5/19/2010

தமிழ் தேசிய கூட்டமைப்பில் ஒருவரேனும் அபிவிருத்திக்காக பாடுபடுபவராயின் எமது மக்கள் நன்மையடைவர்.

img_2356
காலங்காலமாக ஒரே பாணியில் அரசியல் நடாத்தும் தமிழ் தேசிய கூட்டமைப்பினரின் மக்களின் அபிவிருத்தியில் அக்கறை காட்டுவார்களாக இருந்தால் எமது மக்கள் உண்மையில் நன்மை அடைவார்கள் என பட்டிருப்பு புளு டைமன் விளையாட்டு கழகத்தின் 23வது ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு நடாத்திய விளையாட்டு நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு கிழக்கு மகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் குறிப்பிட்டார். அவர் தொடர்ந்து பேசுகையில் இப்பிரதேசத்தில் இருக்கின்ற அதிகமான மக்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பினருக்கே வாக்களித்தீர்க்ள் இதகால் உங்களுக்கு ஏற்படப்போகும் அனுகூலங்கள் என்ன? எதுவுமே இல்லை தமிழ் தேசிய கூட்டமைப்பினர்களால் பாராளுமன்றத்தில் கூக்குரல் இடமாத்திரமே முடியும் மாறாக எமது மக்களின் அபிவிருத்திகள் மற்றும் ஏனைய சமூகம் சார்ந்த பிரச்சினைகள் தொடர்பாக அவர்கள் எதுவுமே குறிப்பிட முடியாது, காரணம் தங்களால் அபிவிருத்திப் பணிகளை முன்னெடுக்க முடியாது என்பதுதான் உண்மை எனவும் குறிப்பிட்டார்.
மேலும் குறிப்பிடுகையில் வன்னியில் பல்லாயிரக்கணக்கான மக்களை கொன்று குவிக்கப்பட்டார்கள் அதற்காக இன்று துக்க தினம் அனுஷ்ட்டிக்கக் கோருகின்றார்கள். எமது மக்களின் இறப்பு நாளை நாம் நினைவு கூருவதனை நான் வரவேற்கின்றேன். ஆனால் அப்படுகொலைகள் நிகழ்வதற்கு காரணம் யார் என நாம் பார்க்க வேண்டும் அதாவது கிளிநொச்சியினை இராணுவத்தினர் பிடித்த உடனே அனைவருக்கும் தெரியும் அடுத்தது என்ன நடக்கும் என ஆனால் இத்தேசிய கூட்டமைப்பினர் எமது அப்பாவி பொது மக்கள் கொல்லப்படுவதனையும் காயப்படுவதனையும் புகைப்படம் வீடிNயுh எடுத்து வெளிநாடுகளுக்கு அனுப்பி அதனூடாக மீண்டும் பயங்கரவாத போராட்டத்தினை முன்னெடுப்பதற்கு முயற்சி செய்தார்கள் இவ் மூர்க்கத்தனமான தமிழ் தேசிய கூட்டமைப்பினரின் முயற்சியானது பயனளிக்கிவல்லை இதனால் மீண்டும் எமது தமிழ் அப்பாவி பொது மக்கள் கொண்று குவிக்கப்பட்டார்கள். அவர்கள் நினைத்திருந்தால் அப்போது ஜனாதிபதியுடன் பேசி ஓர் முடிவுக்கு வந்திரக்க முடியும் ஆனால் அவர்கள் அதனைச் செய்ய வில்லை இதனால்தான் இன்று நாம் துக்க தினம் அனுஷ்ட்டிக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கின்றது. காலம் காலமாக எமது மக்களின் விடுதலை என்று எமது தமிழ் சமூகத்தினை பின்னோக்கியே இவர் நகர்த்தியிருக்கின்றார் ஏனைய முஸ்லிம் சகோதரர்களை பார்த்தால் அவர்கள் எவ்வளவோ தமது சமூகத்திற்காக செய்திருக்கின்றார்கள் அவர்களோடு ஒப்பிடுகையில் இவர்கள் எங்கேயோ இருக்கின்றார்கள்.
எனவே தற்போது பாராளுமன்றத்திற்குத் தெரிவாகி இருக்கின்ற தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குறிப்பாக கிழக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்கள் பத்திரிகைகளுக்கு அறிக்கை கொடுப்பது மாத்திரம் கடமை என நினைக்காது அவ் அறிக்கையில் குறிப்பிடுகின்ற விடயங்களைச் செயற்படுத்த செயலில் இறங்க வேண்டும் எனவும் நாங்கள் அவர்களிடம் வேண்டுகோள் விடுக்கின்றோம். வெறுமனே எமது மக்களின் வாக்குகளை பெற்றுவிட்டு தொடர்ந்தும் வீர வசனங்களை பேசி எமது மக்களையும் வீராப்புக் கொள்ள வைக்காது தாங்கள் இயலாவிட்டாலும் ஓரளவேனும் அபிவிருத்தி முயற்சிகளையேனும் மெற்கொள்ள வேண்டும் இது விடயத்தில் வாக்களித்த மக்கள் மிகவும் ஆழ்ந்து சிந்திக்க வேண்டும் இனிவரும் காலங்களில் எமக்கு உரிமை உரிமை என மட்டும் நமது வாழ் நாட்களை கடத்தாது. உரிமையுடன் சேர்ந்து அபிவிருத்தியையும் பெற எத்தனிக்க வேண்டும் அதற்கான அரசியல் இருப்பினை எமது மக்கள் எமது கட்சிக்கு எதிர்வரும் காலங்களில் வழங்க வேண்டும். அப்போது நாங்கள் அரசோடு இணக்கப்பாட்டுடன் கூடிய ஓர் தீர்வு பற்றி பேசலாம் எமது மக்களின் உண்மையான உரிமைகள் மற்றும் அபிவிருத்தி பற்றி நாம் தெளிவாக பேசலாம் எனவே அனைவரும் இன்றிலிருந்து மிகவும் தூர நோக்கோடு சிந்தித்து எதிர்கால அரசில் நகர்வுகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் அவர் தனது உரையில் குறிப்பிட்டிருந்தார். பட்டிருப்பு வுளு டைமன் விளையாட்டக் கழகத்தின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்விற்கு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பூ.பிரசாந்தன் மன்முனை தென் எருவில் பற்றி பிரதேச சபை தவிசாளர் சிவகுணம் மன்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் எஸ் அருள்ராஜா கிராம அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

0 commentaires :

Post a Comment