்றின் பிரசை புரிந்த குற்றச்செயல் தொடர்பாகவும் அங்கத்துவ நாடொன்றில் இடம்பெற்ற குற்றச் செயல் தொடர்பாகவுமே இதன் நீதியாதிக்கம் செல்லுபடியாகும். சூடான் இந்த நீதிமன்றத்தின் அங்கத்துவ நாடல்ல.
எனினும் சர்வதேச நீதிமன்றத்தின் பிரதான வழக்குத் தொடுநர் ஜனாதிபதி அல் பiரைக் கைது செய்து விசாரிக்க வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருக்கின்றார். இதுவரை இந்த நீதிமன்றம் ஆபிரிக்க நாடுகள் தொடர்பாக மாத்திரம் நடவடிக்கை எடுத்திருக்கின்றதென்பது குறிப்பிடத்தக்கது.
தர்பூர் பிரச்சினைக்கு இறுதியான முடிவைக் காண்பதற்காக சர்வசன வாக்கெடுப்பை நடத்துவதற்கு ஜனாதிபதி அல் பiர் சம்மதம் தெரிவித்திருக்கின்ற நேரத்தில், தர்பூர் குற்றச் செயல்களுக்காக அவரை விசாரிப்பதில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் தீவிரம் காட்டுவது தர்பூர் பிரச்சினையின் தீர்வுக்குக் குந்தகமான சூழ்நிலையைத் தோற்றுவிப்பதாக அமையலாம்.
தர்பூரில் இடம்பெற்ற உயிரிழப்புகளுக்காக நீதி செலுத்த மேற்கொள்ளப்படும் முயற்சி அங்கு உயிருடன் இருப்பவர்களின் வாழ்வில் அமைதி திரும்புவதற்குத் தடையாக அமைவதை எவ்விதத்திலும் நியாயப் படுத்த முடியாது.
சூடான் ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்ட அதே தினம் (26.04.2010), லக்ஸம்பேர்க்கில் கூடிய ஐரோப்பிய யூனியன் நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் பிடியா ணைக்குத் தங்கள் ஆதரவை உறு திப்படுத்தி அறிக்கை வெளியிட்டார்கள்.
ஐரோப்பிய யூனியன் தலைவர்க ளுக்கும் சர்வதேச குற்றவியல் நீதி மன்றத்துக்கும் தர்பூர் உயிரிழப்புகள் முக்கியமாகத் தெரிகின்ற அளவுக்கு அந்த உயிரிழப்புகளின் அடிப்படைக் காரணமான பிரச்சினையின் தீர்வு முக்கியமாகத் தெரியவில்லை.
சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தி லென்றாலென்ன வேறு யுத்தக் குற்ற விசாரணை மன்றங்களிலென்றாலென்ன இதுவரை விசாரணைக்கு வந்த வழக்குகள் எல்லாம் தோற்றவர்களை வெற்றியாளர்கள் விசாரணைக்கு உட்படுத்தும் வழக்குகளாகவே உள்ளன. அல் பiருக்கு எதிரான வழக்கு வித்தியாசமானது. அவர் ஜனாதிபதியாகப் பதவி வகிக்கின்ற போதே அவருக்கு எதிரான பிடியாணை பிறப்பிக்கப்பட்டது. அதே பதவிக்கு மக்களால் தெரிவு செய்யப்பட்ட பின்னரும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் விசாரணையில் பிடிவாதமாக இருக்கின்றது.
0 commentaires :
Post a Comment