ஜார்கண்ட் மாநிலம் சிங்தேகா மாவட் டத்தில் காங்கிரஸ் தலைவர்களும், தொண்டர்களும் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலக வேண்டும் என்று மாவோயிட்டு தீவிரவாதிகள் எச்சரிக்கை விடுத்து இருந்தனர்.
என்றாலும் இதை காங்கிரஸ் தலைவர்கள் யாரும் ஏற்கவில்லை.
இந்த நிலையில் லும்பாடோலி கிராமத்தைச் சேர்ந்த காங்கிரஸ் தலைவர் ஹேமந்த்பாகே, தனது மைத்துனரான கலெக்டர் எஸ். புதியனைப் பார்க்க நேற்று முன்தினம் காலை காரில் சென்று கொண்டு இருந்தார். அப்போது மாவோயிஸ்டு தீவிரவாதிகள் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர்.
குண்டு பாய்ந்த ஹேமந்த் பாகே காரிலேயே இறந்துவிட்டார். பின்னர் தீவிரவாதிகள், காருக்கும் தீ வைத்துவிட்டார். இதில் கார் எரிந்தது. எனவே காருக்குள் இருந்த ஹேமாந்த் பாகேயின் உடல் கருகிறது. இந்த வன்முறையில் ஈடுபட்ட தீவிரவாதிகளை பொலிஸார் தேடி வருகிறார்கள்.
0 commentaires :
Post a Comment