5/31/2010
| 0 commentaires |
யுத்தக்குற்றங்களின் பெயரில் எரிக்சோல்கைம்மும் விசாரிக்கப்பட வேண்டும்.******கு.சாமித்தம்பி.
யுத்த தர்மம் பற்றியும் யுத்தகாலத்திலும் மனிதஉரிமைகள் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியதன் அவசியம் பற்றியும் இலங்கை நோக்கிய உரையாடலில் சர்வதேசம் ஈடுபட்டிருக்கின்றது. இது தமிழ் சமூகத்தின் மத்தியிலும், மனித உரிமைகள் பற்றிய கவனத்தை அதிகரித்துள்ளது. புலிகள் செய்துவந்த ஒவ்வொரு கொலைகளுக்கும் மட்டும் அல்ல அடுத்தடுத்து செய்விருந்த எதிர்காலக் கொலைகளுக்கம்கூட காரணங்களை கையில் வைத்துக்கொண்டிருந்த சமூகம் இப்போதாவது யுத்ததர்மம் பற்றியும், மனித உரிமைகள் பற்றியும் கவனம் கொள்ளத்தொடங்கியிருப்பது ஒரு நல்ல சகுனமே. இறுதி யுத்தத்தின் போது அப்பாவி மக்கள் குண்டுவீச்சுக்களில் கொல்லப்பட்ட கொடுமைகளுக்கு அரசாங்கம்
பொறுப்புச் சொல்லியே ஆகவேண்டும். ஆனால் இந்த குற்றச்சாட்டுக்களை எழுப்புபவர்கள் யார்? எதற்காக? எப்போது? இந்த குற்றச்சாட்டுக்கள் எழுப்பப்படுகின்றன என்பது பற்றியும் நாம் கேள்வியெழுப்ப வேண்டியுள்ளது. பாசிசப் புலிகளின் தலைமைப்பீடம் அழிக்கப்பட்ட மே மாதம் 18 ம் திகதியுடன் முடிவடைந்த ஓராண்டு நினைவையொட்டி இலங்கை அரசுக்கெதிரான யுத்த குற்றச்சாட்டுக்கள் சர்வதேசம் எங்கும் வி~;வரூபம் எடுத்துவருகின்றன. இதில் சர்வதேச மனித உரிமைகள் அமைப்புக்கள், ஜக்கிய நாடுகள்சபை, அமெரிக்க, ஐரோப்பிய உலக வல்லரசு நாடுகள், மற்றும் புகலிடத்து புலிப்பினாமிகள் என்போர் முன்னிலையில் நிற்கின்றனர்.
இவையனைத்துக்கும் மத்தியில்தான் ஐனாதிபதி ஒரு விசாரணைக் குழுவை நியமித்துள்ளார். இராணுவத்தினர் மீதான குற்றச்சாட்டுக்களை முழுமையாக மறுக்கமுடியாத நிலையும், சர்வதேச ராஜதந்திர நெருக்கடிகளுக்கு பதிலிறுக்கும் அவசியமும் இதில் கலந்திருந்தாலும் முன்கூட்டியே நம்பிக்கையீனமாக விசாரணைக்குழுவை யாரும் புறந்தள்ளிவிட முடியாது. சர்வதேச மனிவுரிமை அமைப்புக்களும், ஐ.நா.செயலர் பாஹிமூன்னும் கூறியது போலன்றி முழுக்க முழுக்க உள்நாட்டு பிரசைகளைக் கொண்ட ஒன்றாகவே இக்குழு அமைந்துள்ளது. மக்களால் தெரிவுசெய்யப்பட்ட ஒரு அரசுக்கு மனிதஉரிமை வேசத்தில் வரும் தனது இறைமைக்கு எதிரான சவால்களை எதிர்கொள்ள வேண்டியதன் அவசியம் உள்ளதென்பதை இந்த உள்நாட்டுக் குழு நியமனம் சொல்லிநிற்கின்றது.
அத்தோடு இக்குழுவானது யுத்தத்தில் ஈடுபட்ட புலிகள் இல்லாதொழிக்கப்பட்ட நிலையில் அரச இராணுவத்தினரை மட்டுமே விசாரிக்கப்போகின்றது அல்லது விசாரிக்க முடியும் என்று எண்ணிக்கொண்டிருப்பவர்களுக்கு இலங்கை அரசு சரியான ஒரு ஆப்பு வைத்துள்ளது. இறுதி யுத்தத்தின் போதான யுத்தக்குற்றங்கள் மட்டுமல்ல 2002 ஆண்டு உருவாக்கப்பட்ட யுத்தநிறுத்த ஒப்பந்தம் தொடங்கிய நாளில் இருந்து மே.18-2010 வரையான காலஎல்லையை இவ்விசாரணைக் குழுவின் வேலைத்திட்டம் கொண்டுள்ளது. இதில் முக்கியவிடயம் என்னவென்றால் யுத்தகாலத்தில் மீறப்பட்ட மனிதவுரிமைகளைக் போலவே யுத்த நிறுத்தகாலத்தில் இடம்பெற்ற மனிதவுரிமை மீறல்களும் விசாரிக்கப்படப் போகின்றன.
இறுதியுத்தத்தின் போது அப்பாவி மக்கள் அழிக்கப்பட்டது பற்றி குரல் எழுப்புவதன் ஊடாக புலிகளது தலைமைப்பீடங்கள் தகர்தெறியப்பட்ட விதம் பற்றி கேள்வியெழுப்ப முனையும் கூட்டத்தினருக்கு யுத்தநிறுத்த காலத்தில் இடம்பெற்ற மனிதவுரிமைகள் பற்றி கிஞ்சித்தேனும் கவலையில்லை. ஆனால் அந்த கடமையின் அவசியத்தை ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழு கொண்டுள்ளமை வரவேற்கத்தக்க விடயமாகும்.
2002 ஆண்டு பெப்ரவரி மாதம் 2 ஆம் திகதி ரணில் - பிரபா கைத்சாத்திட்டு செய்துகொள்ளப்பட்ட போலி சமாதான ஒப்பந்தத்தின் பெயரில் காட்டுக்குள் இருந்து நாட்டுக்குள் வந்த புலிகளது கைங்கரியத்தினால் இலங்கையில் இடம்பெற்ற மனிதவுரிமை மீறல்கள் எண்ணற்றவையாகும். யாழ்ப்பாணத்தில் ஈ.பி.ஆர்.எல்.எவ். இன் மூத்த தலைவர்களில் ஒருவரான சுபத்திரன், அதிபர் இராஜதுரை முதல் மட்டக்களப்பு இராஜன் சத்தியமூர்த்தி வரையிலான அனைத்துகொலைகளும் விசாரிக்கப்பட வேண்டும். மட்டக்களப்பு சிறைக்குள்ளும், அக்கரைப்பற்று நீதிமன்றம் மற்றும் பள்ளிவாசலுக்குள்ளும் புகுந்து கொலைகளை நடாத்திய புலிகளது அட்டூழியங்களுக்கு எந்த சர்வதேச சமூகமும் இதுவரை வாய்திறக்கவில்லை. கருணா குழு, பிள்ளையான் குழு என்ற குற்றச்சாட்டின் பெயரில் மட்டக்களிப்பின் ஒவ்வொரு குச்சொழுங்கைகளிலும் இளைஞர்களும், யுவதிகளும் புலிகளால் கொண்டு வீசப்பட்ட பொழுதுகளில் எல்லாம் சமாதான ஒப்பந்தமே அமூலில் இருந்தது. இவற்றுக்காகவெல்லாம் எந்த மனிதவுரிமைவாதிகள் இதுவரை குரல் கொடுத்தார்கள்? 2004 மார்ச் கிழக்குப் பிளவின் பின்னர் ஐனநாயக வழிக்குத் திரும்பிய போராளிகளை வெருகல் ஆற்றுப் படையெடுப்பில் நூற்றுக்கணக்கில் கொண்டு குவித்தவர்கள் புலிகள். அங்கு நிகழ்த்தப்பட்ட முன்னாள் பெண் போராளிகள் மீதான பாலியல் வன்கொடுமைகள் பற்றி பாஹிமூனுக்கு இதுவரை யாரும் எடுத்துச் சொல்லவிலை.
யுத்தநிறுத்தம் அமூலில் இருந்தபோதுதானே வன்னிப்புலிகளின் ஆயுதக் கும்பல் ஓமந்தை சாவடியை கடந்துவந்து வெருகல் படுகொலையை நிறைவேற்றியது. இதற்கு வசதியேற்படுத்திக் கொடுத்தவர்கள் யார்? இவற்றுக்கெல்லாம் பதிலிறுக்க இன்று புலிகள் இல்லாதிருக்கலாம். ஆனால் அன்றைய ஜனாதிபதி சந்திரிகா இதற்கு பொறுப்புச் சொல்லியே ஆகவேண்டும். வன்னிப்புலிகளின் ஓமந்தை தாண்டும் படலத்திற்கு சந்திரிகாவிடம் தூது சென்ற சம்பந்தனும் விசாரணைக் கூண்டில் ஏற்றப்பட வேண்டும். இவையனைத்துக்கும் மேலாக யுத்த நிறுத்த ஒப்பந்தத்தின் மூன்றாம் தரப்பு மத்தியத்துவர்களாக இருந்த நோர்வே அரசும், அதனது விசேட தூதுவர் எரிக்சோல்கைமும் தங்களது பொறுப்புச் சொல்லும் கடமையில் இருந்து தப்பிக்க முடியாது.
2004 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 8 ஆம் திகதி வன்னிப் புலிகளின் படையெடுப்பு மு~;தீபுகள் தீவிரமடைய கண்காணிப்புக் குழு கிழக்கு மாகாணத்தைவிட்டு தற்காலிகமாக வெளியேறியது. யுத்த நிறுத்தத்தை பேண வேண்டியவர்கள், கண்காணிப்பை மேற்கொள்ள வேண்டியவர்கள் வெருகல் படுகொலைக்கு வழிவிட்டு தமது கடமையில் இருந்து திட்டமிட்டே விலகி நின்றனர். கிழக்கு மாகாணத்தை விட்டு வெளியேறியதின் ஊடாக வெருகல் படுகொலைக்கு துணைபுரிந்த எரிக்சோல்கைம் ஜனாதிபதியின் நல்லிணக்க ஆணைக்குழுவால் விசாரிக்கப்பட வேண்டிய முக்கிய குற்றவாளி ஆவார்.
கு.சாமித்தம்பி.
0 commentaires :
Post a Comment