தாய்லாந்தில் அரசுக் கெதிரான ஆர்ப்பாட்டத்திலீடுபட்ட செஞ் சட்டை அணியினர் ஆர்ப்பாட் டத்தைக் கைவிட்டனர். ஆதர வாளர்கள் அனைவரையும் ஆர்ப் பாட்டத்தைக் கைவிட்டு விட்டு பொது மைதானத்தில் ஒன்று கூடுமாறு செஞ்சட்டை அணியின் முக்கிய தலைவர்கள் அழைப்பு விடுத்தனர். இதனால் நீண்ட நாள் முற்றுகையைக் கைவிட்ட செஞ் சட்டை அணியினர் (முன்னாள் பிரதமர் தக்ஷின் ஆதரவாளர்கள்) மைதானத்தில் ஒன்று கூடினர். அரசு பாரிய தாக்குதலுக்குத் தயாரான தால் தாங்கள் மக்களின் உயிர் களைப் பாதுகாக்கும் பொருட்டு ஆர்ப்பாட்டத்தைக் கைவிட்டதாக செஞ்சட்டையணியினர் தெரிவித் தனர். நான்கு லொறிகள் கவச வாகனங்களில் இராணுவத்தினர் ஆர்ப்பாட்டக்காரர்களை நோக்கி நெருங்கி வந்தனர். சில இராணுவ வீரர்கள் கால்நடையாக வந்து ஆர்ப்பாட்டக்காரர்களை மிக அண்மித்து தாக்குதல் நடத்தத் தயாராகினர். தடை வேலிகள் முட்கம்பிகளைப் படையினர் அகற்றி வீசினர். இதையடுத்து சுமார் ஐயாயிரம் செஞ்சட்டை ஆர்ப் பாட்டக்காரர்கள் தங்கள் நிலைகளி லிருந்து பின்வாங்கினர். அரசாங்கம் மேற்கொண்ட இரா ணுவ நகர்வுகள் வெற்றியளித்ததாக தாய்லாந்து அரசாங்கம் உத்தியோக பூர்வமாக அறிவித்தது. சுமார் ஆறு வாரங்களாக முன்னாள் பிரதமரான தக்ஷின் ஆதரவாளர்கள் அரசுக் கெதிரான ஆர்ப்பாட்டத்திலீடுபட்டனர். பிர தமர் அபிஷித் வெஜ்ஜாஜி தலை மையிலான “அரசாங்கத்தைப் பதவி விலகுமாறு கோரியே இவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்தனர். ஆறு வாரங்களாக நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் 38 பேர் பலியாகினர். நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர். |
5/20/2010
| 0 commentaires |
0 commentaires :
Post a Comment