5/28/2010

பௌத்த மதத்தில் முக்கியத்துவம் பெறும் வெசாக்

பௌத்த மதத்தில் முக்கியத்துவம் பெறும் வெசாக்





வெசாக் பண்டிகையை இலங்கை உட்பட உலகின் பல்வேறு நாடுகளிலும் உள்ள மக்கள் கொண்டாடி மகிழ்கின்றனர். ஏனைய பெளர்ணமி தினங்களுடன் ஒப்பிடுகையில் வெசாக் பெளர்ணமி தினம் பல்வேறு வகைகளிலும் மிக முக்கியத்துவம் பெறுகிறது. புத்த பிரானின் பிறப்பு, பெளத்தத்துவம் பெறுதல், பரிநிர்வாணமடைந்தது, போன்ற முக்கிய நிகழ்வுகள் இது போன்ற ஒரு வெசாக் பெளர்ணமி தினத்திலே இடம்பெற்றன.
இது மட்டுமன்றி இளவரசன் விஜயன் தனது படைபட்டாளத்துடன் இலங்கை வந்ததினூடாக சிங்கள இனத்தின் ஆரம்பமும் இதே போன்ற தினத்திலே வரலாறுகளில் பதியப்பட்டுள்ளது.
பெளத்தர்களின் மிகவும் புனிதமான தினமாக வெசாக் பெளர்ணமி தினம் கருதப்படுகிறது. புத்தபிரான் பரிநிர்வாணமடைந்து 2550 வருடங்கள் கடந்துள்ள நிலையில் இலங்கை மட்டுமன்றி கம்போஜியா (கம்போடியா), லாவோஸ், வியட்நாம், புருணை, நேபாளம், திபெட், சீனா, இந்துனேசியா, இந்தியா போன்ற நாடுகளிலும் வெசாக் மிக விமர்சையாக கொண்டாடப் படுகிறது.
கபிலவஸ்து மன்னன் சுத்தோனனின் அருமைப்புதல்வனாக சித்தார்த குமரன் வைகாசிப் பெளர்ணமி தினமொன்றில் அவதரித்தார். மாடமாளிகையில் ஆடம்பரமாக வாழ்ந்த அவர் உலக வாழ்க்கையை கைவிட்டு புத்தரானதும், பின்னர் போதிமரத்தடியில் நிர்வாண மடைந்ததும் வைகாசிப் பெளர்ணமி முக்கியத்துவம் பெறுகிறது.
ஒரு வார காலம் அரச மரத்தடியிலே எதுவித மனித சஞ்சாரமும் இன்றி புத்தர் காலங்கடத்தினார். 62 பேருடன் தொடங்கிய அவரின் போதனைகள் 236 வருடங்களின் பின்னர் அசோக மன்னனின் ஆட்சியிலே உலகம் முழுவதும் பரவியது. புத்தபிரான் மூன்று தடவைகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக மகாவம்சம் கூறுகிறது. தமது தாய்நாட்டுக்கு வெளியில் இலங்கைக்கு மட்டுமே புத்தர் சென்றுள்ளதாக வரலாறு கூறுகிறது.
பகவான் புத்தர் வட இந்தியாவிலுள்ள கபில வஸ்து எனும் நகரில் பிறந்ததும், மனிதர்கள் ஏன் அல்லற்படுகிறார்கள், அவர்களின் துன்பங்கள் எங்கிருந்து வருகின்றன என்ற கேள்விகளுக்கு தனது ஞானத்தின் மூலமாக விடை கண்டுபிடித்ததும், உலகுக்கு சிறந்த வாழ்க்கை நெறியொன்றை காட்டிக் கொடுத்ததும் பெளர்ணமி தினத்தின் மகிமையை உணர்த் துகிறது.
இதன் காரணமாக வெசாக் தினத்தை உலகெங்கிலுமுள்ள மக்கள் முக்கிய விழாவாக கொண்டாடுகின்றனர்.
மனிதனை வெறும் ஆசாபாசங்கள் நிறைந்த உயிராக மட்டும் காணாது, அவனுள் மறைந்து கிடக்கும் சக்தியை வெளிக்கொண்டு வருவதற்கும், அதனூடாக நிரந்தரமான நிம்மதியை தரும் நிர்வாணத்தை அடைவதற்கும் புத்தர் வழிகாட்டிச் சென்றார்.
மனிதனின் பிறப்புக்குக் காரணம் பற்று என்றே கருதிய அவர், பற்றினால் மனிதனின் வாழ்க்கை நிம்மதியற்று துயரத்தில் அவனை புதைப்பதாக அவர் போதித்தார். அனைத்தும் நிரந்தரமானவை என்ற தவறான கருத்தே மனிதனின் துக்கத்திற்கு மூல காரணம் என்று கூறிய அவர், மனிதன் வாழ வேண்டிய வழிமுறைகளையும் காட்டிச் சென்றார்.
புத்த பகவான் மனித நிலையில் இருந்து கொண்டே தர்மத்தை மக்களுக்குப் போதித்தார். அவர் தன்னை தெய்வ அவதாரமாகவோ இறைவனின் அருள்பெற்ற ஞானியாகவோ தம்மை காட்டிக்கொள்ளவில்லை. மனிதனிடமுள்ள விவேகமும் திடசங்கற்பமும் முயற்சியும் அவனை புத்த நிலைக்கு உயர்த்தும் என்பதே அவரின் சித்தாந்தமாக இருந்தது. இதனால் அவர் தனது போதனைகளை மக்கள் வெறுமனே ஏற்றுக்கொள்வதையும் விரும்ப வில்லை.
அவரின் போதனைகள் மிகவும் உயர்ந்ததாக இருந்தன. “மற்றவர்கள் சொல்வதைக் கேட்டோ மரபுவழியாக வந்தது என்பதாலோ, மக்கள் சொல்கிறார்கள் என்பதாலோ எதையும் ஏற்றுக்கொள்ளாதீர்கள்.
தர்க்கத்திற்காகவோ, அனுமானத் திற்காகவோ, சமய நூல்கள் சொல்வதாலோ எதனையும் ஏற்றுக்கொள்ள வேண்டாம். உயர்ந்த கருத்தாகக் காணப்படு கின்றதென்பதற்காகவும், அதனை ஏற்றுக்கொள்ள தயாராகாதீர்கள். ஒரு விஷயம் தீமை தருவதாக இருப்பதாக நீங்கள் உணர்ந்தால் அதனை கைவிடுங்கள். சில விசயங்கள் நன்மை பயப்பனவாக நீங்கள் உணர்ந்தால் அவற்றை ஏற்றுக்கொள்ளுங்கள் என புத்தர் போதித்துள்ளார்.
மனிதனுக்கு சமாதானத்தையும் அமைதியையும் கொடுக்கக் கூடியவற்றையே அவர் போதித்தார். இதனூடாக மனிதனை நிர்வா ணத்துக்கிட்டுச் செல்வதே அவரின் நோக்கமாக இருந்தது.
அவரின் போதனைகள் ஒரு மாதத்திற்கு மட்டும் வழிகாட்டியாக அமைய வில்லை.
 

0 commentaires :

Post a Comment