| |||||||||||||
இலங்கையிலிருந்து ஆஸ்திரேலியாவிற்கு கடல் வழியாய் சட்டவிரோதப் பயணம் செய்வதற்கு எதிராக இலங்கை பத்திரிகைகளில் ஆஸ்திரேலிய அரசாங்கம் அறிவித்தல்களை வெளியிட்டு வருகின்றது. சட்டவிரோதக் குடியேற்றத்துக்கு எதிராக எச்சரிக்கை விடுக்கும் விதமாகவும், மக்களுக்கு இது தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் இந்த பத்திரிகை அறிவித்தல்கள் அமைந்துள்ளன. இலங்கையர்களின் புகலிடக் கோரிக்கைகள் பரிசீலிக்கப்படுவதை ஆஸ்திரேலியா இடைநிறுத்தியுள்ளது இந்த அறிவித்தல்களில் விளக்கப்பட்டுள்ளது. "முறையற்ற விதத்தில் படகு மூலம் ஆஸ்திரேலியாவிற்கு செல்ல முயற்சித்து உயிரைப் பணயம் வைக்க வேண்டாம், மனிதர்களைக் கடத்துபவர்களினால் தப்பான பாதையில் செல்ல வேண்டாம்." என்றும் இதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. "பயனற்ற பயணத்திற்காக பணத்தை வீணாக்க வேண்டாம்" என்றும் இந்த அறிவித்தல்களில் ஆஸ்திரேலிய அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது. பொருளாதார இழப்பு, உயிரிழப்பு, பிற நாடொன்றில் தடுத்துவைப்பு, பிற நாடொன்றில் நிர்க்கதியாகுதல், நாடு கடத்தப்படுதல் போன்ற நிலைகளை மக்களுக்கு எடுத்துரைக்கும் வகையில் அறிவித்தல்கள் வெளியாகி வருகின்றன. |
5/30/2010
| 0 commentaires |
0 commentaires :
Post a Comment