5/21/2010

கனேடிய உயர்ஸ்தானிகர்க்கும் கிழக்கு மாகாண முதலமைச்சருக்கும் இடையில் முக்கிய சந்திப்பு.

img_2661கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தனுக்கும் “கனேடிய உயர்ஸ்தானிகர் வுருஸ்லெவிக்கும் இடையில் விசேட சந்திப்பொன்று கிழக்கு மாகாண முதலமைச்சரின் மட்டக்களப்பு வாசலத்;தலத்தில் இன்று காலை இடம் பெற்றுள்ளது. மேற்படி சந்திப்பில் கிழக்கு மாகாணத்தில் யுத்தத்தினாலும் வன்செயல்களாலும் பாதிக்கப்பட்டுள்ள விசேடமாக கணவனை இழந்த பெண்களின் வாழ்வாதாரம் குறித்து விசேட கவனம் செலுத்தப்படட்;து. அத்தோடு குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிக வசதிகளுடன் கூடிய ஓர் மிகப் பெரிய தொகுப்பு நிலையம் ஒன்றை உருவாக்கவதற்கும் முதலமைச்சர் சந்திரகாந்தன் உயர்ஸ்தானிகரிடம் கேட்டிருந்தார். இது தொடர்பில் தாம் பேசியவுடன் கருத்துத் தெரிவித்திருந்தும் , அத்தொடு மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுத்துச் செல்வதற்கான திட்டங்கள் தம்மிடம் உள்ளதையும் உயர்ஸ்தானிகர் குறிப்பிட்டார். இச்சந்தர்ப்பத்தில் கனேடிய உயர்ஸ்தானிகரின் பாரியாரும் கலந்து கொண்டமை விசேட அம்சமாகும்.

0 commentaires :

Post a Comment