கிழக்கு மாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தனுக்கும் யுனிசெஃப் பிரதிநிதிகளுக்கும் இடையில் சிநேகபூர்வ சந்திப்பு ஒன்று இன்று (24.05.2010) திருகோணமலை முதலமைச்சர் செயலகத்தில் இடம்பெற்றது. இக்கலந்துரையாடலில் விசேடமாக சிறுவர் கல்வி தொடர்பாக பேசப்பட்டது. அதாவது கிழக்கு மாகாணத்தில் ஆரம்பப்பிரிவு மாணவர்கள் மத்தியில் சமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நோக்கில் பாலர் பாடசாலைகளை அமைப்பது தொடர்பான சட்டமூலம் கிழக்கு மாகாண முதலமைச்சரால் கொண்டுவரப்பட்டு அது நடைமுறைப்படுத்தப்பவும் இருப்பது குறிப்பிடத்தக்கது. இதனடிப்படையில் சிறுவர்களின் நலனில் அதிக அக்கறை செலுத்தும் யுனிசெஃப் அமைப்பானது பாலர் பாடசாலை தொடர்பிலும் அதிக கவனம் செலுத்த வேண்டும் எனவும் முதலமைச்சர் கேட்டுக்கொண்டார்.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த இலங்கை நாட்டிற்கான யுனிசெப் அமைப்பின் பிரதிநிதி பிலிப்பி டோமெலே தாம் நிச்சயமாக சிறுவர் கல்வி தொடர்பில் அதிக அக்கறை கொண்டு செயற்பட்டு வருவதாகவும், முதலமைச்சரின் இத்திட்டத்திற்கு தாம் தொடர்ந்து உதவி அளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
0 commentaires :
Post a Comment