இந்தியாவில் பயணிகள் பேருந்து ஒன்றில் மாவோயிய கிளர்ச்சிக்காரர்கள் நடத்தியதாகச் சந்தேகிக்கப்படும் ஒரு கண்ணி வெடித் தாக்குதலில் பொலிசார், பொதுமக்கள் என குறைந்தது முப்பத்தைந்து பேர் கொல்லப்பட்டுள்ளனர். கொல்லப்பட்டவர்களில் 11 பேர் பொலிசார் என்று தெரிகிறது. சத்தீஸ்கர் மாநிலம் தாண்டேவாடா பகுதியில் இந்தத் தாக்குதல் நடந்துள்ளது. கடந்த சில மாதங்களாக மாவோயிஸ்டுகள் அரசாங்கப் படைகள் இடையில் கடும் சண்டைகள் நடந்துவருகின்ற இடம் இது. இதே பகுதியில் ஒரு மாதத்துக்கு சற்று முன்னர் இந்திய ரிசர்வ் பொலிசார் மீது மாவோயிவாதிகள் மீது நடத்திய அதிரடித் தாக்குதலில் எழுபதுக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டிருந்தனர். | | |||||||||||
| ||||||||||||
|
5/18/2010
| 0 commentaires |
0 commentaires :
Post a Comment