5/14/2010

கிழக்கு மாகாண சபையினால் முன்னெடுக்கப்படுகின்ற அபிவிருத்திகள் தொடர்பான விசேட கலந்துரையாடல்.

கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சர், அமைச்சர்களினால் முன்னெடுக்கப்படுகின்ற அபிவிருத்தி திட்டங்கள் குறித்த ஆய்வுக் கூட்டம் இன்று கிழக்கு மாகாண முதலமைச்சர் செயலகத்தில் முதலமைச்சர் தலைமையில் இடம்பெற்றது.
விசேடமாக மேற்படி அபிவிருத்தி திட்டங்களை அமுல்படுத்துகின்ற திணைக்களத் தலைவர்கள் உள்ளுராட்சி திணைக்கள அதிகாரிகளுக்கிடையே மேற்படி கலந்துரையாடல் இடம்பெற்றது. கல்வி, நீர்ப்பாசனம், வீதி அபிவிருத்தி, விளையாட்டு, சமூக அபிவிருத்தி போன்ற துறைகளுக்கான அபிவிருத்தி திட்டங்கள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இது தொடர்பாகவும் குறித்த காலத்திற்குள் செய்து முடிப்பது தொடர்பாகவும் ஆராயப்பட்டது.

0 commentaires :

Post a Comment